- Home
- இந்தியா
- பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் மாற்றம்.! இனி மே மாதம் லீவு இல்லை! அரசு அதிரடி முடிவு?
பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் மாற்றம்.! இனி மே மாதம் லீவு இல்லை! அரசு அதிரடி முடிவு?
கேரளாவில் கோடை விடுமுறையை ஏப்ரல், மே மாதங்களுக்குப் பதிலாக ஜூன், ஜூலை மாதங்களுக்கு மாற்ற பரிசீலிக்கப்படுகிறது. இதுதொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு தேர்வு ஏப்ரல் மாதம் நடத்தப்பட்டு பள்ளிகளுக்கு மே மாதம் முதல் கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் அதிரடி மாற்றங்கள் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது கோடை விடுமுறையை ஏப்ரல், மே மாதங்களுக்குப் பதிலாக ஜூன், ஜூலை மாதங்களுக்கு மாற்ற கேரளா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது
இதுதொடர்பாக கல்வித்துறை அமைச்சர் சிவன் குட்டி வெளியிட்டுள்ள முகநூல் பக்கத்தில்: கேரளாவில் பள்ளிகளுக்கான ஆண்டு விடுமுறை ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் விடப்படுகிறது. இந்த மாதங்களில் மாநிலத்தில் நிலவும் வெப்பம் குழந்தைகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது என்பது உண்மைதான். அதே சமயம், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பெய்யும் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுப்பு அளிக்க வேண்டியுள்ளது. இதனால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுகிறது.
எனவே, பள்ளி விடுமுறையை ஏப்ரல் - மே மாதங்களில் இருந்து கனமழை பெய்யும் ஜூன் - ஜூலை மாதங்களுக்கு மாற்றுவது குறித்து பரிசீலிக்கப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மாற்றத்தால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்து பொதுமக்களிடமிருந்து கருத்துகளையும் ஆலோசனைகளையும் கேட்கப்பட்டு வருகிறது.
இந்த விடுமுறை மாற்றம் பரிந்துரை முட்டாள்தனமானது என்று காங்கிரஸ் ஆசிரியர் சங்கம் கருத்து தெரிவித்துள்ளது. கல்வித்துறையில் உள்ள உண்மையான பிரச்சினைகளில் இருந்து கவனத்தைத் திசை திருப்பவே அமைச்சர் இதுபோன்ற பரிந்துரைகளை முன்வைப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர். கேரளாவின் நிலவியல் மற்றும் காலநிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு கல்விக் காலண்டரை மாற்ற அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளனர். ஏப்ரல்-மே மாதங்களில் நிலவும் கடுமையான வெப்பம் தான் எதிர்ப்பாளர்கள் முன்வைக்கும் முக்கிய வாதம். 40 டிகிரி வரை வெப்பநிலை இருக்கும் போது வகுப்புகள் நடத்துவது சரியா என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளர்.