பச்சை பட்டாணியில் சத்துக்கள் நிறைய இருக்கு; ஆனா இவங்க மட்டும் சாப்பிடக்கூடாது!
Green Peas Health Risks : பச்சை பட்டாணியில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருந்தாலும், சிலர் அதை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அது ஏன் தெரியுமா?

பச்சை பட்டாணியில் சத்துக்கள் நிறைய இருக்கு; ஆனா இவங்க மட்டும் சாப்பிடக்கூடாது!
பச்சை பட்டாணி சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். இதில் பச்சை பட்டாணி புலாவ், கறி போன்ற பல ரெசிபிகள் செய்ய பயன்படுத்தப்படுகிறது மற்றும் பல வகையான உணவுகளும் தயாரிக்கப்படுகிறது. இது சாப்பிடுவதற்கு சுவையாக இருப்பது மட்டுமல்லாமல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதில் நார்ச்சத்து, புரதம், இரும்புச்சத்து போன்ல டைமிங் மாங்கனீஸ் வைட்டமின்கள், ஆக்சிஜனேற்றிகள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவ்வளவு ஊட்டச்சத்துக்கள் இருந்த போதிலும் சிலர் பட்டாணி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் தெரியுமா? இந்த பதிவில் யாரெல்லாம் பச்சை பட்டாணி சாப்பிடு கூடாது? அதற்கான காரணம் என்ன என்பதை பற்றி அறிந்து கொள்ளலாம்.
வாயு மற்றும் வீக்க பிரச்சனை உள்ளவர்கள்:
நீங்கள் வாயு மற்றும் வீக்க பிரச்சனைகள் அவதிப்படுகிறீர்கள் என்றால், பச்சை பட்டாணியை சாப்பிட வேண்டாம். ஏனெனில் இதில் அதிகளவு கார்போஹைட்ரேட்டுகள் இருப்பதால் இது செரிமான செயல்முறையை மோசமாக பாதிக்கும். இதனால் வயிற்று வலி மற்றும் வீக்கத்தை மேலும் மோசமாக்கும்.
மூட்டு வலி அல்லது யூரிக் அமிலம் உள்ளவர்கள்:
உங்களுக்கு மூட்டு வலி அல்லது யூரிக் அமில பிரச்சனை இருந்தால் நீங்களும் பட்டாணி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், பச்சை பட்டாணியில் மற்ற பருப்புகளை விட அதிகளவு பியூரின்கள் உள்ளதால் இது யூரிக் அமிலமாக மாறக்கூடும். எனவே இது உங்களது பிரச்சினையை இன்னும் மோசமாக்கும்.
இதையும் படிங்க: அனைவருக்கும் ஏற்ற ஹெல்த்தி "பச்சை பட்டாணி சப்பாத்தி" செய்யலாம் வாங்க!
சிறுநீரக கற்கள் உள்ளவர்கள்:
சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் ஒருபோதும் பச்சை பட்டாணி சாப்பிடவே கூடாது. இது சிறுநீரக பிரச்சனையை மேலும் ஏற்படுத்தும். ஏனெனில், பச்சை பட்டாணியில் உடலில் யூரிக் அமிலத்தை உற்பத்தி செய்யும் பியூரின்கள் உள்ளதால், இது சிறுநீரக கற்களை குவித்து படிகங்களை உருவாக்கி சிறுநீரக கற்களாக மாறிவிடும்.
சர்க்கரை நோயாளிகள்:
நீங்கள் சர்க்கரை நோயாளியாக இருந்தால் பச்சை பட்டாணி சாப்பிடுவது நல்லதல்ல. ஏனெனில் பச்சை பட்டாணியில் சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் இருப்பதால், இது சர்க்கரை அளவை அதிகரிக்க செய்யும். எனவே நீங்கள் மருத்துவரின் ஆலோசித்தப் பிறகே சாப்பிட வேண்டும்.
இதையும் படிங்க: தேங்காய் பாலும், பட்டாணியும் வச்சு இப்படி ஒருமுறை பிரியாணி செஞ்சு பாருங்க... அடிக்கடி இதைத்தான் செய்வீங்க!
பச்சை பட்டாணி சாப்பிடுவது நன்மைகள்:
- இதில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால் ஜீரண சக்திக்கு பெரிதும் உதவுகிறது. மேலும் இது குடலில் நல்ல பாக்டீரியாவை அதிகரித்து உடன் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இதில் இருக்கும் நார்ச்சத்து ஆனது மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.
- பச்சை பட்டாணியானது இதய ரத்த குழாய்களில் கொழுப்பு சேருவதை தடுக்க உதவுகிறது.
- பச்சை பட்டாணியில் இருக்கும் பொட்டாசியம் உயரத்தை அழுத்தத்தை குறைத்து சீரான ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது இதனால் இதய நலமும் பாதுகாக்கப்படும்.
- பச்சை பட்டாணியில் இருக்கும் இரும்புச்சத்து மற்றும் தாமிரம் ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்யும்.