MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • வேப்பிலைக்கு சர்க்கரை நோயை விரட்டும் தன்மை உண்டா?

வேப்பிலைக்கு சர்க்கரை நோயை விரட்டும் தன்மை உண்டா?

Neem Leaves For Diabetes : வேப்பிலைகளை எவ்வாறு பயன்படுத்தினால் சர்க்கரை நோயை கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியும் என்பது குறித்து பலருக்கும் தெரிவதில்லை. இந்த பதிவில் வேப்பிலைகளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை காண்போம். 

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Sep 09 2024, 03:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Neem Leaves For Diabetes

Neem Leaves For Diabetes

இன்றைய காலகட்டத்தில் பெரியவர்களுக்கு மட்டுமல்ல, மரபணு, உடல் பருமன் உள்ளிட்ட பல காரணங்களால் குழந்தைகளுக்கும் சர்க்கரை நோய் ஏற்படுகிறது. சர்க்கரை நோயை முழுமையாக ஒழித்து விட எந்த வழிகளும் இதுவரை கண்டறியப்படவில்லை. ஆனால் இதனை கட்டுப்பாட்டுக்குள் வைப்பதன் மூலம் மற்ற பாதிப்புகளையும் ஏற்படாமல் தடுக்கலாம். 

சர்க்கரை நோய் என சொல்லப்படும் நீரிழிவு நோய் உணவு பழக்கவழக்கங்கள், போதுமான உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறை, மரபணு உள்ளிட்ட காரணங்களால் நம் ரத்தத்தில் காணப்படும் சர்க்கரை அளவை அதிகரிக்க செய்கிறது. இதனை கட்டுப்படுத்த முறையாக மருந்துகள் எடுத்துக் கொள்ளாவிட்டால் அடுத்தடுத்த விளைவுகளை சந்திக்க நேரிடும். 

இதையும் படிங்க:  சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதம் இந்த 5 வகையான காலை உணவுகள் தான்..! லிஸ்ட் இதோ..!!.

24
Neem Leaves For Diabetes

Neem Leaves For Diabetes

சர்க்கரை வியாதி ஆரம்ப காலகட்டத்தில் இயற்கை முறையில் கட்டுக்குள் வைத்துக் கொள்ளக் கூடியது தான். ஓரளவு நம்முடைய வாழ்க்கை முறை, உணவுப் பழக்க வழக்கங்களை மாற்றுவதன் மூலம் இதனை கட்டுப்படுத்தலாம். அதிலும் எந்த காசும் செலவில்லாமல் இது சாத்தியம் என்றால் நம்ப முடிகிறதா? ஆம். வேப்பிலைகளுக்கு இந்த ஆற்றல் உண்டு. 

வேப்ப இலையில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே. அதிலும் முற்றிய வேப்பிலைகளை விட கொழுந்து இலைகள் தான் அதிக பலன்களை கொண்டிருக்கின்றன. இவை நம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க உதவும். டைப் -2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்  வேப்பிலையில் உள்ள சில பொருள்கள் நம் உடலில் சர்க்கரை நோய் தாக்கத்தை குறைக்கும். இது வெறும் சர்க்கரை நோய்க்கான மருந்து இல்லை. இதனால் உடலில் மற்ற பிரச்சனைகளும் தீரும். 

34
Neem Leaves For Diabetes

Neem Leaves For Diabetes

நாம் வேப்பிலையின் சாற்றை அருந்தும் போது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கணிசமாக குறையும். அது மட்டுமின்றி வயிற்றிலுள்ள சில கோளாறுகளும் முற்றிலும் மாறும். நமது வயிற்றில் இருக்கும் புழுக்களை அழித்து நச்சுக்களை நீக்கும் ஆற்றல் வேப்பிலைக்கு உண்டு.  வேப்பிலை சாறு அருந்துவதால் நம்முடைய தோலும் பராமரிக்கப்படும். உடலின் நச்சுக்கள் நீங்குவதால் சருமம் பளபளப்பாகும். 

வேப்பிலையில் உள்ள நிம்பின், நிம்பினின், ஜெடூனின் போன்றவை சர்க்கரை நோய்க்கு எதிராக போராடக்கூடியவை. கல்லீரலை நன்கு இயங்கவும் பராமரிக்கவும் வேப்பிலைகளை பயன்படுத்தலாம். இதுவே சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் இன்சுலினை சுரக்கும். வேப்பிலைகளை காயத்தை குணமாற்றும் பண்புகள் உள்ளன. ஆகவே சர்க்கரை நோயால் புண்கள் ஆறாமல் அவதிப்படுபவர்கள் தினமும் வேப்பிலைகளை எடுத்துக் கொள்ளலாம். 

இதையும் படிங்க: நீரிழிவு நோயாளிகள் பீர் குடிப்பதால் என்ன மாற்றம் நிகழும் தெரியுமா? 

44
Neem Leaves For Diabetes

Neem Leaves For Diabetes

எப்படி சாப்பிடலாம்?

வேப்பிலை உடலுக்கு நல்லது என்றாலும் அதனை குறிப்பிட்ட நேரத்தில் உண்பதால் கிடைக்கும் பலன்கள் அதிகம். காலையில் படுக்கையிலிருந்து எழுந்த பின்பு பல்துலக்கி விட்டு வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தண்ணீருடன் வேப்பிலைகளை சாப்பிடுவது நல்ல பலன் அளிக்கும். கொழுந்து இலைகளை உண்பது கூடுதல் நல்லது. 
  
சிலருக்கு கசப்பு சுவை பிடிக்காது. அவர்கள் வேப்பிலைகளை அப்படியே சாப்பிட தயங்குவார்கள். வேப்பிலைகளை அப்படியே சாப்பிடுவதற்கு பதிலாக அரைத்து சாறாக்கியும் அருந்தலாம். இதுவும் கடினமாக தோன்றினால் வேப்ப எண்ணையை நாக்கில் படாமல் விழுங்கினாலும் முழுபலன் பெறலாம். இதுவும் கடினமாக தோன்றினால் வேப்பிலைகளை நிழலில் உலர விட்டு அதனை பொடி செய்து சாப்பிடலாம். வேப்பிலைகளை வெந்நீரில் போட்டு காய்த்து வேப்பிலை தேநீராக அருந்தலாம். 

ஆனால் ஏற்கனவே சர்க்கரை நோய்க்கு மருந்து எடுத்துக் கொள்பவர்கள் மருத்துவரிடம் இது குறித்து ஆலோசித்து விட்டு, மருந்துகளை அதற்கு தகுந்தாற்போல் எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
ஆரோக்கிய குறிப்புகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image2
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Recommended image3
உபாசனா வதந்தியால்.. மீண்டும் பேசப்படும் வாடகைத் தாய் முறை.. அப்படி என்றால் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved