- Home
- உடல்நலம்
- Custard Apple : சீத்தாப்பழம் குளிர்காலத்துல சாப்பிட வேண்டிய அற்புத பழம்!! ஏன்னு தெரிஞ்சா தினமும் ஒன்னு சாப்பிடுவீங்க
Custard Apple : சீத்தாப்பழம் குளிர்காலத்துல சாப்பிட வேண்டிய அற்புத பழம்!! ஏன்னு தெரிஞ்சா தினமும் ஒன்னு சாப்பிடுவீங்க
எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சீதாப்பழத்தை குளிர்காலத்தில் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்று இங்கு காணலாம்.

Health Benefits Of Custard Apple In Winter
தற்போது குளிர் காலம் என்பதால் சீதாப்பழ சீசனும் ஆரம்பமாகிவிட்டது. தித்திப்பான இனிப்பு சுவை கொண்ட இந்த பழத்தில் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. இவை பல ஆரோக்கிய நன்மைகளை நமக்கு வழங்குகிறது. இத்தகைய சூழ்நிலையில், குளிர்காலத்தில் தினமும் ஒரு சீத்தாப்பழம் சாப்பிட்டு வந்தால் என்னென்ன ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
பசியைக் கட்டுப்படுத்தும்...
சீதாப்பழத்தில் நார்ச்சத்து அதிகம். இது நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைத் தரும். நொறுக்குத் தீனி ஆசையைக் குறைக்கும். இதில் கலோரிகள் குறைவு என்பதால், உடல் எடை குறைக்க உதவுகிறது.
நிறைய ஊட்டச்சத்துக்கள்...
சீதாப்பழம் சுவைக்கு இனிப்பாக இருந்தாலும், இதில் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. வைட்டமின் சி, பி காம்ப்ளக்ஸ், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் கிடைக்கும். அளவோடு சாப்பிட்டால் எடை கட்டுக்குள் இருக்கும்.
வளர்சிதை மாற்றத்திற்கு ஆதரவு
இதில் உள்ள பொட்டாசியம், மெக்னீசியம் வளர்சிதை மாற்றத்தை சமன் செய்கிறது. இது தசைகளின் செயல்பாட்டை மேம்படுத்தி, கொழுப்பை எரிக்கும் செயல்முறைக்கு உதவுகிறது. இது உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது.
குடல் ஆரோக்கியத்திற்கு ஆதரவு
சீதாப்பழத்தில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்துகிறது. இது உணவை மெதுவாக ஜீரணிக்கச் செய்து, நீண்ட நேரம் திருப்தியாக உணர வைக்கிறது. இதனால் அதிகமாக சாப்பிடுவது தவிர்க்கப்படுகிறது.
இயற்கை சர்க்கரை...
செயற்கை இனிப்புகளைப் போலல்லாமல், சீதாப்பழத்தில் உள்ள சர்க்கரை நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்களுடன் இணைந்துள்ளது. இது இரத்த சர்க்கரை அளவை திடீரென அதிகரிக்காது. பசியைக் கட்டுப்படுத்த உதவும்.