MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Bathroom Cleaning: பாத்ரூம் சுவர்களில் பூஞ்சை வளர்கிறதா? தடுப்பதற்கான 5 ட்ரிக்ஸ்.! இனி பாத்ரூம் டைல்ஸ் பளபளக்கும்.!

Bathroom Cleaning: பாத்ரூம் சுவர்களில் பூஞ்சை வளர்கிறதா? தடுப்பதற்கான 5 ட்ரிக்ஸ்.! இனி பாத்ரூம் டைல்ஸ் பளபளக்கும்.!

Bathroom Cleaning: உங்கள் பாத்ரூமை எவ்வளவுதான் தேய்த்துக் கழுவினாலும் சீக்கிரம் அழுக்காகிவிடுகிறதா? சுவர்களில் கறுப்புப் பூஞ்சை தெரிகிறதா? உங்கள் பாத்ரூம் எப்போதும் பளிச்சென்று இருக்க, இங்கே சில எளிய வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

2 Min read
Author : Ramprasath S
Published : Jul 16 2026, 12:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Bathroom Cleaning
Image Credit : Gemini AI

Bathroom Cleaning

பாத்ரூம் சுத்தமாக இருந்தால், வீடு முழுவதுமே ஒரு ஃபிரெஷ்ஷான உணர்வு கிடைக்கும். ஆனால், அதிக ஈரப்பதம் இருப்பதால் டைல்ஸ்களில் கறுப்பு அல்லது பச்சை நிறத்தில் பூஞ்சை வளர ஆரம்பிக்கும். இதை நீக்குவதற்கான ஒரு டீப் கிளீனிங் வழிகாட்டி இதோ.

இதையும் படியுங்கள் - Water Bottle: வாட்டர் பாட்டில் மூடி ஏன் வெவ்வேற கலர்ல இருக்குனு யோசிச்சிருக்கீங்களா? இதுக்கு பின்னாடி பெரிய சயின்ஸ் இருக்கு.!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
1. குளித்ததும் சுவர்களைத் துடைக்கவும்
Image Credit : Getty

1. குளித்ததும் சுவர்களைத் துடைக்கவும்

குளித்து முடித்தவுடன், டைல்ஸ் மற்றும் கண்ணாடியில் இருக்கும் தண்ணீரை அப்படியே விடாதீர்கள். ஒரு மெல்லிய துணியால் சுவர்களைத் துடைத்துவிட்டால், தண்ணீர் கறைகளும் சோப்புப் பிசுக்கும் டைல்ஸில் படியாது. இது பூஞ்சை வராமல் தடுப்பதோடு, டைல்ஸையும் பளபளப்பாக வைத்திருக்கும்.

இதையும் படியுங்கள் - வாஷ்ரூம் vs பாத்ரூம் vs ரெஸ்ட்ரூம்.! மூணுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? 90% பேருக்கு இது தெரியாது.!

36
2. காற்றோட்டத்திற்கு வழிவிடுங்கள் (Ventilation)
Image Credit : instagram

2. காற்றோட்டத்திற்கு வழிவிடுங்கள் (Ventilation)

பாத்ரூமில் நீராவி அல்லது ஈரப்பதம் சேராமல் பார்த்துக்கொள்வது அவசியம். குளிக்கும்போதும், குளித்து முடித்த பிறகும் சிறிது நேரம் ஜன்னல் அல்லது கதவைத் திறந்து வையுங்கள். உங்கள் பாத்ரூமில் எக்ஸாஸ்ட் ஃபேன் (Exhaust Fan) இருந்தால், அதை ஆன் செய்யுங்கள். இதனால் ஈரப்பதம் சீக்கிரம் காய்ந்து, பூஞ்சை வளராது.

இதையும் படியுங்கள் - Pressure Cooker: அலுமினியம் குக்கர் vs ஸ்டீல் குக்கர்.! சமையலுக்கும், ஆரோக்கியத்திற்கும் எது பெஸ்ட்?

46
3. வினிகர் கலவையால் சுத்தம் செய்யுங்கள்
Image Credit : Getty

3. வினிகர் கலவையால் சுத்தம் செய்யுங்கள்

டைல்ஸில் படிந்துள்ள பூஞ்சையை அகற்ற, தண்ணீரும் வினிகரும் (Vinegar) கலந்த கலவை ஒரு சிறந்த வீட்டு வைத்தியம். இந்த இயற்கையான கலவையை டைல்ஸ் மீது ஸ்பிரே செய்து சுத்தம் செய்தால், கிருமிகள் அழிந்து டைல்ஸ் பளபளப்பாகும்.

இதையும் படியுங்கள் - Home Cleaning: படுக்கை மெத்தையில் கெட்ட வாடையா? துவைக்காமலேயே துர்நாற்றத்தை நீக்க சூப்பர் டிப்ஸ்.!

56
4. டைல்ஸ் இடுக்குகளை சரிசெய்யுங்கள் (Grout Sealing)
Image Credit : chat GPT

4. டைல்ஸ் இடுக்குகளை சரிசெய்யுங்கள் (Grout Sealing)

டைல்ஸ்களுக்கு இடையிலான இடுக்குகளில் (Joints) தான் அழுக்கு அதிகமாக சேரும். வருடத்திற்கு ஒருமுறை இந்த இடுக்குகளை சுத்தம் செய்து, மீண்டும் ஒயிட் சிமெண்ட் அல்லது கிரவுட் (Grout) கொண்டு சீல் செய்யுங்கள். இதனால் நீர் உள்ளே கசியும் (Seepage) அபாயமும் தடுக்கப்படும்.

இதையும் படியுங்கள் - சப்பாத்தி சாஃப்ட்-ஆ வரலையா? இந்த ட்ரிக் யூஸ் பண்ணுங்க.! ஹோட்டல் மாதிரி ரவுண்டாவும், செம்ம மிருதுவாகவும் வரும்.!

66
5. நிபுணர்களின் உதவியை நாடுங்கள்
Image Credit : pinterest

5. நிபுணர்களின் உதவியை நாடுங்கள்

ஒருவேளை பூஞ்சை அதிகமாகப் பரவி, வீடு முழுவதும் பரவும் அபாயம் இருந்தால், உடனடியாக கிளீனிங் நிபுணர்களை அழைத்து சுத்தம் செய்யுங்கள். பூஞ்சையால் சுவாசப் பிரச்சனைகளும், தொற்றுநோய்களும் ஏற்படலாம். எனவே, இதை அலட்சியப்படுத்த வேண்டாம்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாழ்க்கை முறை
சுத்தம் குறிப்புகள்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Coconut Oil: இரவில் தூங்கும் முன் காலில் தேங்காய் எண்ணெய்! தினமும் தடவினால் என்ன நடக்கும் தெரியுமா?
Recommended image2
Crispy Dosa Recipe: வீட்லயே மொறுமொறுனு தோசை சுடுவது எப்படி..? சிம்பிள் டிப்ஸ்..!
Recommended image3
சிறுகீரை முதல் எள் வரை... இரும்புச்சத்து அள்ளித்தரும் 6 உணவுகள்! ஆனால் இது தெரிஞ்சாதான் முழு பலன்!
Related Stories
Recommended image1
Floor Cleaning: தரை பிசுபிசுன்னு இருக்கா? இந்த ஒரு பொருளை கலந்து துடைங்க, தரை கண்ணாடி போல ஜொலிக்கும்.!
Recommended image2
Broom Stick: துடைப்பத்தை உப்பு தண்ணியில ஊறவெச்சு பாருங்க.! பழைய துடைப்பத்தை புதுசாக்க ஒரு சிம்பிள் ட்ரிக்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved