MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • Egg Curry: உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு.. மணக்க மணக்க காரசாரமான கிராமத்து ஸ்டைல் ரெசிபி!

Egg Curry: உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு.. மணக்க மணக்க காரசாரமான கிராமத்து ஸ்டைல் ரெசிபி!

Egg Curry: உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு செய்வது எப்படி தெரியுமா? தேங்காய், முந்திரி, சோம்பு, மிளகு சேர்த்து அரைத்த மசாலாவில் முட்டையை அப்படியே உடைத்து ஊற்றி சுவையான குழம்பு செய்வதற்கான எளிய செய்முறையைத் தெரிந்துகொள்ளுங்கள்.

3 Min read
Author : Vishnupriya
Published : Oct 30 2026, 11:13 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
113
உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு
Image Credit : Gemini AiEgg Curry

உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு

தினமும் ஒரே மாதிரி முட்டை ஆம்லெட், முட்டை பொரியல், முட்டை தொக்கு என்று செய்து சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா? அப்படியானால், ஒருமுறை இந்த உடைத்து ஊற்றிய முட்டை குழம்பைச் செய்து பாருங்கள். கொதிக்கும் காரசாரமான மசாலா குழம்பில் முட்டையை அப்படியே உடைத்து ஊற்றி, அது வெந்து வரும்போது கிடைக்கும் சுவையே தனிதான்.

முட்டையை வேகவைத்து உரித்து குழம்பில் சேர்க்க வேண்டிய வேலையும் இல்லை. குறைந்த நேரத்தில், வீட்டில் இருக்கும் எளிய பொருள்களை வைத்தே இந்த அசத்தலான குழம்பைச் செய்துவிடலாம். குறிப்பாக, சூடான சாதத்தில் இந்தக் குழம்பை ஊற்றி, அதனுடன் முட்டையைப் பிசைந்து சாப்பிட்டால் இன்னும் ஒரு கவளம் சாதம் கேட்கத் தோன்றும். இட்லி, தோசை, சப்பாத்திக்கும் சூப்பரான சைட் டிஷ் இது.

வாருங்கள், சுவையான உடைத்து ஊற்றிய முட்டை குழம்பை எப்படிச் செய்வது என்று பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
213
தேவையான பொருள்கள்
Image Credit : Gemini AiEgg Curry

தேவையான பொருள்கள்

முட்டை மற்றும் குழம்பிற்கு

  • முட்டை - 4
  • பெரிய வெங்காயம் - 2
  • தக்காளி - 2
  • கருவேப்பிலை - ஒரு கொத்து
  • கொத்தமல்லித் தழை - சிறிதளவு
  • எண்ணெய் - தேவையான அளவு
  • உப்பு - தேவையான அளவு
  • குழம்பு மசாலா - 1 டீஸ்பூன்
  • கறி மசாலா - 1 டீஸ்பூன்
  • தண்ணீர் - தேவையான அளவு


முதல் விழுது அரைக்க

  • இஞ்சி - ஒரு சிறிய துண்டு
  • பூண்டு - 6 பல்
  • பச்சை மிளகாய் - 2
  • மல்லித்தழை - சிறிதளவு


 தேங்காய் மசாலா அரைக்க

  • துருவிய தேங்காய் - அரை கப்
  • முந்திரி - 6 முதல் 8
  • சோம்பு - 1 டீஸ்பூன்
  • சீரகம் - அரை டீஸ்பூன்
  • மிளகு - அரை டீஸ்பூன்


தாளிக்க

  • பட்டை - ஒரு சிறிய துண்டு
  • கிராம்பு - 3
  • பிரியாணி இலை - 1
  • ஏலக்காய் - 2
  • கருவேப்பிலை - சிறிதளவு
313
உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு செய்முறை - படி 1
Image Credit : Gemini AiEgg Curry

உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு செய்முறை - படி 1

இஞ்சி பூண்டு விழுது அரைத்தல்

முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் மல்லித்தழை ஆகியவற்றைச் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றி கெட்டியான விழுதாக அரைத்து எடுத்துத் தனியாக வைக்கவும்.

413
படி 2
Image Credit : Gemini AiEgg Curry

படி 2

தேங்காய் மசாலா அரைத்தல்

அடுத்ததாக அதே மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், முந்திரி, சோம்பு, சீரகம், மிளகு ஆகியவற்றைச் சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நைசாக விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

தக்காளியை அரைத்தல்

அதேபோல், தக்காளியை மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைத்து விழுதாகத் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். இதனால் குழம்பில் தக்காளி நன்றாகக் கலந்து சுவை அதிகரிக்கும்.

513
படி 3
Image Credit : Gemini AiEgg Curry

படி 3

தாளித்து வெங்காயம் வதக்குதல்

இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் காயவிடவும். எண்ணெய் சூடானதும் பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஏலக்காய் சேர்த்துப் பொரியவிடவும். பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை நன்றாக வதக்கவும்.

613
படி 4
Image Credit : Gemini AiEgg Curry

படி 4

மசாலா விழுது சேர்த்தல்

வெங்காயம் நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அதனுடன் குழம்பு மசாலா, கறி மசாலா சேர்த்து மிதமான தீயில் நன்றாகக் கிளறவும்.

713
படி 5
Image Credit : Gemini AiEgg Curry

படி 5

தக்காளி விழுது சேர்த்தல்

அடுத்ததாக அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதைச் சேர்த்து நன்றாகக் கிளறவும். தக்காளியின் பச்சை வாசனை நீங்கி, மசாலாவில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்க வேண்டும்.பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடவும்.

813
படி 6
Image Credit : Gemini AiEgg Curry

படி 6

தேங்காய் மசாலா சேர்த்தல்

குழம்பு நன்றாகக் கொதிக்கத் தொடங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் மசாலா விழுதைச் சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் கொதிக்கவிடவும். தேங்காய், முந்திரி சேர்த்த மசாலா குழம்புடன் நன்றாகக் கலந்து ஓரளவு கெட்டியான பதத்திற்கு வந்ததும் அடுத்த கட்டத்திற்குச் செல்லலாம்.

913
படி 7
Image Credit : Gemini AiEgg Curry

படி 7

முட்டையை உடைத்து ஊற்றுதல்

இப்போது தான் இந்தக் குழம்பின் முக்கியமான கட்டம். முதலில் முட்டைகளை ஒவ்வொன்றாக ஒரு சிறிய கிண்ணத்தில் உடைத்து வைத்துக் கொள்ளவும். குழம்பு நன்றாகக் கொதித்துக் கொண்டிருக்கும்போது, ஒவ்வொரு முட்டையாகக் கவனமாகக் குழம்பில் ஊற்றவும். முட்டைகளை ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் சிறிது இடைவெளி விட்டு ஊற்றுவது நல்லது.

1013
படி 8
Image Credit : Gemini AiEgg Curry

படி 8

முட்டையை வேகவைத்தல்

முட்டையை ஊற்றிய உடனே குழம்பைக் கிளறக் கூடாது. அப்படிச் செய்தால் முட்டை உடைந்து குழம்புடன் கலந்து விடும். எனவே, கடாயை மூடி வைத்து மிதமான தீயில் சுமார் 5 முதல் 7 நிமிடங்கள் வேகவிடவும். முட்டையின் வெள்ளைக்கரு நன்றாக வெந்து உறைந்த பிறகு, கரண்டியால் மெதுவாகக் குழம்பைக் கிளறவும்.

1113
படி 9
Image Credit : Gemini AiEgg Curry

படி 9

இறுதியாக கொத்தமல்லி சேர்த்தல்

கடைசியாகப் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழையைத் தூவி அடுப்பை அணைத்துவிடவும். சுவையான உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு தயார்.

1213
எதனுடன் சேர்த்து சாப்பிடலாம்?
Image Credit : Gemini AiEgg Curry

எதனுடன் சேர்த்து சாப்பிடலாம்?

இந்த உடைத்து ஊற்றிய முட்டை குழம்பை சூடான சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும். அதுமட்டுமின்றி இட்லி, தோசை, சப்பாத்தி, பரோட்டா, இடியாப்பம் ஆகியவற்றுடனும் சேர்த்துச் சாப்பிடலாம்.

1313
உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு சுவையாக வர சில குறிப்புகள்
Image Credit : Gemini AiEgg Curry

உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு சுவையாக வர சில குறிப்புகள்

  • முட்டையை நேரடியாகக் குழம்பில் உடைப்பதற்குப் பதிலாக முதலில் ஒரு சிறிய கிண்ணத்தில் உடைத்து வைத்தால், முட்டை கெட்டுப்போயிருந்தால் அதைத் தவிர்க்கலாம்.
  • முட்டையை ஊற்றும்போது குழம்பு நன்றாகக் கொதித்துக் கொண்டிருக்க வேண்டும்.
  • முட்டை ஊற்றியதும் உடனடியாகக் கிளறக்கூடாது. குறைந்தது 5 நிமிடங்கள் அப்படியே வேகவிட வேண்டும்.
  • தேங்காயுடன் முந்திரி சேர்ப்பதால் குழம்பு அடர்த்தியாகவும் கிரீமியான சுவையுடனும் இருக்கும்.
  • முட்டை உடையாமல் இருக்க மிதமான தீயில் வேகவைப்பது அவசியம்.

About the Author

V
Vishnupriya
கா. விஷ்ணுபிரியா செய்தித் துறையில் 3 வருடம் அனுபவம் கொண்டவர். ETV Bharat இணையத்தளத்தில் பணியாற்றிய இவர் தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் மல்டிமீடியா ஜர்னலிஸ்டாக பணிபுரிகிறார். இவர் அரசியல், சினிமா மற்றும் லைஃப் ஸ்டைல் உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
உணவு
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Vegetables: மழைக்காலத்தில் 'இந்த' 4 காய்கறிகளை சாப்பிடாதீங்க.. ஏன் தெரியுமா? முழு விவரம்!
Recommended image2
Idli Batter Fish Fry : மீன் வறுவல் மொறுமொறுப்பாக வர இட்லி மாவு சேர்த்துப் பாருங்க..ஹோட்டல் ஸ்டைல் சுவை வீட்டிலேயே!
Recommended image3
Chettinad Onion Rasam : வீடே மணக்கும் செட்டிநாடு வெங்காய ரசம்.. ஹோட்டல் ஸ்டைலில் வீட்டிலேயே செய்து அசத்தலாம்!
Related Stories
Recommended image1
Chettinad Onion Rasam : வீடே மணக்கும் செட்டிநாடு வெங்காய ரசம்.. ஹோட்டல் ஸ்டைலில் வீட்டிலேயே செய்து அசத்தலாம்!
Recommended image2
Idli Batter Fish Fry : மீன் வறுவல் மொறுமொறுப்பாக வர இட்லி மாவு சேர்த்துப் பாருங்க..ஹோட்டல் ஸ்டைல் சுவை வீட்டிலேயே!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved