கைக்குழந்தை ஏங்கி ஏங்கி அழுகிறதா? ரொம்ப நேரம் அழுகையை நிறுத்தலன்னா இதுதான் காரணம்.. என்ன செய்யணும் தெரியுமா?
Types of baby cries: குழந்தைகள் தங்களின் உணர்வுகளை வார்த்தைகளில் விளக்கமுடியாது. அதை தங்களுடைய கண்ணீரிலும், புன்னகையிலும் தான் வெளிப்படுத்துவார்கள்.
குழந்தைகளின் புத்திக்கூர்மை அவர்களின் தேவைகளைச் சொல்வதற்காக அழுகையை தூண்டுகிறது. நீங்கள் கவனித்து பார்த்தால், ஒவ்வொரு அழுகையும் வெவ்வேறு காரணங்களை வெளிப்படுத்தும். குழந்தைகள் பொதுவாக ஒரு நாளைக்கு 2 முதல் 3 மணி நேரம் அழுகிறார்கள். சில நேரங்களில் குழந்தைகள் வெளிப்படையான காரணமின்றி அழுகிறார்கள். நீங்கள் புதிய பெற்றோராக இருந்து, உங்கள் குழந்தையின் அழுகை மொழியை அறிய முயற்சி செய்கிறீர்கள் என்றால் நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்.
பசி அழுகை...
பிறந்த குழந்தைகளை பொறுத்தவரை முதல் மூன்று மாதங்களில், ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு முறை அவர்களுக்கு உணவளிக்க வேண்டும். அவர்கள் பசி எடுக்கும் போது, குறைந்த சத்தத்துடன் கவனமாகக் கேட்டால், அழுகையின் ஆரம்பம் “நே” என்று கூட ஒலிக்கலாம்.
இப்படி சத்தம் போட்டால், அவர்கள் பசியுடன் இருக்கிறார்கள் என்று அர்த்தம். அவர்களுக்கு தாய்மார் பால் ஊட்டலாம். அழுகையை குறைத்துவிடுவார்கள். சில நேரங்களில் குழந்தைகளுக்கு பசி எடுக்காவிட்டாலும், அவர்களுக்கு உறிஞ்சுவதற்கு ஏதாவது தேவைப்படுகிறது. அதனால் தான் அழுகிறார்கள்.
இதையும் படிங்க: மாசி சங்கடஹர சதுர்த்தி.. இந்த நேரத்தில் புது தாலிக்கயிறு மாற்றினால் தீர்க்க சுமங்கலி வரம்.. விலகும் ஓடும் சனி!
தூங்கத்திற்கான அழுகை..
குழந்தை பிறந்து ஆறு மாதங்கள் ஆகும் வரை, அவர்களாகவே தூங்குவது கடினம். அதனால் குழந்தைகள் தூங்க பெற்றோர் பழக்கப்படுத்த வேண்டும். நீங்கள் குறிப்பிட்ட நேரத்தில் தூங்க வைத்தால் அவர்களுடைய நினைவில் அது பழகிவிடும். அவர்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது இந்த தூக்க சுழற்சியில் மாற்றம் வரும். சில நேரங்களில் விளையாடிக் கொண்டே இருப்பார்கள். அப்போது அவர்கள் தூங்குவதில் சிக்கலை சந்திக்க நேரிடும். குழந்தை தூங்குவதற்காக அழுகிறது என்றால், 'ஓவ்' என்ற சத்தத்துடன் கொட்டாவி விடுவது போல் வீறி அழும். இப்படி அழுகிறார்கள் எனில் கொஞ்ச நேரம் அழட்டும். ஆய்வின் படி, குழந்தை நீண்ட நேரம் அழுவதால் வேகமாக தூங்கவும், நீண்ட நேரம் தூங்கவும் கற்றுக் கொள்ள உதவுகிறது. வெளிச்சம் குறைவான அறையில் குழந்தையுடன் அமர்ந்து, அவர்களை தூங்க வைக்கலாம். குழந்தையை அமைதிப்படுத்த சில மென்மையான தாலாட்டுப் பாடலை பாடுங்கள். குழந்தை மிகவும் சோர்வாக இருந்தாலும், தூங்க மறுத்தால், மிகவும் மென்மையான போர்வையில் போர்த்தி தூங்க வைக்க முயலவும். இது தாயின் கருப்பையைப் பிரதிபலிக்கிறது. இடத்தை மாற்றுவதும் உதவக்கூடும்.
இந்த அழுகை வந்தால் ஜாக்கிரதை
புதிதாகப் பிறந்த குழந்தைகள் ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று மணி நேரம் அழுவது இயல்பானது என ஆய்வுகள் கூறுகின்றன. ஒரு குழந்தை தினமும் 3.5 மணி நேரத்திற்கு மேல் அழ நேரிட்டால், மருத்துவ ஆலோசனை செய்யுங்கள். உங்களுக்கு தெரியுமா? குழந்தை பெருங்குடல் வலியால் அவதிப்பட்டால், வாரத்திற்கு மூன்று முறை, மூன்று மணி நேரத்திற்கும் மேலாக அழுவார்கள். இந்த அழுகை திடீரெனவும், அதிக ஒலியுடனும் இருக்கும்.
குழந்தை நோய்வாய்பட்டதால் அழுகுகிறார்கள் என்றால், முகம் சிவப்பாக மாறுவது, வயிறு உப்புவது, கால்களை உதைப்பது, வாயு பிரச்சனை, நெஞ்செரிச்சல் ஆகியவை வெளிப்படும். சில குழந்தைகள் காற்று விழுங்கியதால் அவதிப்படுவார்கள். ஒரு பெற்றோராக, அவர்களின் அசௌகரியத்தை குறைக்க முயற்சி செய்யுங்கள்.
அழுகையை தடுக்க என்ன செய்யலாம்?
குழந்தைகளை தோளில் வைத்து, அவர்களின் முதுகில் தட்டவும், இது வயிற்றின் கீழ் உள்ள வாயுவை குசு (Fart) அல்லது ஏப்பம் மூலம் வெளியிட உதவும். இது வாயு பிரச்சனைகளுக்கான தீர்வு. அதன் பிறகும் அவதிப்பட்டால் மருத்துவரை சென்று பாருங்கள்.
இதையும் படிங்க: அம்மாவிடம் தாய்ப்பால் குடிக்கும் மணமகன்.. இந்த வயதிலும் இப்படியா? விஷயம் தெரிந்ததும் மணமகள் செய்த காரியம்..