- Home
- உடல்நலம்
- Bread : பிரெட் விரும்பி சாப்பிடும் நபரா? இந்த 5 பேர் மறந்தும் சாப்பிடக் கூடாது தெரியுமா?
Bread : பிரெட் விரும்பி சாப்பிடும் நபரா? இந்த 5 பேர் மறந்தும் சாப்பிடக் கூடாது தெரியுமா?
காலை உணவாக, சிற்றுண்டியாக என எல்லா சூழ்நிலைகளிலும் பசியை போக்க பிரெட் சாப்பிடலாம். ஆனால் சிலர் பிரெட் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இந்த பதிவில் யாரெல்லாம் பிரெட் சாப்பிடக் கூடாது என்று பார்க்கலாம்.

Who Should Avoid Bread
பிரெட் நம்முடைய அன்றாட உணவில் இன்றியமையாத ஒரு பகுதியாக மாறிவிட்டது. காலை உணவு, ஈவினிங் ஸ்நாக்ஸ் என எல்லாம் நேரங்களிலும் பசியை போக்க கூடியதாக இது இருந்து வருகிறது. கோதுமையில் தயாரிக்கப்படும் பிரெட்டில் நார்ச்சத்து, வைட்டமின்கள் தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை செரிமானத்தை சீராக வைக்கவும், உடலுக்கு ஆற்றலை வழங்கவும் உதவுகிறது. ஆனால் வெள்ளை பிரட்டில் நார்ச்சத்து குறைவாகவும், சர்க்கரை மற்றும் கொழுப்பு அதிகமாகவும் உள்ளதால், அவை உடல் எடையை அதிகரிக்க செய்யும்.
Bread
கார்போஹைட்ரேட் நிறைந்த இது உடலுக்கு ஆற்றலை அளித்தாலும் அதிகப்படியான கார்போஹைட்ரேட் சிலருக்கு பல உடல்நிலை பிரச்சினைகளை ஏற்படுத்தி விடும் எனவே யாரெல்லாம் பிரெட் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்பது பற்றி இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.
யாரெல்லாம் பிரெட் சாப்பிடக்கூடாது?
1. சர்க்கரை நோயாளிகள் :
உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால் பிரெட் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இதில் இருக்கும் கார்போஹைட்ரேட் இரத்த சர்க்கரை அளவை உயர்த்தி விடும். வேண்டுமானால் முழு தானியங்கள் உள்ள பிரட்டை குறைந்த அளவில் சாப்பிடலாம்.
2. மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் :
சில வகையான பிரெட் ஆனது மலச்சிக்கல் பிரச்சனையை ஏற்படுத்தி விடும். எனவே உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால் பிரெட் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்
3. அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் :
சில பிரெட்களில் கொலஸ்ட்ரால் அதிகமாகவே இருக்கும். எனவே உங்களது உடலில் ஏற்கனவே கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால் நீங்கள் பிரட் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
4. உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் :
பிரெட்டில் அதிக அளவு கலோரிகள் இருப்பதால் உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் பிரெட்டை தவிர்ப்பது நல்லது. விரும்பினால் குறைவாக எடுத்துக் கொள்ளலாம்.
5. செலியாக் நோய் இருப்பவர்கள் :
குளுட்டன் என்னும் ஒரு புரதத்தை உடல் ஏற்காத நிலையை தான் செலியாக் நோய் என்று சொல்லுவார்கள். பிரெட்டில் உள்ளதால் இந்த பிரச்சனை உள்ளவர்கள் பிரெட்டை முற்றிலும் தவிர்க்கவும்.
நினைவில் கொள் :
பிரட் ஒரு சூப்பரான ஃபுட் ஆனால் அதை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை பின்பற்றினால் எந்தவொரு நோய்கள் தாக்காமல் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ முடியும்.