மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது எப்படி..? அவற்றை தவிர்க்க தேவையான உதவி குறிப்புகள்..!
Breast Cancer Awareness Month 2022: மார்பகப் புற்றுநோயை தொடக்க நிலையிலேயே கண்டறிந்துவிட்டால், அதிலிருந்து முழுமையாக மீண்டு விடலாம். இவற்றை ஆரம்ப நிலையில் கண்டறிய தேவையான குறிப்புகள்.
மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே சுயபரிசோதனை மூலம் நாமே எளிதில் கண்டறியலாம். 18 முதல் 30 வயதுக்கு உள்பட்ட பெண்கள் மாதம் ஒரு முறையாவது மார்பக சுயபரிசோதனை செய்துகொள்வது அவசியம். முப்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மார்பக சுயபரிசோதனையுடன், தேவை எற்பட்டால் மருத்துவமனைக்குச் சென்று முறை யான பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இந்த பரிசோதனையை மாதவிடாய் முடிந்து ஒரு வாரம் கழித்து மேற்கொள்ள வேண்டும்.
புற்றுநோய்கள், குடும்பத்தின் தலைமுறைகள் வழியாக ஏற்படுகின்றன. இதனை தவிர்த்து, உடல் பருமன், அதிகப்படியான மது அருந்துதல், புகைபிடித்தல், உணவு முறைகள், உடலில் கொழுப்பு அதிகரித்தல், உடலுழைப்பு இல்லாமல் இருத்தல் போன்ற காரணங்களாகும் ஒருவருக்கு புற்றுநோய் வரலாம்.
எல்லாப் புற்றுநோயும் மரணத்தை ஏற்படுத்துவதில்லை. மார்பகப் புற்றுநோயை தொடக்க நிலையிலேயே கண்டறிந்துவிட்டால், அதிலிருந்து முழுமையாக மீண்டு விடலாம். இவற்றை ஆரம்ப நிலையில் கண்டறிய தேவையான குறிப்புகள்.
இரண்டு மார்பகங்களையும் பரிசோதிக்க வேண்டும். அதில், கட்டிகள், மார்பக அளவு மாற்றங்கள், முலைக்காம்புகளில் திரவம் சுரப்பது, முலைக்காம்புகளில் வீக்கம், மார்பகங்களின் நிறமாற்றம் இருந்தால் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.
ஒரு கையை தலையின் பின்புறத்தில் வைத்து படுக்க வேண்டும். தலையணையால் தோளை லேசாக உயர்த்தவும். மற்ற கை விரல்களின் நடுவில் மேல் பக்கத்திலுள்ள மார்பகத்தை முதலில் பரிசோதிக்கவும். முலைக்காம்பு பகுதியிலிருந்து தொடங்கி, முழு மார்பகத்தையும் பரிசோதிக்கவும். அக்குள் பகுதியையும் பரிசோதிக்க வேண்டும்.
மார்பக புற்றுநோயின் அறிகுறிகள்:
மாதவிடாய் காலத்தில் தீவிரமான மார்பகங்களில் வலி ஏற்படும்.
மார்பகங்களின் தோலின் நிறமாற்றம், புண்கள் மற்றும் பருக்கள் உண்டாகும் .
முலைக்காம்புகளில் வலி, வீக்கம்
அக்குள் மற்றும் கழுத்தில் கட்டிகள் மற்றும் வீக்கம்
எனவே, மேலே சொன்ன அறிகுறிகளில் ஏதேனும் மார்பகங்களில் ஏற்பட்டால், உங்கள் அறிகுறிகளை ஆய்வு செய்து ஆலோசனை பெறுவது அவசியமாகும்.