இந்த '4' பொருள் போதும்! தண்ணீரில் கலந்து குடிக்கங்க .. கொழுப்பு கரையும்!
வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து தொங்கும் தொப்பையை குறைப்பது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.

Ingredients to Help Reduce Belly Fat : தற்போது பெரும்பாலான எடை அதிகரிக்கும் மற்றும் தொங்கும் தொப்பையால் அவதிப்பட்டு வருகிறார்கள். இது உடல் தோற்றத்தை கெடுப்பது மட்டுமில்லாமல் பல நோய்கள் வருவதற்கும் வழிவகுக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்க உடலில் ஹார்மோன்கள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் சரியான அளவில் இருப்பது ரொம்பவே முக்கியம். அதுபோலவே எடையும் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். முக்கியமாக, அதிகப்படியான எடை அல்லது குறைவான எடை ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இத்தகைய சூழ்நிலையில் விடப்பாடியான தொப்பையை குறைக்க தண்ணீரில் இந்த 4 பொருட்களை ஊற வைத்து சாப்பிட்டால் விரைவில் தொப்பையும் மற்றும் எடை குறையும். அவை என்னவென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பாதாம்:
பாதாமில் நார்ச்சத்து, புரதம் வைட்டமின் ஈ மற்றும் ஒமேகா- 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. அவை செரிமானத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் தொப்பை மற்றும் எடையே குறைக்க உதவும். மேலும் இதை தினமும் சாப்பிடுவதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். இதற்கு பிறகு தூங்கும் முன் 4-5 பாதாமை தண்ணீரில் ஊற வைத்து பிறகு மறுநாள் காலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இப்படி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றிலிருந்து கொழுப்பு எரிக்கப்படும். மேலும் பாதாமில் மெக்னீசியமும் அதிகமாக உள்ளதால் சர்க்கரைக்கான பசியை குறைக்கும்.
வால்நட்:
வால்நட்டில் நார்ச்சத்து மற்றும் ஒமேகா- 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளதால், தினமும் காலை வெறும் வயிற்றில் ஊற வைத்த வால்நட் சாப்பிட்டு வந்தால் எடை இழப்புக்கு பெரிதும் உதவும் மற்றும் தொப்பையும் குறையும். ஊறவைத்த வால்நட் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் மற்றும் செரிமானத்தை மேம்படுத்தும்.
இதையும் படிங்க: நடக்க கூட வேணாம்...உட்கார்ந்த இடத்திலேயே ஈஸியாக உடல் எடையை குறைக்கலாம்
பிளம்ஸ்:
பிளம்ஸில் இரும்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளதால் தினமும் உலர் பிளம்ஸ் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். மேலும் இது வயிற்றை சுத்தம் செய்து, உடல் பருமனை குறைக்கும். முக்கியமாக இது ரத்த சோகை உள்ளவர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும்.
இதையும் படிங்க: ஜிம் போகாமலே ஈசியா உடல் எடையை குறைக்கலாம்! எப்படி தெரியுமா?
உலர் திராட்சை:
உடல் பருமனை குறைக்க உலர் திராட்சை பெரிதளவும் உதவும். ஏனெனில், உலர் திராட்சியில் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளது. எனவே, இதை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் நச்சு நீக்கப்படும். இதற்கு இரவு தூங்கும் முன் 5-7 ஊறவைத்த திராட்சையை சாப்பிட்டு வந்தால், உடல் மெலிதாகும் மற்றும் உடலில் வலிமையாகும்.