மாதத்தின் முதல் நாளே இவ்வளவு இடங்களில் மின்தடையா? எத்தனை மணி நேரம் தெரியுமா?
கோவையில் இன்று பல்வேறு பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை காமராஜ் சாலை, பாலன் நகர், சர்க்கரை செட்டியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

தமிழ்நாடு மின்சார துறை
தமிழகம் முழுவதும் தமிழ்நாடு மின்சார துறை(TANGEDCO) சார்பில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. கோடை வெயில் முடிந்த பிறகும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் 100 டிகிரி தாண்டி வெயில் சுட்டெரித்து வருவதால் எந்ரேமும் வீட்டில் ஃபேன், ஏசி இல்லாமல் இருக்க முடிவதில்லை. இதனால் மின்தேவையும் நாளுக்கு நாள் உச்சம் பெற்றுள்ளது.
மின்வாரிய ஊழியர்கள்
அதுமட்டுமல்ல தமிழகத்தில் சிறிது நேரம் மின்தடை ஏற்பட்டாலே மின்வாரிய ஊழியர்களுக்கு உடனே போன் செய்து எப்போது கரண்ட் வரும் பொதுமக்கள் கேட்கின்றனர். அந்த அளவுக்கு மின்சாரம் இல்லாமல் பொதுமக்களால் இருக்க முடியவதில்லை.
மாதாந்திர பராமரிப்பு பணி
இந்நிலையில் மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி காரணமாக மின் தடை செய்யப்படுவது வழக்கம். மின் தடை செய்யப்படும் நேரத்தில் சிறு சிறு பழுதுகள் சரி செய்வது, மின் வயர் செல்லும் பாதையில் மரங்கள் அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி மாதத்தின் முதல் நாளான இன்று தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை என்பதை பார்ப்போம்.
கோவை
காமராஜ் சாலை, பாலன் நகர், சர்க்கரை செட்டியார் நகர், ஹோப் கல்லூரி முதல் சிவில் ஏரோ, வி.ஆர்.புரம், என்.கே. பாளையம், கிருஷ்ணாபுரம், ஹவுசிங் யூனிட், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், ஜி.வி.ரெசிடென்சி, மசக்காளிபாளையம், உப்பிலிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலை 4 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.