MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • Toilet: கழிவறையில் 10 நிமிடங்களுக்கு மேல் அமர்ந்தால் என்ன ஆகும்? அதிர்ச்சி தகவல்!

Toilet: கழிவறையில் 10 நிமிடங்களுக்கு மேல் அமர்ந்தால் என்ன ஆகும்? அதிர்ச்சி தகவல்!

Health Tips: பல நிமிடங்கள் கழிவறையிலேயே அமர்ந்து கொண்டு ரீல்ஸ் பார்ப்பதற்கும், ரிலாக்ஸ் செய்வதற்கும் கழிவறையை ஒரு தளமாகவே பயன்படுத்துகின்றனர். ஆனால் பல நேரம் கழிவறையில் அமர்ந்தால் எவ்வளவு பெரிய பாதிப்புகளை விளைவிக்கும் என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : vinoth kumar
Published : Jun 06 2026, 06:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
கழிவறையில் மொபைல் போன்
Image Credit : Asianet News

கழிவறையில் மொபைல் போன்

இன்றைய டிஜிட்டல் உலகில் நம்மில் பலருக்கும் மொபைல் போன் தான் உலகம் என்றாகிவிட்டது. கழிவறைக்கு செல்லும் போது மொபைல் போன் பயன்படுத்தும் பழக்கம் இன்று பலரிடமும் பரவலாக காணப்படுகிறது. இதனால் பல நிமிடங்கள் கழிவறையிலேயே அமர்ந்து கொண்டு ரீல்ஸ் பார்ப்பதற்கும், ரிலாக்ஸ் செய்வதற்கும் கழிவறையை ஒரு தளமாகவே பயன்படுத்துகின்றனர். ஆனால், பல நேரம் கழிவறையில் அமர்ந்தால் எவ்வளவு பெரிய பாதிப்புகளை விளைவிக்கும் என்பதை பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
மூல நோய் வரலாம்
Image Credit : Asianet News

மூல நோய் வரலாம்

கழிவறையில் அமர்ந்து கொண்டு மொபைல் போன் பார்க்கும் போது நேரம் போவதே தெரியாமல் 20 முதல் 30 நிமிடங்கள் வரை ஒரே இடத்தில் அமர்ந்திருக்க நேரிடுகிறது. இப்படி நீண்ட நேரம் அமர்வதால், மலக்குடல் மற்றும் ஆசனவாய் பகுதியில் உள்ள இரத்த நாளங்களில் அதிகப்படியான அழுத்தம் உண்டாகிறது. இந்த அழுத்தத்தின் காரணமாக ஆசனவாயில் வீக்கம் ஏற்பட்டு, அது 'பைல்ஸ்' எனப்படும் மூல நோயாக மாறுகிறது. இதனால் மலம் கழிக்கும் போது கடுமையான வலி, வீக்கம், அரிப்பு மற்றும் இரத்தப்போக்கு போன்ற அவதிகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

Related Articles

Related image1
Baba Vanga: 2028 முதல் 5079 வரை என்ன நடக்கும்? பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வாங்காவின் பகீர் கணிப்புகள்!
Related image2
Chia Seeds: இரத்த நாளங்களில் படிந்த கொழுப்பைக் கரைக்க இந்த விதை போதும்.! இதை சாப்பிட்டா மாரடைப்பே வராது.!
37
இடுப்புத் தசை பலவீனம்
Image Credit : Asianet News

இடுப்புத் தசை பலவீனம்

நம் உடலின் குடலையும், சிறுநீர்ப்பையையும் தாங்கிப் பிடிப்பதில் 'பெல்விக்' (Pelvic) எனப்படும் இடுப்புத் தசைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. கழிவறை இருக்கையில் ஒரே நிலையில் நீண்ட நேரம் தொங்கிய நிலையில் அமர்ந்திருக்கும் போது, இந்த தசைகள் படிப்படியாகத் தன் பலத்தை இழக்கின்றன. இது மலம் கழிப்பதில் நாள்பட்ட சிக்கல்களை உருவாக்குவதோடு, இடுப்புப் பகுதியையும் பலவீனமாக்கும்.

47
இரத்த ஓட்டம் பாதிக்கப்படும்
Image Credit : Asianet News

இரத்த ஓட்டம் பாதிக்கப்படும்

நீண்ட நேரம் கழிவறையில் அமர்ந்திருப்பது உடலின் கீழ் பகுதிக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தைக் குறைத்துவிடும். இதனால் இடுப்பு மற்றும் தொடைப் பகுதிகளில் தேவையற்ற அழுத்தம் ஏற்பட்டு, கால்கள் மரத்துப்போதல் மற்றும் கால்களில் கடுமையான அசௌகரியம் போன்றவை உண்டாகிறது.

57
கிருமித் தொற்று
Image Credit : Asianet News

கிருமித் தொற்று

கழிவறை என்பது கண்ணுக்குத் தெரியாத பல லட்சக்கணக்கான கிருமிகள் வாழும் இடமாகும். நாம் அங்கு மொபைலை பயன்படுத்தும் போது, அந்தக் கிருமிகள் மொபைல் திரையிலும், கவரிலும் ஒட்டிக்கொள்கின்றன. பின்னர் நாம் கைகளை சோப்பு போட்டு கழுவினாலும், மொபைலைத் தொடும்போது மீண்டும் அந்தக் கிருமிகள் நம் உடலுக்குள் சென்று வயிற்றுப்போக்கு, சிறுநீரகத் தொற்று போன்ற நோய்களை உண்டாக்குகின்றன.

67
கழிவறையில் நீண்ட நேரம் செலவிடக் காரணம் என்ன?
Image Credit : Asianet News

கழிவறையில் நீண்ட நேரம் செலவிடக் காரணம் என்ன?

பெரும்பாலான மக்கள் கழிவறையில் அதிக நேரம் இருப்பதற்கு மலச்சிக்கல் ஒரு முக்கியக் காரணம் என்கின்றனர். இந்த மலச்சிக்கல் ஏற்படுவதற்கு பின்வரும் பழக்கங்களே காரணம் உணவில் நார்ச்சத்து குறைவாக இருப்பது, போதிய அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது, உடற்பயிற்சி அல்லது உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது, மலம் வரும் போது அதை அடக்கி வைத்துக்கொண்டு, பின்னர் போகலாம் என தள்ளிப்போடுவதும் இதுபோன்ற ஆபத்தை ஏற்படுத்தும்.

77
மலச்சிக்கலையும் ஆபத்தையும் தவிர்க்க ஆலோசனைகள்
Image Credit : Asianet News

மலச்சிக்கலையும் ஆபத்தையும் தவிர்க்க ஆலோசனைகள்

ஒரு நபர் கழிவறையில் 5 முதல் 10 நிமிடங்கள் மட்டுமே செலவிட வேண்டும். இயல்பாக மலம் கழிக்க வரவில்லை என்றால், தொடர்ந்து கழிவறையிலேயே அமர்ந்திருக்கக் கூடாது; பலவந்தமாக முக்கவும் கூடாது. மீண்டும் மலம் கழிக்கும் உணர்வு வரும் போது மட்டும் சென்றால் போதும். கழிவறைக்குச் செல்லும்போது கையில் மொபைல் போன் கொண்டு போவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மொபைலால் ஏற்படும் கவனச்சிதறல் தான், நமக்கு நேரம் போவதே தெரியாமல் செய்கிறது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஆரோக்கியம்
சுகாதார நன்மைகள்
ஆரோக்கிய குறிப்புகள்
Latest Videos
Recommended Stories
Recommended image1
சோடா புட்டி கண்ணாடிக்கு 'டாடா'! கண் பார்வை கூர்மையாக 5 புதுமையான வழிகள்
Recommended image2
30 செகண்ட்ஸ் போதும்! வீட்டிலேயே பார்லர் ஸ்டைல் பெடிக்யூர்! 6 மேஜிக் டிப்ஸ்!
Recommended image3
டயட் இல்லாம வெயிட் குறைக்கணுமா? நீங்க சாப்பிடுற முறையை மாத்துங்க!
Related Stories
Recommended image1
Baba Vanga: 2028 முதல் 5079 வரை என்ன நடக்கும்? பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வாங்காவின் பகீர் கணிப்புகள்!
Recommended image2
Chia Seeds: இரத்த நாளங்களில் படிந்த கொழுப்பைக் கரைக்க இந்த விதை போதும்.! இதை சாப்பிட்டா மாரடைப்பே வராது.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved