இந்தியாவின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் டிக்கெட் கட்டணம் எவ்வளவு தெரியுமா?
இந்தியாவின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் ஜனவரி 22 முதல் தனது சேவையைத் தொடங்குகிறது. இந்த அரை-உயர் வேக ரயில் 16 ஏசி பெட்டிகளுடன் வரும் இதன் ரயில் கட்டணங்கள் எவ்வளவு என்பதை பார்க்கலாம்.

வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்
இந்தியாவின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில், ஜனவரி 22 (வியாழன்) முதல் கமக்யா - ஹவுரா பாதையில் வணிக சேவையாக இயக்கப்பட உள்ளது. இரவு பயணத்தை வேகமாகவும், வசதியாகவும் மாற்றும் வகையில் இந்த புதிய அரை-உயர் வேக ரயிலை நோர்த் ஈஸ்ட் ஃப்ரண்டியர் ரயில்வே (NFR) இயக்கி பராமரிக்கிறது.
ஹவுரா கமக்யா வந்தே பாரத்
இந்த சேவையில் 27576 கமக்யா – ஹவுரா வந்தே பாரத் ஸ்லீப்பர் எக்ஸ்பிரஸ் ஜனவரி 22 முதல் தொடங்குகிறது. இதன் திரும்பும் சேவை 27575 ஹவுரா – கமக்யா ரயில் ஜனவரி 23 முதல் ஓடும். கமக்யா – ஹவுரா ரயில் புதன்கிழமை தவிர மற்ற நாட்களில், ஹவுரா – கமக்யா ரயில் வியாழக்கிழமை தவிர மற்ற நாட்களில் இயக்கப்படும்.
வந்தே பாரத் ஸ்லீப்பர் எக்ஸ்பிரஸ்
இந்த ரயில் ஹவுரா முதல் கமக்யா வரை செல்லும் போது மொத்தம் 13 நிலையங்களில் நிற்கும். முக்கியமாக பந்தல், நபத்விப் தாம், கட்வா, அசிம்கஞ்ச், நியூ ஃபராக்கா, மால்டா டவுன், அலுபாரி சாலை, நியூ ஜல்பைகுரி, ஜல்பைகுரி சாலை, நியூ கூச் பெஹார், நியூ அலிபுர்துவார், நியூ பொங்கைகான், ரங்கியா ஆகிய இடங்களில் நிற்கும். இதனால் மேற்கு வங்கம், பீஹார், அசாம் போன்ற மாநிலங்களை இணைக்கும் முக்கிய இணைப்பு கிடைக்கும்.
ரயில் நேரம் பட்டியல்
ரயிலின் நேரம் பார்க்கும்போது, 27575 ஹவுரா நிலையத்தில் இருந்து மாலை 6.20 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 8.20 மணிக்கு கமக்யா அடையும். மேலும் 27576 கமக்யாவில் இருந்து மாலை 6.15 மணிக்கு கிளம்பி அடுத்த நாள் காலை 8.15 மணிக்கு ஹவுராவை அடையும். முழு பயண நேரம் சுமார் 14 மணி நேரம்.
3ஏசி 2ஏசி 1 ஏசி கட்டணம்
இந்த ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயிலில் மொத்தம் 16 பெட்டிகள் உள்ளன. அதில் 11 AC 3-டயர், 4 AC 2-டயர், 1 AC முதல் வகுப்பு பெட்டி இடம்பெற்றுள்ளது. டிக்கெட் கட்டணம் வகுப்பின்படி மாறுபடும் நிலையில், 3AC ரூ.2,300, 2AC ரூ.3,000, 1AC ரூ.3,600 என்ற அளவில் ஒருவழி கட்டணம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

