MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • ஃபேஷன்
  • Co-optex Diwali Offer: பழைய புடவைக்கு புது புடவை ..கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு ஆஃபர்

Co-optex Diwali Offer: பழைய புடவைக்கு புது புடவை ..கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு ஆஃபர்

Co-optex Diwali Offer: கோ-ஆப்டெக்ஸில் பழைய துணிகளைக் கொடுத்து புதிய ஆடைகளை வாங்கும் சிறப்புத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு 30 சதவீதம் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. திட்டம் கிடைக்கும் நிபந்தனைகளை அறிந்துகொள்ளுங்கள்.

2 Min read
Author : Vishnupriya
Published : Oct 14 2026, 04:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
கோ ஆப்டெக்ஸ் ஆஃபர் 2026
Image Credit : Gemini Ai

கோ ஆப்டெக்ஸ் ஆஃபர் 2026

பீரோவில் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பழைய பட்டுப் புடவைகள் இருக்கிறதா? திருமணம், விசேஷ நாட்களுக்காக வாங்கிய பட்டுப் புடவைகள் இப்போது அணியாமல் அப்படியே இருக்கின்றனவா? அப்படியானால், உங்களுக்கு ஒரு சூப்பர் வாய்ப்பு காத்திருக்கிறது.

பழைய பட்டுப் புடவையைக் கொடுத்துவிட்டு, அதன் மதிப்புக்கு ஏற்ப புதிய ஆடைகளை வாங்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது கோ-ஆப்டெக்ஸ்.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தொடங்கப்பட்டுள்ள இந்தச் சிறப்புத் திட்டம், பழைய பட்டுப் புடவைகளைப் பயனுள்ளதாக மாற்ற விரும்புபவர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், புதிய பட்டுப் புடவைகள் வாங்கும்போது தள்ளுபடி சலுகையையும் பயன்படுத்திக்கொள்ளலாம். பழைய புடவை இனி வீணாகக் கிடக்க வேண்டாம். அதன் மதிப்பைப் பயன்படுத்திப் புதிய ஆடைகளை வாங்கலாம்.

இந்தத் திட்டம் எங்கு செயல்படுகிறது? எந்த வகையான புடவைகளைக் கொடுக்கலாம்? அதன் மதிப்பு எப்படிக் கணக்கிடப்படுகிறது என்பதை விரிவாகப் பார்ப்போம்

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
தீபாவளி ஆஃபர்
Image Credit : Pinterest

தீபாவளி ஆஃபர்

கோ-ஆப்டெக்ஸ் (Co-optex) நிறுவனம் இந்தத் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்காக பழசுக்கு புதுசு (Old for New) என்ற சிறப்பு பட்டுப் புடவை எக்ஸ்சேஞ்ச் ஆஃபரை அறிமுகப்படுத்தியுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய பட்டுப் புடவைகளைக் கொடுத்துவிட்டு புதிய பட்டுப் புடவைகளைச் சலுகை விலையில் பெற்றுக் கொள்ளலாம்.

35
பழைய பட்டுப் புடவைக்கு எப்படி மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது?
Image Credit : Pinterest

பழைய பட்டுப் புடவைக்கு எப்படி மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது?

  • கோவையில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில், குறிப்பாகப் பழைய பட்டுப் புடவைகளில் இருக்கும் வெள்ளி ஜரிகைக்கு மதிப்பீடு செய்து புதிய ஆடைகளை வாங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • புடவை கிழிந்திருந்தாலும், பல ஆண்டுகள் பழையதாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • புடவையில் உள்ள ஜரிகை உண்மையான வெள்ளியா என்பதை மதிப்பீட்டாளர் பரிசோதிப்பார்.
  • ஜரிகையின் தரம் மற்றும் மதிப்பின் அடிப்படையில் தொகை கணக்கிடப்படும்.
  • நிர்ணயிக்கப்படும் மதிப்பைப் பயன்படுத்திக் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் புதிய ஆடைகளை வாங்கிக்கொள்ளலாம்.
  • கோ-ஆப்டெக்ஸ் வழங்கும் வழக்கமான தள்ளுபடியையும் பயன்படுத்திக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
45
தீபாவளி சிறப்பு ஆஃபரின் முக்கிய அம்சங்கள்
Image Credit : Pinterest

தீபாவளி சிறப்பு ஆஃபரின் முக்கிய அம்சங்கள்

உங்களிடம் இருக்கும் அசல் ஜரிகை கொண்ட பழைய பட்டுப் புடவைகளைக் கொடுத்து, அதற்கு ஈடான மதிப்புடன் புதிய பட்டுப் புடவைகளை அல்லது பிற கைத்தறி ஆடைகளை சலுகை விலையில் மாற்றிக் கொள்ளலாம்

30 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி:

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு வழங்கும் 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி அனைத்து கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களிலும் கிடைக்கும்

இந்த சிறப்புத் தீபாவளி விற்பனை மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து விடுமுறை நாட்களிலும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை அனைத்து கோ-ஆப்டெக்ஸ் கிளைகளிலும் நடைபெற்று வருகிறது. உங்கள் அருகாமையிலுள்ள கோ-ஆப்டெக்ஸ் நிலையத்திற்குச் சென்று இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

55
வெள்ளி ஜரிகைக்கே மதிப்பு
Image Credit : Pinterest

வெள்ளி ஜரிகைக்கே மதிப்பு

பழைய புடவையின் மொத்தத் துணி மதிப்புக்குப் பணம் வழங்கப்படுவதில்லை. அதிலுள்ள வெள்ளி ஜரிகைக்கே மதிப்பு கணக்கிடப்படுகிறது.

கடைக்குச் செல்வதற்கு முன்பு இந்தத் திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோ-ஆப்டெக்ஸ் கடைகளிலும் இன்னும் நடைமுறையில் உள்ளதா? எந்த வகையான பட்டுப் புடவைகள் ஏற்றுக்கொள்ளப்படும்? ஜரிகை மதிப்பீடு எவ்வாறு செய்யப்படும் என்பதை விற்பனை நிலையத்தில் உறுதிப்படுத்துவது நல்லது.

மொத்தத்தில் நீண்ட நாட்களாகப் பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பழைய பட்டுப் புடவையில் வெள்ளி ஜரிகை இருந்தால், அதை எடுத்துச் சென்று மதிப்பீடு செய்து புதிய ஆடைகளை வாங்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

புடவையை வீணாக்காமல் அதன் ஜரிகை மதிப்பைப் பயன்படுத்துவதுடன், தீபாவளி தள்ளுபடியையும் சேர்த்துப் பெற முடியுமா என்பதை நேரில் விசாரித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

About the Author

V
Vishnupriya
கா. விஷ்ணுபிரியா செய்தித் துறையில் 3 வருடம் அனுபவம் கொண்டவர். ETV Bharat இணையத்தளத்தில் பணியாற்றிய இவர் தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் மல்டிமீடியா ஜர்னலிஸ்டாக பணிபுரிகிறார். இவர் அரசியல், சினிமா மற்றும் லைஃப் ஸ்டைல் உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
ஃபேஷன்
தீபாவளி பண்டிகை
சலுகைகள்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Pattu pavadai dress: தீபாவளி ஸ்பெஷல்..குட்டி தேவதைகளுக்கான அழகிய பட்டுப் பாவாடை டாப்ஸ் டிசைன்கள்!
Recommended image2
Deepavali Sarees : இந்த தீபாவளிக்கு எந்த பட்டுப்புடவை வாங்கலாம்? டாப் 7 ட்ரெண்டிங் கலெக்‌ஷன்ஸ் இதோ!
Recommended image3
Blouse Design : அட! இது கோலமா..பிளவுஸ் டிசைனா? சேலை லவ்வர்களுக்கான லேட்டஸ்ட் டிரெண்ட்
Related Stories
Recommended image1
Fashion Tips: புது டிரஸ் வேண்டாம்..இருக்கும் Dress-க்கே புது Look கொடுக்க இந்த Tricks-ஐ Try பண்ணுங்க!
Recommended image2
Pattu pavadai dress: தீபாவளி ஸ்பெஷல்..குட்டி தேவதைகளுக்கான அழகிய பட்டுப் பாவாடை டாப்ஸ் டிசைன்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved