நீரிழிவு நோயாளிகள் பீர் குடிப்பதால் என்ன மாற்றம் நிகழும் தெரியுமா?
Sugar Patients Drink Beer : நீரிழிவு நோயாளிகள் எப்போதும் உணவில் தனி கவனம் கொள்ள வேண்டும். அதிலும் மதுபானங்கள் குடிப்பவர்கள் கூடுதல் கவனமாக இருக்கவேண்டும்.
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உணவு, வாழ்க்கை முறை, தூக்கம் என பல காரணிகள் காரணமாக உள்ளன. அதிலும் ஒருவருக்கு நீரிழிவு நோய் வந்துவிட்டால் அவர் உணவு விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்தால் மட்டுமே அவரால் நிம்மதியாக இருக்க முடியும் என்றாகிவிட்டது. பெரும்பாலும் உடற்பயிற்சியின்மை உள்ளிட்ட சில பழக்கவழக்கங்கள் தான் டைப் 2 சர்க்கரை நோய்க்கு காரணம். மரபணு காரணமாகவும் இந்த நோய் வரும் வாய்ப்புள்ளது.
சர்க்கரை நோயாளிகள் மருந்து மாத்திரை எடுத்து கொண்டாலும், உணவு கட்டுப்பாடு தான் அவர்களுக்கு அவசிய தேவையாக உள்ளது. ஆனால் சில ஆய்வுகள், டைப் 2 நீரிழிவு நோயாளிகள் மிதமாக குடிப்பது பலனளிப்பதாக கூறுகின்றன. இது உண்மையா? சர்க்கரை நோயாளிகள் குடிக்கலாமா? என்பது குறித்து இங்கு காணலாம்.
இதையும் படிங்க: இந்த 1 பொடியை சுடு தண்ணீரில் கலந்து குடிங்க.. சர்க்கரை நோய்க்கு குட் பை சொல்லுங்க!!
டயபெடோலாஜியா செய்த ஆய்வில், டைப் 2 வகை நீரிழிவு நோயாளிகளுக்கு குளுக்கோஸ், கொழுப்பு வளர்சிதை மாற்றத்தில் மதுபானம் குறிப்பிடத்தக்க நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் எல்லா மதுபானமும் இப்படி மாற்றத்தை ஏற்படுத்தாது. லைட் பீர் (4% மட்டும் ஆல்கஹால்) அருந்துபவர்களுக்கு இது பலனளிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இது அமெரிக்க ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
அமெரிக்க நீரிழிவு சங்கம், மற்ற மதுபானங்களை விடவும் பீரில் தான் கார்போஹைட்ரேட்டுகள் அதிகமாக இருப்பதால தெரிவிக்கிறது. ஒவ்வொரு பீர் வகையிலும் அதன் அளவு மாறுபடும்.
லைட் பீர்களை பொறுத்தவரை ஒரு ரவுண்ட் ஐந்து அல்லது அதற்கும் குறைவான கிராம் என்ற அளவில் கார்போஹைட்ரேட்டை உள்ளடக்கியுள்ளது. லைட் பீரில் தான் ஆல்கஹாலின் அளவு குறைவாக காணப்படும். ஆனாலும் வரம்பு மீறி அருந்தக் கூடாது.
இதையும் படிங்க: காலையில 'இத' மட்டும் செஞ்சா போதும்.. சர்க்கரையின் அளவு உயராது!
எவ்வளவு பீர் அருந்தலாம்?
ஒரு நாளில் 90 மிலி வரை அருந்தலாம். சர்க்கரை நோயாளிகள் மது அருந்த ஆசைபட்டால் லைட் பீர் அருந்தலாம். ஆனால் அன்றைய தினம் சாப்பிடும் மற்ற உணவுகளிலும் கவனமாக இருக்க வேண்டும். இதனை தினமும் பழகுவது தவறு.
எச்சரிக்கும் மருத்துவர்கள்:
பீரில் ஆல்கஹால் கலந்திருக்கிறது. இந்த ஆல்கஹால் நோயாளிகள் எடுத்து கொள்ளும் மருந்துகளின் விளைவில் மாற்றம் ஏற்படுத்தலாம். மருத்துவர்களின் கூற்றுபடி, பீர் அருந்துபவர்களுக்கு அதீத தூக்கம், குழப்பம் அல்லது நடப்பதில் கஷ்டம் ஆகியவை வரலாம். கல்லீரல் குளுக்கோஸை உருவாக்கவே போராடும் நிலைக்கு தள்ளப்படும் என அமெரிக்க நீரிழிவு சங்கம் தெரிவிக்கிறது. ஒருவருக்கு இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவாக இருக்கும்போது இப்படி நடக்கும்.
இரத்தச் சர்க்கரைக் குறைவைத் தடுக்க நினைக்கும் ஒருவர், பீர் குடிக்க நினைத்தால் வெறும் வயிற்றில் குடிக்கக் கூடாது. இந்த மாதிரி நேரத்தில் இரத்த சர்க்கரை அளவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். நீங்கள் பீர் குடிக்கும் போது போதுமான உணவை எடுத்து கொள்வது நல்லது. முடிந்தவரை ஆரோக்கியமாக இருப்பதற்கு பீரை குடிக்காமல் இருப்பதே நல்லது.
ஏனெனில் மேற்கூறிய ஆய்வுகள் அமெரிக்க நிறுவனங்களின் அடிப்படையிலானது. இந்தியாவின் உணவு பழக்கம், மது தயாரிப்பு முறை அனைத்தும் அமெரிக்காவில் இருந்து வேறுபட்டது. ஆகவே பீர் குடிக்க நினைத்தால் உங்கள் மருத்துவரிடம் ஆலோசியுங்கள். அதுவே சிறந்ததாக இருக்கும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D