MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • கருவாடு நல்லது தான்; ஆனா இவங்க சாப்பிட்டால் ஆபத்து!

கருவாடு நல்லது தான்; ஆனா இவங்க சாப்பிட்டால் ஆபத்து!

Dry Fish : கருவாட்டில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருந்தாலும், உடலில் சில பிரச்சனை உள்ளவர்கள் இதை சாப்பிடவே கூடாது. அவர்கள் யார் யார் என்று இங்கு பார்க்கலாம்.

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Feb 03 2025, 04:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
கருவாடு நல்லது தான்; ஆனா இவங்க சாப்பிட்டால் ஆபத்து!

கருவாடு நல்லது தான்; ஆனா இவங்க சாப்பிட்டால் ஆபத்து!

கருவாடு பலரும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்றாகும். மீனை சாப்பிடும் அளவிற்கு கூட நாம் கருவாடை அதிகமாக சாப்பிட மாட்டோம். சிலர் அசைவமாக இருந்தாலும் கருவாட்டை சாப்பிட மாட்டார்கள். காரணம் அதிலிருந்து வரும் வாசனை அவர்களுக்கு பிடிப்பதில்லை. உங்களுக்கு தெரியுமா.. அசைவ உணவுகளில் அதிக கொழுப்பு சத்து இல்லாத உணவுகள் எதுவென்றால் அது கருவாடு மற்றும் மீதான். கருவாட்டில் 80-85 சதவிகிதம் வரை புரதச்சத்து உள்ளன.

24
கருவாடு சாப்பிடுவதன் நன்மைகள்:

கருவாடு சாப்பிடுவதன் நன்மைகள்:

- எலும்புகள் மற்றும் பற்களை உறுதிப்படுத்தும்.

- நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தக்கூடிய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இதில் அதிகமாக உள்ளன. எனவே சளி, இருமல் உள்ளவர்களுக்கு கருவாட்டுக் குழம்பு ரொம்பவே நல்லது.

- நீர்ப்பை, சினைப்பை, கருப்பை போன்ற பிரச்சனைகள் பெண்களுக்கு அதிகம் ஏற்படும் அவற்றை சரி செய்ய இது உதவும்.

- கருவாடு வாதம், பித்தம், ரத்த ஓட்டம் போன்ற பிரச்சினைகளை குணமாகும்.

- பாலூட்டும் பெண்கள் பால் சுறா கருவாடு சாப்பிட்டால் பால் உற்பத்தி அதிகரிக்கும்.

இதையும் படிங்க:  வீடே மணக்கும் கிராமத்து கருவாட்டு குழம்பு... ஒருமுறை செய்ங்க.. திரும்பத் திரும்ப செய்வீங்க!

34
யாரெல்லாம் கருவாடு சாப்பிடவே கூடாது?

யாரெல்லாம் கருவாடு சாப்பிடவே கூடாது?

இதய நோய், செரிமான பிரச்சனை, சரும பிரச்சனை, சிறுநீரக பிரச்சனை  போன்ற பிரச்சினை உள்ளவர்கள் கருவாடு சாப்பிடவே கூடாது. முக்கியமாக, இரத்தம் அழுத்தம் மற்றும்  சர்க்கரை நோய் அதிகம் உள்ளவர்கள் கருவாட்டை தொட்டுக் கூட பார்க்கவே கூடாது. சரும பிரச்சனை அல்லது ஒவ்வாமை இருப்பவர்கள் கூட கருவாடு. மீறினால் தடிப்புகள், அரிப்பு, சொறி போன்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

இதையும் படிங்க:  நெத்திலி கருவாடு வறுவல்.. இப்படி செஞ்சி சாப்பிடுங்க.. டேஸ்டா இருக்கும்!

44
எந்தெந்த உணவுகளுடன் கருவாடு சாப்பிடக்கூடாது?

எந்தெந்த உணவுகளுடன் கருவாடு சாப்பிடக்கூடாது?

கருவாடு சாப்பிடும் போது மோர், தயிர், கீரை போன்ற உணவுகளை சாப்பிடக்கூடாது. இது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். சில சமயங்களில் புட்பாய்சன் ஆகிவிடும். 

இப்போதும் சாப்பிடாதே! 

தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கும் நாளில் கருவாடு சாப்பிட வேண்டாம். முக்கியமாக சைனஸ் தொல்லை, சளி, இருமல், ஆஸ்துமா பிரச்சனை இருப்பவர்கள் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்த பிறகு கருவாடு சாப்பிட்டால் பிரச்சினை மேலும் அதிகமாகும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
ஆரோக்கிய குறிப்புகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
டயட்டில் இருப்பவரா நீங்கள்.? வெள்ளை அரிசி vs பழுப்பு அரிசி – எது எடை குறைக்க உதவும்?
Recommended image2
5 வயது குழந்தை முதல் 75 வயது முதியவர் வரை… தினமும் எவ்வளவு நேரம் நடக்க வேண்டும்?
Recommended image3
பாகிஸ்தானில் மக்களை கொல்லும் 600,000 மருத்துவர்கள்... கட்டுக்கடங்காத மரண வியாபாரிகள்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved