MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • ஃபேஷன்
  • கோடீஸ்வரர் மகள் என்றால் கேட்கவா வேணும்.. ரூ.90 கோடி மதிப்பில் லெஹங்கா உடுத்தி இஷா அம்பானி செய்த காரியம்..

கோடீஸ்வரர் மகள் என்றால் கேட்கவா வேணும்.. ரூ.90 கோடி மதிப்பில் லெஹங்கா உடுத்தி இஷா அம்பானி செய்த காரியம்..

முகேஷ் அம்பானி மகள் இஷா அம்பானி, தன் திருமணத்தன்று அணிந்திருந்த லெஹங்காவின் விலை 90 கோடியாம். அப்படி என்ன ஸ்பெஷல்? என்பதை காணலாம். 

2 Min read
Author : maria pani
| Updated : Feb 22 2023, 04:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

இந்திய பணக்காரர்களில் முதன்மையானவரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு அண்மையில் தான் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த நிச்சயத்தில் மணமகள் ராதிகா மெர்ச்சண்ட் ஆடைகள் லட்சங்களில் வடிவமைக்கப்பட்டிருந்தது தலைப்பு செய்தியானது. அடுத்ததாக முகேஷ் அம்பானி மகளின் ஆடை விலை வெளியாகி வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

இஷா அம்பானி (Isha Ambani) ஆனந்த் பிரமால் (Anand Piramal) என்பவரை 2018ஆம் ஆண்டு டிசம்பரில் மணந்தார். இந்த திருமணம் பல கோடி செலவில் ஆடம்பரமாக நடந்தது. இந்த திருமண விழாவிற்காக ரூ. 700 கோடி வரையிலும் செலவு செய்ததாக கூறப்பட்டது. இதில் இஷா அம்பானி ஆடைகளுக்காக மட்டும் ரூ.90 கோடிக்கும் மேலாக செலவழிக்கப்பட்டுள்ளது. அதில் அப்படி என்ன சிறப்பு என கேட்க தோன்றுகிறதா? வாருங்கள் காணலாம்.

36

இஷா அம்பானியின் திருமணம் நடந்து 5 ஆண்டுகள் ஆகின்றன. ஆனாலும் அவரது ரூ.90 கோடி மதிப்புள்ள திருமண லெஹெங்கா இன்றளவும் பேசு பொருளாக உள்ளது. பாலிவுட் பிரபலங்களின் ஆடைகளை வடிவமைக்கும் அபு ஜானி சந்தீப் கோஸ்லா தான் அந்த லெஹங்காவை வடிவமைத்திருக்கிறார். 

இதையும் படிங்க: வீட்டிலிருக்கும் தீயசக்தியை கண்டுபிடித்து நிரந்தரமா விரட்டணுமா?எலுமிச்சை பழத்துடன் உப்பு..விடிஞ்சதும் பண்ணுங்க

46

இஷா அம்பானி, அந்த கோடிகள் மதிப்புள்ள லெஹங்காவில் அரச குடும்பத்து பெண் போல இருந்தார். அதில் மென்மையான சிவப்பு ஜர்தோசி பார்டர்கள், முகைஷ் மற்றும் நக்ஷி வேலைப்பாடுகளுடன் கூடிய மலர் வடிவங்கள் இருந்தன. இஷாவின் தோளில் கண்ணை கவரும் எம்பிராய்டரி டிசைனுடன் அடர் சிவப்பு நிறத்தில் மேலாடை கொடுக்கப்பட்டிருந்தது. தலையை மூட வெள்ளை நிற துப்பட்டாவும் கொடுக்கப்பட்டிருந்தன. இதையெல்லாம் கூட மிஞ்சும் சிறப்பு, அந்த ஆடையில் உண்டு. அது அம்பானியின் மனைவி நீதா அம்பானி தொடர்புடைய சமாச்சாரம். 

56

90 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட அந்த லெஹெங்கா, 35 ஆண்டுகளுக்கு முன்பு நிதா அம்பானிக்கு திருமணத்திற்கு எடுத்த புடவையாம். அதை வைத்து தான் இஷா அம்பானி ஆடையை வடிவமைத்துள்ளார்கள். இந்த கல்யாணத்திற்கு மட்டும் ரூ.700 கோடி செலவாகியுள்ளது.  இஷா அம்பானியின் திருமணத்தில் அணிந்திருந்த விலையுர்ந்த நெக்லஸை தான் தன் மகன் ஆனந்த் அம்பானி நிச்சயத்திலும் நீதா அம்பானி அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

66

திருமணத்திற்கு பின் இஷா அம்பானி தன் கணவர் ஆனந்த் பிரமலுடன் ரூ.450 கோடி மதிப்புள்ள கடற்கரை ஓரம் அமைந்த மாளிகையில் தான் வசித்து வருகிறார். இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் உள்ளனர் என்பது கூடுதல் தகவல். 

இதையும் படிங்க: கடைசியாக சென்ற சிவன் கோயில் கருவறையில் மயில்சாமியின் உருவப்படம்.. கருவறையில் வைக்க என்ன காரணம்?

About the Author

MP
maria pani
முகேஷ் அம்பானி
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Co-optex Diwali Offer: பழைய புடவைக்கு புது புடவை ..கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு ஆஃபர்
Recommended image2
Pattu pavadai dress: தீபாவளி ஸ்பெஷல்..குட்டி தேவதைகளுக்கான அழகிய பட்டுப் பாவாடை டாப்ஸ் டிசைன்கள்!
Recommended image3
Deepavali Sarees : இந்த தீபாவளிக்கு எந்த பட்டுப்புடவை வாங்கலாம்? டாப் 7 ட்ரெண்டிங் கலெக்‌ஷன்ஸ் இதோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved