- Home
- Lifestyle
- Bathroom Cleaning: குழாயில் உப்புக்கறையா? இந்த குட்டி பந்து போதும்.! ஒரு நிமிடத்தில் பளபளன்னு ஆகிடும்.!
Bathroom Cleaning: குழாயில் உப்புக்கறையா? இந்த குட்டி பந்து போதும்.! ஒரு நிமிடத்தில் பளபளன்னு ஆகிடும்.!
Simple Hack to Remove Hard Water Stains from Taps Using Aluminium Foil: சமையலறையிலும், குளியலறையிலும் உள்ள குழாய்களில் படியும் கடினமான உப்புக்கறைகளை, அலுமினியம் ஃபாயிலைக் கொண்டே எளிதாக நீக்க முடியும். அது பற்றி விரிவாகப் பார்ப்போம்.

Simple Hack to Remove Hard Water Stains from Taps Using Aluminium Foil
பெரும்பாலான வீடுகளில் குழாய்கள், ஷவர் ஹெட்கள் போன்றவை சில மாதங்களிலேயே வெள்ளை நிறத்தில் உப்புக்கறை படிந்து, அதன் பளபளப்பை இழந்துவிடும். இதற்காக அதிக விலை கொண்ட ரசாயன கிளீனர்களை வாங்கிப் பயன்படுத்தினாலும், பலன் தற்காலிகமாகவே இருக்கும். ஆனால், நாம் சாதாரணமாகப் பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் அலுமினியம் ஃபாயிலைக் கொண்டு இந்தப் பிரச்னைக்கு எளிதாகத் தீர்வு காண முடியும் என சுத்தப்படுத்தும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதையும் படியுங்கள் - Pressure Cooker: அலுமினியம் குக்கர் vs ஸ்டீல் குக்கர்.! சமையலுக்கும், ஆரோக்கியத்திற்கும் எது பெஸ்ட்?
உப்புக்கறை எப்படி உருவாகிறது?
கடின நீர் (Hard Water) பயன்பாட்டில் இருக்கும் பகுதிகளில் இந்த சிக்கல் அதிகம். கடின நீரில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற கனிமங்கள் அதிக அளவில் இருப்பதால், நீர் ஆவியான பிறகு இந்த கனிமங்கள் குழாய்களின் மீது வெண்படலமாகப் படிகின்றன. இதுவே நாளடைவில் தடிமனான, நீக்க முடியாத கறையாக மாறுகிறது. இங்கேதான் அலுமினியம் ஃபாயில் உதவுகிறது. ஃபாயிலை ஒரு பந்து போல சுருட்டும்போது, அது ஒரு மென்மையான ஸ்க்ரப்பராக செயல்படுகிறது.
இதையும் படியுங்கள் - Water Bottle: வாட்டர் பாட்டில் மூடி ஏன் வெவ்வேற கலர்ல இருக்குனு யோசிச்சிருக்கீங்களா?
ஃபாயிலுடன் வினிகர் சேர்த்தால் கூடுதல் பலன்
ஸ்டீல் ஸ்க்ரப்பர் போல உலோகத்தின் மேற்பரப்பில் கீறல்களை ஏற்படுத்தாமல், படிந்திருக்கும் கனிமப் படிவுகளை மட்டும் இது திறமையாக நீக்குகிறது. இந்தச் செயல்முறையை இன்னும் எளிதாக்க வெள்ளை வினிகரை (White Vinegar) பயன்படுத்தலாம். வினிகரில் உள்ள அசிட்டிக் அமிலம், சுண்ணாம்புப் படிவுகளைக் கரைக்கும் தன்மை கொண்டது. இதனால், ஃபாயிலுடன் வினிகரும் சேரும்போது, கறைகள் இன்னும் வேகமாக நீங்குகின்றன.
இதையும் படியுங்கள் -Broom Stick: துடைப்பத்தை உப்பு தண்ணியில ஊறவெச்சு பாருங்க.! பழைய துடைப்பத்தை புதுசாக்க ஒரு சிம்பிள் ட்ரிக்.!
ஃபாயிலைப் பயன்படுத்துவது எப்படி?
முதலில், பயன்படுத்திய அலுமினியம் ஃபாயிலின் ஒரு பகுதியை எடுத்து, அதை ஒரு சிறிய பந்தாகச் சுருட்டிக்கொள்ளுங்கள். பிறகு, அந்த ஃபாயில் பந்தை தண்ணீரில் நனைத்து, கறை படிந்த குழாயின் மீது வட்ட வடிவில் மெதுவாகத் தேய்க்க வேண்டும். சில நிமிடங்கள் தேய்த்தாலே, கறைகள் இளகி வருவதை நீங்கள் பார்க்கலாம். கறைகள் மிகவும் கடினமாக இருந்தால், ஃபாயிலை வெள்ளை வினிகரில் தோய்த்துப் பயன்படுத்தலாம். இன்னும் சிறந்த பலனுக்கு, கறை படிந்த இடத்தில் வினிகரை 10 நிமிடங்கள் தெளித்து ஊறவைத்து, அதன் பிறகு ஃபாயிலால் தேய்த்தால் நல்ல மாற்றம் தெரியும். சுத்தம் செய்த பிறகு, குழாயை தண்ணீரால் கழுவி, உலர்ந்த மைக்ரோஃபைபர் துணியால் துடைத்தால், புதியது போல பளபளக்கும்.
இதையும் படியுங்கள் - Floor Cleaning: தரை பிசுபிசுன்னு இருக்கா? இந்த ஒரு பொருளை கலந்து துடைங்க, தரை கண்ணாடி போல ஜொலிக்கும்.!
எச்சரிக்கை
இந்த முறை குரோம் மற்றும் ஸ்டையின்லெஸ் ஸ்டீல் போன்ற உலோகப் பரப்புகளுக்கு மிகவும் ஏற்றது. ஆனால், மேட் ஃபினிஷ் அல்லது பெயின்ட் கோட்டிங் செய்யப்பட்ட குழாய்களில் இதை முயற்சிக்கும் முன், கண்ணுக்குத் தெரியாத ஒரு சிறிய இடத்தில் சோதனை செய்வது அவசியம். இல்லையெனில், அது மேற்பரப்பை சேதப்படுத்த வாய்ப்புள்ளது. மேலும், சுத்தம் செய்யும்போது அதிக அழுத்தம் கொடுத்துத் தேய்ப்பதைத் தவிர்க்க வேண்டும். மென்மையாக தேய்த்தலே போதுமானது. இனி பயன்படுத்திய அலுமினியம் ஃபாயிலைப் பார்த்தால், குப்பைத்தொட்டி நினைவுக்கு வருமா அல்லது பளபளக்கும் குழாய்கள் நினைவுக்கு வருமா என்பது உங்கள் கையில்தான் இருக்கிறது.
Top Stories: அதிகம் படிக்கப்பட்டவை
- Bathroom Cleaning: பாத்ரூம் சுவர்களில் பூஞ்சை வளர்கிறதா? தடுப்பதற்கான 5 ட்ரிக்ஸ்.! இனி பாத்ரூம் டைல்ஸ் பளபளக்கும்.!
- Vedic Astrology: இடம் மாறும் குரு பகவான்.! குரு பெயர்ச்சியால் கோடீஸ்வர யோகம் பெறும் 5 அதிர்ஷ்ட ராசிகள்.!
- Astrology Tamil: சுக்கிர புத்தி ஆரம்பம்.! அடுத்த 6 மாதம் 5 ராசிகளுக்கு ராஜயோகம்.! இனி இவர்கள் தொட்டதெல்லாம் தங்கமாகும்.!
- Chanakya Niti: கோடி ரூபாய் கொடுத்தாலும், இவர்களை மட்டும் திருமணம் செய்யாதீர்கள்.! சாணக்கியர் கூறும் அறிவுரை.!
- Aadi Masam 2026: ஆடி வெள்ளி அம்மன் உங்க வீட்டுக்கு வரணுமா? இதை மட்டும் செய்யுங்கள்! தேச மங்கையர்கரசி சொன்ன ரகசியம்.!
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

