செம்பரம்பாக்கம் ஏரியில் அதிர்ச்சி! அரைகுறை ஆடையுடன்! அலறியடித்து ஓடிய இளைஞர்கள்!
செம்பரம்பாக்கம் ஏரியில் பாதி வற்றிய நிலையில், உள்ளாடை மட்டும் அணிந்த ஆண் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. இறந்த நபர் யார், தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செம்பரம்பாக்கம் ஏரி
சென்னைக்கு முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்றாக செம்பரம்பாக்கம் ஏரி இருந்து வருகிறது. இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரி பாதி வற்றியுள்ள உள்ள நிலையில் ஏரியின் நடுவில் வறண்ட நிலத்தில் உள்ளாடை மட்டும் மாட்டியபடி எலும்புகூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஏரிக்குள் சென்ற போது மனித எலும்பு கூடு குறித்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கண்டெடுக்கப்பட்ட எலும்பு கூடு ஒரு ஆண் என்பதும் 30 முதல் 35 வயது மதிக்க தக்க உடையது என நசரத்பேட்டை போலீசார் விசாரனையில் தெரியவந்துள்ளது.
மனித எலும்புகூடு
இறந்த நபர் பல்லில் கிலிப்(பற்களில் மாட்டும் கிலிப்) மாட்டியுள்ள நிலையில் அதனை ஆதாரமாக வைத்து இறந்த நபர் அடையாளம் காண போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். வற்றிய ஏரியின் நடுவில் மனித எலும்புகூடு கிடந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இறந்து அழுகி பல நாட்களாக அங்கேயே கிடந்து எழும்பு கூடாக மாறிய அந்த நபர் யார் தற்கொலையா? கொலையா? என்பது குறித்து தடவியல் நிபுணர்கள் மூலம் நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் சாய் கணேஸ் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீஸ் விசாரணை
சமீபத்தில் காணாமல் போனவர்கள் குறித்து வந்த புகார்கள் மற்றும் மற்ற காவல் நிலையங்களிலும் காணாமல் போனவர்கள் குறித்து விசாரனை நடத்தி வருகின்றனர். மனித எழும்பு கூட்டை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஏரியில் தண்ணீர் இருந்த போது இந்த நபர் இறந்தாரா? என்றும் மேலும் ஏரியில் தண்ணீர் வற்றியுள்ள போது இந்த எலும்புக்கூடு எப்படி இங்கு வந்தது என்பது குறித்தும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.