MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • ஃபேஷன்
  • இத்தனை கோடியா சித்தார்த் மல்ஹோத்ரா - கியாரா அத்வானி கல்யாண செலவு? கியாரா திருமண ஆடை வடிவமைக்கவே 24 வாரம் ஆச்சு

இத்தனை கோடியா சித்தார்த் மல்ஹோத்ரா - கியாரா அத்வானி கல்யாண செலவு? கியாரா திருமண ஆடை வடிவமைக்கவே 24 வாரம் ஆச்சு

அண்மையில் திருமணம் செய்து கொண்ட கியாரா அத்வானியின் ஆடைகள், மற்ற விவரம்..

2 Min read
maria pani
Published : Feb 23 2023, 06:38 PM IST| Updated : Feb 23 2023, 06:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

பாலிவுட்டில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த சித்தார்த்த் மல்கோத்ராவும், கியாரா அத்வானியும், பல ஆண்டுகாலம் காதலில் திளைத்தவர்கள். இவர்கள் இருவரது காதலுக்கும் குடும்பத்தினர் பச்சை கொடி அசைக்க, கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி கியாரா அத்வானியை குடும்பத்தினர் முன்னிலையில் கரம்பிடித்தார் சித்தார்த் மல்கோத்ரா. 

26

இவர்களது திருமணம் கோலாகலமாக ஜெய்ப்பூரில் இருக்கும் அரண்மனையில் நடைபெற்றது. இந்த வைபவத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர். சித்தார்த் - கியாராவின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் நிரம்பி வழிந்தன. அதில் கியாராவின் உடைகள் தான் அதிகம் பேசப்பட்டது. கண்ணை கவரும் வகையில் அவர் அணிந்திருந்த அந்த ஆடைகளின் வடிவமைப்பு குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளன. 

36

கியாரா தனது சங்கீத் நிகழ்வில் அணிந்திருந்த ஒம்ப்ரே (ombre) லெஹங்கா அட்டகாசமான தோற்றத்தில் இருந்தது. இதனை மணீஷ் மல்ஹோத்ரா பிரத்யேகமாக வடிவமைத்திருந்தார். ஜொலிக்கும் அதன் தோற்றம் சாதாரணமாக வந்துவிடவில்லை. கிட்டத்தட்ட 98 ஆயிரம் ஸ்வரோவ்ஸ்கி படிகங்கள் அந்த லெஹங்காவில் வைத்து தைக்கப்பட்டிருந்தன. 

46

இந்த லெஹங்கா குறித்து டிசைனர் மணீஷ் மல்ஹோத்ரா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் பகிர்ந்து கொண்டார். கியாரா அத்வானி அணிந்திருந்த அந்த லெஹங்காவை முடிக்க சுமார் 4 ஆயிரம் மணிநேரம் (24 வாரங்கள்) எடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். சித்தார்த்தின் ஆடையும் அதற்கு சளைத்தது அல்ல. அவருடைய ஷர்வானி கூட படிகங்களால் ஆன வேலைப்பாடுகளுடன் தான் வடிவமைக்கப்பட்டிருந்தது. 

56

கியாரா அத்வானியின் அழகான தோற்றத்தை முழுமையாக்க, மணீஷ் மல்ஹோத்ரா லெஹங்காவுடன், சில நகைகளையும் தேர்ந்தெடுத்துள்ளார். கியாரா அணிந்திருந்த நெக்லஸ் மிக சிறப்பு வாய்ந்த ரூபி வைரங்களால் ஆனது. 

66
Image: Kiara Advani / Instagram

Image: Kiara Advani / Instagram

கியாரா அத்வானி- சித்தார்த் திருமண செலவு மட்டும் 20 லட்ச ரூபாய் முதல் 2 கோடி வரை இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தன் காதல் மனைவி கியாராவிற்காக மும்பையில் ரூ.70 கோடி மதிப்பில் கடற்கரையோரம் பிரம்மாண்ட பங்களாவை சித்தார்த் கட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: கோடீஸ்வரர் மகள் என்றால் கேட்கவா வேணும்.. ரூ.90 கோடி மதிப்பில் லெஹங்கா உடுத்தி இஷா அம்பானி செய்த காரியம்..

இதையும் படிங்க: கடைசியாக சென்ற சிவன் கோயில் கருவறையில் மயில்சாமியின் உருவப்படம்.. கருவறையில் வைக்க என்ன காரணம்?

About the Author

MP
maria pani

Latest Videos
Recommended Stories
Recommended image1
Men's Fashion Tips : ஆண்கள் 'இப்படி' ட்ரெஸ் பண்ணா... எந்த பொண்ணா இருந்தாலும் மயங்கிடுவாங்க!!
Recommended image2
Fashion Tips : உங்க சரும நிறத்திற்கு ஏத்த ஆடைகள் எதுனு தெரியுமா? இப்படி 'ட்ரெஸ்' பண்ணா தாழ்வு மனப்பான்மையே வராது!
Recommended image3
Beauty tips: முகம் ரொம்ப வறண்டு, டல் ஆ இருக்கா? 2 ஸ்பூன் பச்சை பால் போதும்..பளிச்சுனு ஆக்கிடலாம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved