MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • சர்க்கரை நோயாளிகளே இந்த 1 தப்பு மட்டும் மதிய உணவு சாப்பிடும்போது பண்ணிடாதீங்க..

சர்க்கரை நோயாளிகளே இந்த 1 தப்பு மட்டும் மதிய உணவு சாப்பிடும்போது பண்ணிடாதீங்க..

Lunch Time Mistakes For Diabetics : சர்க்கரை நோயாளிகள் மதியம் சாப்பிடும் போது எந்த மாதிரியான தவறுகளை செய்யக்கூடாது என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Sep 13 2024, 04:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Diabetic Lunch Mistakes In Tamil

Diabetic Lunch Mistakes In Tamil

நம்முடைய முன்னோர்கள் காலத்தில் சர்க்கரை நோய் இருந்ததில்லை. ஆனால், இன்றைய காலத்தில் சின்ன குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் சர்க்கரை நோய் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம், மோசமான வாழ்க்கை முறை, உணவு பழக்கம், சரியான நேரத்தில் சாப்பிடாமல், நேரம் தவறி சாப்பிடுவது இதுபோன்றவை ஆகும்.

இதனால் பலர் தங்களது ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துகிறார்கள். ஆனால், காலை இரவு உணவில் மட்டும் கவனம் செலுத்துபவர்கள், மதிய உணவிலும் கவனம் செலுத்த மறந்துவிடுகிறார்கள். இப்படி செய்வது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. அதுவும் குறிப்பாக, நீங்கள் சர்க்கரை நோயாளியாக இருந்தால் ரொம்பவே தவறு. 

முக்கியமாக, சர்க்கரை நோயாளிகள் எப்பொழுதும் குடிக்கும் பானம் முதல் உண்ணும் உணவில் வரை சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். காரணம் சில உணவுகள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்யும் அந்த வகையில் சர்க்கரை நோயாளிகள் மதிய உணவாக எதை சாப்பிட வேண்டும்? எதை சாப்பிடக்கூடாது? போன்ற விஷயங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Diabetic Lunch Mistakes In Tamil

Diabetic Lunch Mistakes In Tamil

இனிப்பு சாப்பிடக்கூடாது :

பலரும் மதிய உணவு சாப்பிட்ட பிறகு ஏதாவது ஒரு இனிப்பு சாப்பிட விரும்புவார்கள். நீங்கள் சர்க்கரை நோயாளியாக இருந்தால், இனிப்பு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், இது உங்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்க செய்யும்.  அதுபோல அப்பளமும் சாப்பிட கூடாது. காரணம் சுத்திகரிக்கப்பட்ட மாவில் அப்பளம் தயாரிக்கபட்டு, பிறகு எண்ணெயில் நன்கு பொரித்தெடுக்கப்படுகிறது. இது ஆரோக்கியத்திற்கு கேடு. எனவே, சர்க்கரை நோயாளிகள் இனிப்பு மற்றும் அப்பளத்தை மதிய உணவு எடுத்துக் கொள்ளக் கூடாது.

பொறித்த உணவுகள் :

சர்க்கரை நோயாளிகள் மதிய நேரத்தில் பொரித்த உணவுகளை ஒருபோதும் சாப்பிடவே கூடாது. காரணம், பொரித்த உணவில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய், உப்பு ஆரோக்கியத்திற்கு கேடு. மேலும், இது ஆரோக்கியமானது அல்ல. இதற்கு பதிலாக நீங்கள் நார்ச்சத்து புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடலாம். இவை ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது.

இதையும் படிங்க: வேப்பிலைக்கு சர்க்கரை நோயை விரட்டும் தன்மை உண்டா?

34
Diabetic Lunch Mistakes In Tamil

Diabetic Lunch Mistakes In Tamil

குளிர் பானங்கள் :

சர்க்கரை நோயாளிகள் மதிய உணவோடு, குளிர் பானங்கள் குடிப்பதை தவிர்க்க வேண்டும். காரணம் குளிர்பானங்களில் செயற்கை இனிப்புகள் அதிகம் சேர்க்கப்படுவதால், அவை ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே, மதிய வேளையில் குளிர்பானத்தை குடிப்பதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. அதுபோல, அதிக இனிப்பு உள்ள பழங்களையும் சாப்பிடக்கூடாது உதாரணமாக மாம்பழம் வாழைப்பழம் பலாப்பழம் லிச்சிஸி போன்றவையாகும்.

என்ன சாப்பிடலாம்?

நீங்கள் சர்க்கரை நோயாளியாக இருந்தால் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை மதிய உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஆனால், புரதமும், நார்ச்சத்தும் சம அளவிலும்... கார்போஹைட்ரேட்டுகள் மிதமான எடுத்துக்கொள்ளுங்கள். இதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். 

கார்போஹைட்ரேட்டுகள் நன்மை என்றாலும், அது நாம் எடுத்துக் கொள்ளும் உணவே பொறுத்து வேறுபடும். எனவே, இதற்கு நீங்கள் பழுப்பு அரிசி ஓட்ஸ் ஸ்கினோவா போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். முக்கியமாக, சரிவிகித உணவை எப்போதும் எடுத்துக் கொள்ளுங்கள். அதுதான், ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க பெரிதும் உதவுகிறது.

44
Diabetic Lunch Mistakes In Tamil

Diabetic Lunch Mistakes In Tamil

முக்கிய குறிப்பு :

தற்போது நாம் அதிகப்படியான வேலை பொருளு காரணமாக, மதியம் சாப்பிடும் நேரத்தை சரியாக பின்பற்றுவதில்லை. இதுகூட சர்க்கரை வருவதற்கு காரணங்களில் ஒன்றாகும்.

எனவே, நீங்கள் மதியம் சாப்பிடும் நேரம் ஒரே மாதிரியாக தான் இருக்க வேண்டும். அதாவது ஒரு நாள் இரண்டு மணியும், மறுநாள் இரண்டு மணி என்று மாறி மாறி இருக்கக் கூடாது. மதியம் சாப்பிடுவதற்கு என சரியான நேரத்தை ஒதுக்கி வைத்துக் கொள்ளுங்கள் மற்றும் அதை தினமும் ஃபாலோ பண்ணுங்கள். இது உங்களுக்கு கடினமாக இருந்தாலும் கண்டிப்பாக முயற்சி செய்து பாருங்கள். அப்போது தான் ஆரோக்கியமாக இருப்பீர்கள்.

இதையும் படிங்க:  சர்க்கரை நோயாளிகள் இந்த ஒரு சாக்லேட் கண்டிப்பா சாப்பிடலாம்!! அது என்ன தெரியுமா? 

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
ஆரோக்கிய குறிப்புகள்
 
3rd TEST • SA vs AUS
Live
SASA
(81.0 ov) 329 & 230/5
AUSAUS
429
Day 4 - Session 2
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Immersion Rod vs Geyser: இரண்டில் எது செலவு குறைவு? இம்மர்ஷன் ராடா, கீசரா? உடனே படிங்க
Recommended image2
Nethili Karuvattu Kulambu: கிரங்கடிக்கும் நெத்திலி கருவாட்டு குழம்பு.! ருசியை கூட்டும் அந்த 3 காய்கள்.!
Recommended image3
Pappalikai Koottu: பப்பாளிக்காய் கூட்டு.! இவ்ளோ நல்லதா? ஐந்தே நிமிடங்களில் செய்யலாம் ஈசியா!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved