- Home
- உடல்நலம்
- Health Tips : 40 வயசுக்கு மேல ஆகுதா? அப்ப இந்த '5' உணவுகளை சாப்பிடாம இருக்கதுதான் நல்லது!
Health Tips : 40 வயசுக்கு மேல ஆகுதா? அப்ப இந்த '5' உணவுகளை சாப்பிடாம இருக்கதுதான் நல்லது!
உங்களுக்கு 40 வயசு தாண்டிவிட்டால் சில உணவுகள் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. அவை என்னென்ன என்று இங்கு பார்க்கலாம்.

Foods to Avoid After 40
ஒருவருக்கு 40 வயசு ஆகிவிட்டாலே அவர் வாழ்க்கையின் நடுப்பக்கத்தில் நுழைந்துவிட்டார் என்று அர்த்தம். மேலும் இந்த காலகட்டத்தில் உடலை பத்திரமாக பார்த்துக் கொண்டால் நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் வாழ முடியும். ஏனெனில் சர்க்கரை நோய் முதல் இதய நோய் வரை என ஏராளமான உடல்நல பிரச்சினைகள் வரும் காலம் இது. ஆகவே, உங்களுக்கு 40 வயது ஆரம்பித்தவுடன் முதன் முதலில் நீங்கள் சாப்பிடும் உணவில் அதிகம் கவனம் செலுத்துவது ரொம்ப ரொம்ப முக்கியம். இதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள 5 வகை உணவுகளை 40 வயதிற்கு பிறகு சாப்பிடுவதை நிறுத்திக் கொள்வது நல்லது என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். அவை என்னென்ன என்று இப்போது இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
சிவப்பு இறைச்சி :
சிவப்பு இறைச்சியில் புரதம் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. இதை 40 வயதிற்கு முன் எடுத்துக் கொள்வது நல்லது. ஆனால் 40 வயதிற்கு பிறகு சாப்பிடுவது நல்லதல்ல. ஏனெனில், ஜீரணிக்க கடினமாக இருக்கும். அது மட்டுமல்லாமல் சிவப்பு இறைச்சியில் இருக்கும் கொலஸ்ட்ரால் உயர்ந்த அழுத்தம், மாரடைப்பு போன்ற ஆபத்தான நோய்கள் வருவதற்கு வழிவகுக்கும். இது தவிர உடலில் யூரிக் அமிலத்தை அதிகரிக்க செய்யும் வாய்ப்புகளும் அதிகம் உள்ளன. எனவே 40 வயது வயதிற்குப் பிறகு சிவப்பு இறைச்சி சாப்பிடுவது தவிர்ப்பது நல்லது.
அதிக உப்பு உணவுகள்
ஊறுகாய், அப்பளம் போன்ற உணவுகள் விரைவில் கெடாமல் இருக்க அதில் அதிக உப்பு சேர்க்கப்பட்டிருக்கும். உப்பு அதிகம் உள்ள உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் சோடியம் அதிகமாகி ஹைபர் டென்ஷன் பிரச்சனையை அதிகரிக்கச் செய்யும். ஆகவே முடிந்த அளவிற்கு வீட்டில் சமைத்த உணவுகளை சாப்பிடுங்கள். பாக்கெட் உணவுகளை தவிர்ப்பது நல்லது.
எண்ணெயில் பொரித்த உணவுகள் :
என்னதான் சோறு, குழம்பு, கூட்டு வைத்து சாப்பிட்டாலும் எண்ணெயில் பொரித்த, வறுத்த உணவுகள் சாப்பிட்டால் தான் மன திருப்தி வரும். ஆனால் 40 வயசுக்கு பிறகு எண்ணெயில் பொரித்த, வறுத்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இவை உடலில் கொலஸ்ட்ராலை அதிகரிக்க செய்யும். இதனால் மாரடைப்பு போன்ற ஆபத்தான நோய்கள் வரும். அது மட்டுமில்லாமல் கல்லீரலும் பாதிக்கப்படும். எலும்புகளில் வலியை அதிகரிக்கும்.
சர்க்கரை உணவுகள்
40 வயசுக்கு பிறகு உப்பு மட்டுமல்ல சர்க்கரை உணவுகளையும் அதிகமாக எடுத்துக் கொண்டால் அவை உடலின் உறுப்புகளுக்குள் தங்கி விடும். குறிப்பாக இரத்த குழாய்க்குள் தங்கி அதை சேதப்படுத்தும். இதனால் எலும்புகள் பாதிக்கப்படும். மேலும் ஒட்டுமொத்த உடல் உறுப்புகளையும் சிதைக்க ஆரம்பிக்கும். எனவே 40 வயது ஆரம்பித்த உடனே அதிக சர்க்கரை உணவுகளை எடுத்துக் கொள்ளாதீர்கள்.
மதுபானங்கள்
ஆல்கஹாலை எந்த வயது ஆனாலும் குடிப்பது ஆபத்துதான். அதிலும் குறிப்பாக 40 வயது ஆன பிறகு தொட்டு கூட பார்க்கவே கூடாது. குடியால் பல குடும்பங்கள் அழிந்ததை நீங்கள் பார்த்திருப்பீர்கள். எனவே மதுபானத்தை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.