எலுமிச்சை ஜூஸ் vs இளநீர் : இது இரண்டுல எது அதிக நன்மை தரும்?
இளநீர் அல்லது எலுமிச்சை ஜூஸ் இவை இரண்டில் எது அதிக நன்மை பயக்கும் என்று இந்த பதிவில் காணலாம்.

Is lemon Juice better than coconut water?
உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்வது ரொம்பவே முக்கியம். இல்லையெனில் நீர் இழப்பு பிரச்சனை ஏற்படும். உடல் நீரேற்றத்துடன் இருந்ததால் தான் உடலின் செயல்பாடுகள் சிறப்பாக செயல்படும் மற்றும் உடலும் வறண்டு போகாமல் இருக்கும். உடல் வெப்பநிலையும் பராமரிக்கப்படும். உடலை நீரேற்றுடன் வைத்திருக்க பல தண்ணீர் தவிர இளநீர் அல்லது லெமன் ஜூஸ் குடிப்பார்கள். இருந்தபோதிலும் இவை இரண்டில் எது அதிக நன்மை பயக்கும் என்று சந்தேகம் பலருக்கும் உள்ளன. அதற்குரிய பதிலை இந்த பதிவில் இப்போது பார்க்கலாம்.
லெமன் ஜூஸ்
லெமன் ஜூஸில் வைட்டமின் சி நிறைந்துள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமில்லாமல் உடல் வெப்பத்தால் பாதிக்கப்படுவதையும் தடுக்க உதவுகிறது. இதில் குறைந்த கலோரிகள் மற்றும் தாதுக்கள் உள்ளதால் செரிமானம் மேம்படும். காலையில் வெறும் வயிற்றில் இந்த பானத்தை குடித்து வந்தால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்படும்.
இளநீர்
இளநீர் ஒரு இயற்கையான சூப்பர் பானமாக கருதப்படுகிறது இதில் எலெக்ட்ரோலைட்டுகள் அதிகமாக இருப்பதால், இது உடலில் நீரேற்றுடன் வைத்துக்கொள்ளும். உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கும் பண்புகள் இதில் உள்ளன. மேலும் இதில் பொட்டாசியம், மாங்கனீசு, வைட்டமின் பி, சோடியம் போன்றவை நிறைந்துள்ளன. அவை நீர் இழப்புக்கு நன்மை பயக்கும்.
வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளுக்கு இளநீர் குடிப்பது ரொம்பவே நல்லது என்று பெரியவர்கள் சொல்வதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இது எளிதில் ஜீரணமாக கூடியது என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடிக்க உகந்த பானமாகும்.
எது சிறந்தது?
- இந்த இரண்டு பானங்களிலும் ஊட்டச்சத்துக்கள் அடிப்படையில் சிறிய வித்தியாசம் மட்டுமே உள்ளன என்று நிபுணர்கள் சொல்லுகின்றன. இளநீரில் தாதுக்கள் அதிகமாக உள்ளதால், இது கடுமையான வெயிலில் அதிக நேரம் செலவிடுபவர்கள் மற்றும் வெப்ப பாதத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு ரொம்பவே நல்லது என்று சொல்லப்படுகிறது.
- லெமன் ஜூஸ் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஈரப்பதத்தை வழங்கும். மேலும் உடலை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவும்.
- எனவே உங்களது உடல்நல தேவைகளைப் பொறுத்து நீங்கள் இவை இரண்டில் எது வேண்டுமானாலும் குடிக்கலாம். உடற்பயிற்சி செய்த பிறகு இளநீர் குடிப்பது சிறந்த தேர்வாக இருக்கும். அதே சமயம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடலில் நீரேற்றமாக வைத்துக் கொள்ளவும் நினைத்தால் எலுமிச்சை ஜூஸ் குடிப்பது சிறந்ததாகும்.