- Home
- Lifestyle
- Breast Pumping vs Breastfeeding : பிரெஸ்ட் பம்ப் யூஸ் பண்ணலாமா? தாய்ப்பால் ஊட்டுறதுதான் பெஸ்டா? குழந்தைக்கு இந்த விஷயம் முக்கியம்
Breast Pumping vs Breastfeeding : பிரெஸ்ட் பம்ப் யூஸ் பண்ணலாமா? தாய்ப்பால் ஊட்டுறதுதான் பெஸ்டா? குழந்தைக்கு இந்த விஷயம் முக்கியம்
பாலூட்டும் தாய்மார்கள் பிரெஸ்ட் பம்ப் செய்து குழந்தைக்கு பாலூட்டுவது நல்லதா? நேரடியாக கொடுக்க வேண்டுமா? என இந்தப் பதிவில் காணலாம்.

Breast Pumping vs Breastfeeding
குழந்தைக்கு தாய்ப்பால் தான் அருமருந்து. அவர்களுக்கு நோயெதிர்ப்பு சக்தியை அளிக்கும் வரப் பிரசாதம். பிறந்த குழந்தைக்கு கண்டிப்பாக முதல் ஆறு மாதத்திற்கு தாய்ப்பால் ஊட்ட வேண்டும். தாய்ப்பால் ஊட்டுவது குழந்தைக்கு மட்டுமல்ல தாய்க்குமே நல்லது தான். சில நேரங்களில் தாய்மார்களால் நேரடியாக தாய்ப்பால் ஊட்ட முடியாது. வேலைக்கு செல்வது, வீட்டு வேலைகள் என பல காரணங்கள் உண்டு. அவர்கள் பிரெஸ்ட் பம்ப் மூலம் பாலை எடுத்து சேமித்து வைத்து கொடுப்பார்கள். இந்தப் பதிவில் பாலூட்டும் தாய்மார்கள் பிரெஸ்ட் பம்ப் செய்து குழந்தைக்கு பாலூட்டுவது நல்லதா? நேரடியாக கொடுக்க வேண்டுமா? நன்மை, தீமைகளை காணலாம்.
தாய்ப்பால் ஊட்டுதல்
பிறந்த குழந்தைகளுக்கு தேவைப்படும் ஊட்டச்சத்துக்களை நிவர்த்தி செய்யும் வகையில் தாய்ப்பால் உற்பத்தி செய்யப்படுகிறது. குழந்தைகள் வளரும் போது அதற்கேற்றவாறு அதன் கலவையும் மாறுகிறது. தாய்ப்பாலில் இருக்கும் ஆன்டிபாடிகள் தொற்றுகள், ஒவ்வாமையிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க உதவுகிறது. தாய்ப்பால் நேரடியாக ஊட்டுவதால் குழந்தைக்கும், தாய்க்கும் இடையே நல்ல பிணைப்பு ஏற்படுகிறது. தாய்ப்பாலை நேரடியாக கொடுப்பது ப்ரெஷாக குழந்தைக்கு கிடைக்கும். தாயின் சருமத்தை குழந்தை வருடுவதால் உணர்ச்சிரீதியான பிணைப்பு ஏற்படும்.
பாதகங்கள்
தாய்ப்பாலை நேரடியாக ஊட்டுவதில் பல நன்மைகள் இருந்தாலும், எல்லா பெண்களுக்கும் அது சரி வராது. சில பெண்களுக்கு சவாலானதாக இருக்கும். குழந்தை பால் குடிக்கும்போது வலி மற்றும் சில சிரமங்களை அனுபவிக்கிறார்கள். அதிக நேரம் எடுப்பதாம் மற்ற வேலைகளை செய்யவே முடியாது. வீட்டில் மற்ற வேலைகளை செய்ய ஆதரவு இல்லாத பெண்களுக்கு அடிக்கடி பாலூட்டுதல் மிகப்பெரிய அழுத்ததைக் கொடுக்கலாம்.
பிரெஸ்ட் பம்ப் நன்மைகள்:
இந்த முறையில் பாலை பம்ப் செய்து பின் குழந்தைக்கு தேவைப்படும்போது உணவளிப்பதால் தாய் கொஞ்சம் ஓய்வெடுக்க முடியும். வேலைக்கு கூட சென்று வரலாம். மற்றவர்கள் குழந்தைக்கு உணவளிக்க இது ஏற்ற வழி. தாயுடன் பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்ளலாம். இந்த முறையில் தாய்மார்கள் பால் உற்பத்தியைக் கண்காணிக்க முடியும்.
பாதகங்கள்:
வெறுமனே பால் எடுத்து வைக்கும் சாதனம் என்பதால் தாய்க்கும் குழந்தைக்கும் உணர்ச்சிரீதியான பிணைப்பை வழங்காது. பால் எடுக்கவும், அதை தூய்மையாக்கவும் நேரம் எடுக்கும். பொறுமையாக செய்ய வேண்டும். சுத்தத்தில் கவனமாக இருக்க வேண்டும். இப்படி செயற்கை முறையில் பால் எடுப்பது சில நேரங்களில் பால் உற்பத்தியை அதிகமாக தூண்டிவிடும். அதை சமாளிப்பது தாய்க்கு சற்று சிரமமாக இருக்கலாம்.
என்ன செய்ய வேண்டும்?
குழந்தைக்கு ஊட்டச்சத்து மிகுந்த தாய்ப்பால் கிடைப்பது அவசியம் ஆகும். தாய்ப்பால் ஊட்டுவதே குழந்தைக்கு மிகுந்த பயனளிக்கும் என்பதால் எந்த வழியில், எப்படி வழங்குகிறோம் என்பதை விட தாய்ப்பால் ஊட்டுவதில் தான் கவனம் செலுத்தவேண்டும். தனிப்பட்ட விஷயங்களை பொறுத்து தாய்க்கும், சேய்க்கும் வசதியான முறையில் பாலூட்டலாம்.