- Home
- உடல்நலம்
- Fatty Liver: ஃபேட்டி லிவர் என்றால் என்ன? உங்கள் கண்களில் இந்த 5 அறிகுறிகள் தெரிந்தால் உஷார்!
Fatty Liver: ஃபேட்டி லிவர் என்றால் என்ன? உங்கள் கண்களில் இந்த 5 அறிகுறிகள் தெரிந்தால் உஷார்!
Fatty Liver Disease: கல்லீரலில் கொழுப்பு சேர்வதுதான் ஃபேட்டி லிவர். இந்த நோய் முற்றி, ஆபத்தான நிலையை அடையும் வரை பல நேரங்களில் அறிகுறிகளே தெரியாது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கண்களின் வெள்ளைப்பகுதி மஞ்சளாக மாறுவது இதன் முதல் அறிகுறியாகும்.

ஃபேட்டி லிவரின் ஐந்து அறிகுறிகள்
கல்லீரலில் கொழுப்பு சேருவதை தான் ஃபேட்டி லிவர் என்பார்கள். இந்த நோய் அவ்வளவு சிக்கிரத்தில் எந்த அறிகுறியையும் காட்டாது என கூறப்படுகிறது. ஃபேட்டி லிவர் பாதிப்பு ஏற்பட்டால், அதன் அறிகுறிகள் கண்களில் தெரியவரும் என 'ஜர்னல் ஆஃப் டிரான்ஸ்லேஷனல்' குறிப்பிடுகிறது.
கண்களின் மஞ்சள் நிறம் (மஞ்சள் காமாலையின் அறிகுறி)
கண்களின் வெள்ளைப்பகுதி மஞ்சளாக மாறுவது இதன் முதல் அறிகுறியாகும். கல்லீரல் செல்களில் கொழுப்பு சேர்வதால், பிலிரூபின் அளவு அதிகமாகி கண்கள் மஞ்சளாக மாறுகின்றன. இது கல்லீரல் செயல்பாடு மோசமடைவதைக் காட்டுகிறது. உங்கள் கண்கள் மஞ்சளாக மாறினால், உடனடியாக மருத்துவரை அணுகி கல்லீரல் நிபுணரிடம் ஆலோசனை பெறுவது ரொம்ப முக்கியம்.
கல்லீரலில் கொழுப்பு சேருவது தான் ஃபேட்டி லிவர்
நமது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும், ரத்தத்தை கல்லீரல் எப்படி வடிகட்டுகிறது என்பதைப் பொறுத்தது. கல்லீரலில் பிலிரூபின் அளவு அதிகமானால், கண்கள் மஞ்சளாக மாறும். இது கல்லீரல் பாதிப்பின் அறிகுறியாகும். ஃபேட்டி லிவர் நேரடியாக பார்வையை பாதிக்காது என்றாலும், அதன் சில அறிகுறிகள் கண்களில் தெரிய வரும். ஃபேட்டி லிவர் இருந்தால் கண்களில் என்னென்ன அறிகுறிகள் தெரியும் என்பதை பார்க்கலாம்.
கண்கள் வறண்டு போவது மற்றும் எரிச்சல்
கண்கள் வறண்டு போவதும், எரிச்சலுடன் இருப்பதும் மற்றொரு அறிகுறியாகும். கண்களில் ஈரப்பதம் குறைந்து வறண்டு போவது, கல்லீரல் செயல்பாட்டுக் குறைபாட்டின் விளைவாக இருக்கலாம். இந்த கண் பிரச்சினை, உடலில் ஏற்படும் வீக்கம் மற்றும் வளர்சிதை மாற்றம் ஏற்றத்தாழ்வுகளுடன் தொடர்புடையது. கல்லீரல் ஆரோக்கியம் குறையும்போது, அது கண்களையும் பாதிக்கும்.
கண்களில் ஈரப்பதம் குறைந்து வறண்டு போவது
கண்களில் ஈரப்பதம் குறைந்து வறண்டு போவது ஒரு முக்கிய அறிகுறியாகும். உடலில் ஏற்படும் வீக்கம் மற்றும் வளர்சிதை மாற்றக் கோளாறுகள் காரணமாகவும் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். கல்லீரல் ஆரோக்கியம் குறையும்போது, வளர்சிதை மாற்ற செயல்பாடுகளும் பாதிக்கப்படும். கண்களைச் சுற்றிக் காணப்படும் கருவளையங்களையும் நாம் கவனிக்க வேண்டும்.
கண்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் வீக்கம்
கண்களைச் சுற்றி வீக்கம் ஏற்படுவது மற்றொரு அறிகுறியாகும். வளர்சிதை மாற்றப் பிரச்சினைகளால், கண்களைச் சுற்றியுள்ள பகுதியில் நீர் தேங்கத் தொடங்கும் போது, கல்லீரல் பிரச்சினையில் இருக்கலாம். உங்கள் கண்களைச் சுற்றியுள்ள பகுதி வழக்கத்தை விட வீக்கமாகத் தெரிந்தால், உடனடியாக மருத்துவரை அணுகுவது ரொம்ப அவசியம்.
மங்கலான பார்வை
மங்கலான பார்வை மற்றொரு அறிகுறியாகும். நீரிழிவு, மெட்டபாலிக் சிண்ட்ரோம் அல்லது நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான நாள்பட்ட நோய்கள் உள்ளவர்களுக்கு ஃபேட்டி லிவர் நோய் வருவதற்கான அபாயம் அதிகம். சில சமயங்களில், அரிதாக இருந்தாலும், மங்கலான பார்வை ஃபேட்டி லிவர் இருப்பதோடு தொடர்புடையதாக இருக்கலாம்.
கண்ணை சுற்றி கருவளையம்
கண்களைச் சுற்றி கருவளையம் தோன்றுவது அல்லது சோர்வான கண்கள் இருப்பது மற்றொரு அறிகுறியாகும். கல்லீரல் செயல்பாடு பாதிக்கப்படும்போது, அது கண்களுக்குக் கீழ் கருவளையங்களையும், நாள்பட்ட சோர்வையும் ஏற்படுத்தும். நன்றாக ஓய்வெடுத்த பிறகும் கண்கள் சோர்வாகவும், கருவளையம் இருந்தாலும், உங்கள் கல்லீரை சோதிப்பது ரொம்ப நல்லது.

