கடினமான போர்வையை தண்ணீர் பயன்படுத்தாமல் துவைக்க செம்ம ஐடியா.. கையும் வலிக்காது, ஒரு கிருமி கூட இருக்காது..
போர்வைகள், கம்பளி ஆடைகளை சுத்தம் செய்வதற்கான எளிய வழிகளை இங்கு காணலாம்.
கடுமையான குளிர்காலம் இப்போது முடிந்துவிட்டது. வசந்த காலம் வர தொடங்கிவிட்டது. பலர் கம்பளி ஆடைகள், போர்வைகளை துவைத்து மடித்து வைக்க ஆரம்பித்திருப்பார்கள். சிலர் போர்வையை துவைக்க வாஷிங் மிஷனை தேர்வு செய்வார்கள். ஆனால் எல்லா வீடுகளிலும் அதற்கு வாய்ப்பில்லை.
சிலர் ஆறு, குளங்களுக்கு படையெடுப்பர். சிலர் அதையெல்லாம் தள்ளி வைத்துவிட்டு உலர் சுத்தம் செய்கின்றனர். எது எப்படியோ, போர்வைகளை சுத்தம் செய்வது கட்டாயமாகிவிட்டது. எளிமையான வழிகளில் போர்வயை சுத்தம் செய்வதை குறித்து இங்கு காணலாம்.
போர்வையை தண்ணீர் இல்லாமல் எப்படி சுத்தம் செய்வது?
போர்வையை கையால் துவைத்து சுத்தம் செய்வதில் சிரமம் இருந்தால், நீங்கள் சில எளிய தந்திரங்களை பின்பற்றலாம். இதற்காக அதிக முயற்சி செய்ய கூட தேவையில்லை. இதனால் பணத்தையும் மிச்சம் செய்யலாம். தடிமனான கயிற்றின் உதவியுடன் போர்வையை வெயிலில் உலர வைப்பதே போர்வையை சுத்தம் செய்வதற்கான சிறந்த வழி. இப்படி செய்யும்போது, போர்வையில் இருக்கும் கெட்ட வாசனை, கிருமிகள் அடியோடு விலகும். அத்துடன் தூசி, ஈரப்பதத்தையும் கூட நீக்குவதால் இலகுவாக மாறும். போர்வையை உதறினால் போதும்.
இதையும் படிங்க: கைக்குழந்தை ஏங்கி ஏங்கி அழுகிறதா? ரொம்ப நேரம் அழுகையை நிறுத்தலன்னா இதுதான் காரணம்.. என்ன செய்யணும் தெரியுமா?
போர்வையை மடித்து வைக்கும் சில வாரங்களுக்கு முன்பு சூரிய ஒளியைக் காட்டத் தொடங்குங்கள். இந்த முறையை தினசரி கடைபிடித்தால், பாக்டீரியாக்கள் போர்வையில் சேராது, பின்னர் அதை தண்ணீரில் துவைக்காமலே பெட்டியில் வைப்பது எளிது.
பல நூற்றாண்டுகள் பின்பற்றும் பழமையான செய்முறையை போர்வையை சுத்தம் செய்ய பயன்படுத்தலாம். நீங்கள் போர்வையை முற்றத்தில் விரித்து, தடிமனான குச்சி அல்லது கட்டையால் வேகமாக அடிக்கலாம். அதிலிருந்து தூசி மற்றும் அழுக்கு எளிதில் அகற்றப்படும்.
போர்வை அழுக்காகாமல் இருக்க வேண்டும் என நீங்கள் நினைத்தால், அதை மூடி வைக்க நல்ல தரமான கவர்களை வாங்கி அதில் போர்வையை வைத்து கொள்ளலாம். இந்த கவர் சுத்தம் செய்ய எளிதானது. இந்த எளிய முறைகளை பின்பற்றி போர்வையை எளிதில் சுத்தம் செய்யலாம்.
இதையும் படிங்க: இத்தனை கோடியா சித்தார்த் மல்ஹோத்ரா - கியாரா அத்வானி கல்யாண செலவு? கியாரா திருமண ஆடை வடிவமைக்கவே 24 வாரம் ஆச்சு