Asianet News TamilAsianet News Tamil

தேங்காய் பாலும், பட்டாணியும் வச்சு இப்படி ஒருமுறை பிரியாணி செஞ்சு பாருங்க... அடிக்கடி இதைத்தான் செய்வீங்க!

Coconut Milk Peas Biryani Recipe : இந்த கட்டுரையில் தேங்காய் பால் பட்டாணி பிரியாணி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

how to make coconut milk peas biryani recipe in tamil mks
Author
First Published Aug 7, 2024, 1:33 PM IST | Last Updated Aug 7, 2024, 1:34 PM IST

தினமும் மதியம் ஒரே மாதிரியான உணவுகள் சாப்பிட்டு போரடித்து விட்டதா? வித்தியாசமான சுவையில், விரைவில் செய்யக்கூடிய ரெசிபி சாப்பிட வேண்டும் என்று விரும்புகிறீர்களா? அப்படியானால் தேங்காய் பால் பட்டாணி பிரியாணி செய்து சாப்பிடுங்கள். நிஜமாகவே இந்த ரெசிபி சாப்பிடுவதற்கு அட்டகாசமாக இருக்கும், செய்வதும் சுலபம். ஒருமுறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த ரெசிபி செய்து கொடுங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுபவர்கள். இந்த ரெசிபியை நீங்கள் குழந்தைகளின் மதிய உணவிற்கு கூட செய்து கொடுக்கலாம். சரி வாங்க.. இப்போது இந்த கட்டுரையில் தேங்காய் பால் பட்டாணி பிரியாணி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

பாஸ்மதி அரிசி - 1 கப்
பட்டாணி - 1/2 கப்
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தேங்காய் பால் - 1 கப் (கெட்டியானது)
பச்சை மிளகாய் - 3
கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
தேங்காய் - 3 ஸ்பூன் (துருவியது)
இஞ்சி - 1/2 இன்ச்
பூண்டு - 4 
பிரியாணி இலை - 1
பட்டை - 1/4 இன்ச்
கிராம்பு - 2
ஏலக்காய் - 1
வரமிளகாய் - 2
புதினா இலை - 1 கப்
உப்பு - சுவைக்கு ஏற்ப
நெய் - 1 ஸ்பூன்
எண்ணெய் - 1 ஸ்பூன்
தண்ணீர் - 1/2 கப்

செய்முறை: 

  • தேங்காய் பால் பட்டாணி பிரியாணி செய்ய முதலில், எடுத்து வைத்த பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி சுமார் 15 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் புதினா இலை, கரம் மசாலா தூள், பச்சை மிளகாய், வர மிளகாய், துருவிய தேங்காய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்கு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
  • இப்போது ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் நெய், எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். பிறகு நறுக்கிய வெங்காயத்தையும் அதில் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை இதனுடன் சேர்த்து, அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின் இதில் பச்சைப்பட்டாணி, சுவைக்கேற்ப உப்பு மற்றும் பாஸ்மதி அரிசியை ஆகியவற்றைச் சேர்த்து ஒரு முறை கிளறி விடுங்கள். பிறகு தேங்காய் பால் மற்றும் தண்ணீரை ஊற்றி ஒரு முறை கிளறி விடுங்கள். 
  • இப்போது குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கவும். குக்கரில் தம் போன பிறகு குக்கரின் மூடியை திறந்து ஒரு முறை கிளறி விடுங்கள். அவ்வளவுதான் அட்டகாசமான சுவையில் தேங்காய் பால் பட்டாணி பிரியாணி தயார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios