MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • சர்க்கரை நோயாளிகள் இந்த ஒரு சாக்லேட் கண்டிப்பா சாப்பிடலாம்!! அது என்ன தெரியுமா? 

சர்க்கரை நோயாளிகள் இந்த ஒரு சாக்லேட் கண்டிப்பா சாப்பிடலாம்!! அது என்ன தெரியுமா? 

Diabetes And Chocolate : சர்க்கரை நோயை கட்டுப்படுத்த மருந்துகள் எடுத்து கொள்வது அவசியம். ஆனால் அதே சமயம் பிற வழிகளிலும் அதனை கட்டுப்படுத்த முடியும். 

3 Min read
Author : Kalai Selvi
| Updated : Sep 12 2024, 08:58 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Diabetes And Chocolate In Tamil

Diabetes And Chocolate In Tamil

இனிப்புகள் சர்க்கரை நோய்க்கு ஜென்ம விரோதி. சர்க்கரை நோய் பாதிப்புள்ளவர்கள் மறந்து கூட இனிப்பு பண்டங்களை சாப்பிடக்கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். ஆனால் பொதுவாக கொண்டாட்டமான நேரங்களில் இனிப்பு சாப்பிடுவது தான் உலக வழக்கம். 

நல்ல விஷயங்களை சொல்லும்போது வீட்டில் ஸ்வீட்ஸ், சாக்லேட் எதுவும் இல்லை என்றால், சர்க்கரையை அள்ளி வாயில் போட்டுக் கொள்வார்கள். இது எல்லோருக்கும் பொருந்தாது. நீரிழிவு நோயாளிகளை எந்த வடிவத்திலும் இனிப்பு சாப்பிடக் கூடாது என வலியுறுத்தப்படுகிறது. இதனால் அவர்களுக்கு சர்க்கரை அளவு ரத்தத்தில் அதிகரித்து உடல் உபாதைகள் ஏற்படலாம். சிலருக்கு உயிருக்கே உலை வைக்கும் அளவுக்கு ஆபத்து நேரிடலாம். ஆனால் இனிப்பு சாப்பிட விரும்பும் சர்க்கரை நோயாளிகளுக்கு டார்க் சாக்லேட் கொடுக்கலாம் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Diabetes And Chocolate In Tamil

Diabetes And Chocolate In Tamil

ஆம், உண்மைதான். டார்க் சாக்லேட் பல்வேறு விதமான நன்மைகளை தனக்குள் வைத்திருக்கிறது. சர்க்கரை நோயாளிகள் சிறிதளவு டார்க் சாக்லேட் சுவைப்பதால் அவர்களுடைய ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காது. ஆனால் இனிப்பு சாப்பிட்ட திருப்தி இருக்கும். இன்சுலின் உணர்திறன் மேம்படவும் டார்க் சாக்லேட் உதவுகிறது. 

டார்க் சாக்லேட் என்றதும் ஏதோ ஒரு சாக்லேட் என நினைக்க வேண்டாம். அதில் குறைந்தது 70% கோகோ திடப்பொருட்கள் இருக்க வேண்டும். ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு, டார்க் சாக்லேட் மட்டும் விதிவிலக்கு அல்ல. ஒரு நாளில் 28கி அளவுக்கு மட்டுமே டார்க் சாக்லேட் எடுத்து கொள்ளவேண்டும். உங்களுடைய ரத்த சர்க்கரை அளவை முறையாக கண்காணித்து, அதற்கேற்றபடி எடுத்து கொள்ளவேண்டும். இப்படி சரியான முறையில் எடுத்து கொண்டால் பல நன்மைகளை பெறமுடியும். 

இதையும் படிங்க:  நீரிழிவு நோயாளிகள் பீர் குடிப்பதால் என்ன மாற்றம் நிகழும் தெரியுமா? 

35
Diabetes And Chocolate In Tamil

Diabetes And Chocolate In Tamil

நீரிழிவு நோய், டார்க் சாக்லேட் தொடர்பு: 

நீங்கள் டார்க் சாக்லேட்டை உங்களுடைய உணவு பட்டியலில் சேர்க்கும் முன், டார்க் சாக்லேட்டுக்கும் நீரிழிவு நோய்க்கும் இடையே இருக்கும் தொடர்பை அறிந்து கொள்வது அவசியம். டார்க் சாக்லேட்டில் பாலிஃபீனால்கள் காணப்படுகின்றன. இவை  ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டிருக்கும். இந்த பண்புகள் நம் உடலில் தீங்கு விளைவிக்கும் மூலக்கூறுகள் எந்த பாதிப்பு ஏற்படுத்தாமல்  பாதுகாக்கிறது.

பாலிபினால்கள் உடலில்  இன்சுலின் உணர்திறனை அதிகரிக்க உதவும். இதனால்  உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் இன்சுலின் திறம்பட செயல்படத் தொடங்கும். இதனால் இரத்த சர்க்கரை அளவை நிர்வகிப்பதில் நல்ல மாற்றம் நிகழும். இப்படி அதிகரிக்கும் இன்சுலின் உணர்திறன் நீரிழிவு நோய் வருவதை தாமதப்படுத்தும் அல்லது முற்றிலும் தடுக்கும்.  ஆரம்பகாலத்தில் சர்க்கரை நோய் வராமல் தடுக்க டார்க் சாக்லேட் உதவுகிறது என ஆய்வுகள் கூறுகின்றன. 

45
Diabetes And Chocolate In Tamil

Diabetes And Chocolate In Tamil

டார்க் சாக்லேட் இயற்கையாகவே மனநிலையை மேம்படுத்தக் கூடியது. இதை அளவாக உண்பதால் நீரிழிவு தொடர்பான மன அழுத்தம்,  பதட்டத்தைத் தணிக்க உதவும். டார்க் சாக்லேட் சர்க்கரை நோய் கட்டுப்படுத்த மட்டுமல்ல, இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் பயன்படுகிறது. ஆகவே இதய  ஆரோக்கியமும் மேம்படும்.  

டார்க் சாக்லேட் உண்ணும் வழிமுறை? 

எல்லா சாக்லேட்களும் ஒரே மாதிரியாக தயாரிக்கப்பட்டது அல்ல. ஆகவே பாலிபினால் அதிகமுள்ள டார்க் சாக்லேட்டை மட்டும் தேர்வு செய்து சாப்பிடுங்கள். இதில் காணப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு நல்ல பலன்களை தரும். 70 சதவீதத்திற்கு மேலான கோகோ நிறைந்த டார்க் சாக்லேட் ஆரோக்கிய நன்மைகளை தரும். இந்த சாக்லேட்டிலிருந்து சில சத்துக்களை பெற முடியும். 

இதையும் படிங்க:  வேப்பிலைக்கு சர்க்கரை நோயை விரட்டும் தன்மை உண்டா?

55
Diabetes And Chocolate In Tamil

Diabetes And Chocolate In Tamil

டார்க் சாக்லேட் மற்ற சாக்லேட் போல அல்ல. குறைந்தபட்சம் நார்ச்சத்து உள்ளது. ஸ்டீவியாவோ, மற்ற சர்க்கரையுடன் இனிப்பூட்டப்படாத டார்க் சாக்லேட்டாகவோ இருந்தால் மட்டும் உண்ணுங்கள். அதையும் அளவோடு உண்ணுங்கள். அதிகமாக உண்பதால் இரத்த சர்க்கரை அளவு மாற வாய்ப்புள்ளது. ஏனெனில் இதில் அதிக கலோரியும், சர்க்கரையும் உள்ளது. 

நீரிழிவு நோயாளிகள் சுத்திகரிக்கப்பட்ட வெள்ளைச் சர்க்கரையால் தயார் செய்த எந்த உணவுகளையும் சாப்பிடுவதை தவிர்ப்பது  நல்லது. மொத்தமாகவே சர்க்கரை உணவுகளை உண்பதை தவிர்க்க அறிவுறுத்தவில்லை. அதை உங்களுடைய சரிவிகித உணவுக்கு பின்னர் ஒரு பகுதியாக ஏதேனும் ஒரு நாள் கொஞ்சம் சாப்பிடலாம். அதுவும் அதிகமாக அல்ல; ஒரு கடி கடிக்கலாம். இரண்டு துண்டு டார்க் சாக்லேட் மட்டுமே உண்பது நல்ல பலனளிக்கும். ஆனால் மீறினால் கோளாறுதான். கவனம்!!

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
ஆரோக்கிய குறிப்புகள்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Dry Fruit Buying: பாதாம், முந்திரி பளபளப்பாக இருக்கிறதா? வாங்கும் முன் இதைச் சரிபாருங்க
Recommended image2
8 மணி நேரம் தூங்கியும் சோர்வா? ஸ்ட்ரெஸ் ஸ்லீப் என்றால் என்ன? தவிர்ப்பது எப்படி?
Recommended image3
Immersion Rod vs Geyser: இரண்டில் எது செலவு குறைவு? இம்மர்ஷன் ராடா, கீசரா? உடனே படிங்க
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved