Asianet News TamilAsianet News Tamil

இந்த 1 பொடியை சுடு தண்ணீரில் கலந்து குடிங்க.. சர்க்கரை நோய்க்கு குட் பை சொல்லுங்க!!

Jamun Seeds Powder Benefits :  சர்க்கரை நோயாளிகளுக்கு நாவல் பழம் கொட்டை வரப் பிரசாதம் ஆகும். அது ஏன் என்று இங்கு விரிவாக பார்க்கலாம்.

amazing health benefits of jamun seeds and know how to make jamun seed powder at home in tamil mks
Author
First Published Aug 8, 2024, 10:27 AM IST | Last Updated Aug 8, 2024, 10:46 AM IST

நாவல் பழம் அனைவரும் விரும்பும் சாப்பிடும் பழங்களில் ஒன்றாகும். இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. நாவல் பழம் மட்டுமின்றி , அதன் விதைகள், பட்டைகள், இலைகள் என அனைத்திலும் நன்மைகள் நிறைந்துள்ளது. இதனால் தான் இன்று வரை நாவல் பல மரம் பயன்பாடும், அதன் தேவையும் அதிகரித்து காணப்படுகின்றது.

ஊட்டச்சத்துக்கள்:

நாவல் பாலத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி, நார்ச்சத்து, கால்சியம், புரோட்டின், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, குளுக்கோஸ் போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது.

இதையும் படிங்க:  இந்தக் கோடையில் நாவல் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

நாவல் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

உங்களுக்கு தெரியுமா.. நாவல் பழம் இதயத்துக்கு நண்பன் என்று சொல்லுவார்கள். நாவல் பழம் நினைவாற்றலுக்கு ரொம்பவே நல்லது. அதுமட்டுமின்றி, இரத்த உற்பத்தியை அதிகரிக்க செய்யும். இதில் கலோரிகள் குறைவாக இருப்பதால் இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை குறைத்து, உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவுகிறது.  மேலும் இந்த பழம் உடலில் இரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

டைப்-2 நீரழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவை நிர்ணயிக்க நாவல் பழம் இலைகள் உதவுகிறது. நாவல் கொட்டைகள் சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்தாகும். அது மட்டுமன்றி கணையத்தில் இன்சுலின் சுரப்பி அதிகரிக்கவும் இதன் கொட்டை பெரிதும் உதவுகிறது. நாவல் பழ கொட்டையை பவுடராக்கி அதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரை அளவு குறையும் என்று உங்களுக்கு தெரியுமா? இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் அது உறுதி செய்யப்பட்டது. இதை நாம் நம்முடைய வீடுகளிலேயே செய்யலாம்.

இதையும் படிங்க:  கர்ப்ப காலத்தில் 'நாவல் பழம்' ஏன் சாப்பிட வேண்டும் தெரியுமா? சாப்பிட்டால் இந்த பிரச்சினைகள் வராதாம்..

நாவல் பல கொட்டை பவுடர் தயாரிக்கும் முறை:

இதற்கு நாவல் பழத்தின் கொட்டைகளை தொடர்ந்து ஒரு வாரம் நன்கு உலர வைக்கவும். பிறகு அதை இரண்டு துண்டாக உடைத்து வெயிலில் நன்கு காய வைக்கவும். கொட்டைக்குள் இருக்கும் பச்சை நிறம் முற்றிலும் காய்ந்தவுடன், அதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்கவும். பின் அதை சலித்து ஒரு காற்று புகாத கண்ணாடி டப்பாவில் வைத்துக் கொள்ளுங்கள்.

பயன்படுத்தும் முறை: நாவல் பழ கொட்டையின் பொடியை சூடான வெந்நீரில் ஒரு ஸ்பூன் கலந்து அந்த நீரை குடிக்கவும். இந்த நீரை தினமும் 2 வேளை இப்படி தொடர்ந்து குடித்து வந்தால், ஒரு மாதத்திற்குள் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும். மேலும் இரத்தமும் சுத்தமாகும், சிறுநீர் தொற்றுகளில் இருந்து விடுபடுவீர்கள். நீங்கள் விரும்பினால் இந்த பொடியுடன் வெந்தய பொடி, கடுக்காய் தோல் ஆகியவற்றையும் சமஅளவு எடுத்து அதில் கலந்து பயன்படுத்தலாம்.

மாத்திரைகளால் முடியாததை ஒரே மாதத்தில் சர்க்கரையை கட்டுப்படுத்த இந்த நாவல் நாவல் கொட்டை பொடிக்கு உண்டு என்பதை நீங்கள் அறிவீர்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios