Urination Mistakes : யூரின் போறப்ப செய்யக் கூடாத தவறு இதுதான்!! பலர் அறியாத தகவல்
நீங்கள் சிறுநீர் கழிக்கும் போது எந்த மாதிரியான தவறுகளை செய்யக்கூடாது என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

சிறுநீர் கழிக்கும் போது செய்யக்கூடாத தவறுகள்!!
நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீர் கழிப்பீர்கள்? சிறுநீரை அடக்கி வைப்பது பல உடல்நல அபாயங்களை ஏற்படுத்தும். ஆனால் அதுவல்ல இப்போதைய கேள்வி. நம்மில் பலர் சிறுநீர் கழிக்கும் போது சில தவறுகளை தெரியாமல் செய்து விடுகிறோம். அந்த தவறுகளால் சில எதிர்பாராத உடல்நிலை பிரச்சினைகள் வந்துவிடுகின்றன. அது என்னென்ன தவறுகள்? சரியான முறையில் சிறுநீர் கழிப்பது எப்படி? என்பதை இந்த பதிவு அறிந்து கொள்ளுங்கள்.
சிறுநீர் கழிப்பதை நிறுத்துவது :
சிறுநீர் கழிக்கும்போது சிறுநீர் கழிப்பதை நிறுத்தும் பழக்கம் உங்களிடம் இருந்தால் உடனே அதை நிறுத்தி விடுங்கள். ஏனெனில் இந்த பழக்கம் உங்களுக்கு தேவையற்ற பிரச்சனைக்கு வழிவகுக்கும். அதாவது நீங்கள் சிறுநீர் கழித்துக் கொண்டிருக்கும்போது நடுவிலே திடீரென சிறுநீர் கழிப்பதை நிறுத்தினால் சிறுநீர்ப்பையில் அழுத்தம் அதிகரித்து தொற்று நோய்க்கு வழி வகுக்கும். இந்த பழக்கத்தை நீங்கள் அடிக்கடி செய்தால் நாளடைவில் தசைகள் பலவீனமடைந்துவிடும்.
நின்று கொண்டே சிறுநீர் கழிக்காதே!
நின்று கொண்டு ஒருபோதும் சிறுநீர் கழிக்கவே கூடாது. அது நல்லதல்ல. நீங்கள் நின்று கொண்டே சிறுநீர் கழித்தால் சிறுநீர்ப்பை முற்றிலுமாக காலியாகது. இதனால் சிறுநீர்ப்பையில் பாக்டீரியாக்கள் வளர்ந்து சிறுநீர் பாதை தொற்றுக்கு வழிவகுக்கும். எனவே, ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் நின்று கொண்டே சிறுநீர் கழிக்க கூடாது.
குளிக்கும்போது சிறுநீர் கழித்தால் என்ன?
நீங்கள் குளிப்பதற்கு சுமார் அரை மணி நேரம் முன் மற்றும் பின் சிறுநீர் கழிக்கவே கூடாது. ஆயுர்வேதத்தின் படி, இப்படி செய்வது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று சொல்லப்படுகிறது. அதுபோல குளித்துக் கொண்டிருக்கும் போதும் சிறுநீர் கழிப்பது நல்லது என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். எனவே நீங்கள் குளித்த பிறகு சுமார் அரை மணி நேரம் கழித்து தான் சிறுநீர் கழிக்க வேண்டும். அது ஆரோக்கியத்திற்கு நல்லதாக கருதப்படுகிறது.
சிறுநீர் கழித்த உடனே சாப்பிடலாமா?
சிறுநீர் கழித்த உடனே சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு அவ்வளவு நல்லதல்ல என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். ஏனெனில் உணவானது உடலுக்கு மிகவும் அவசியம். ஆனால் நீங்கள் சிறுநீர் கழித்த பிறகு உடனே சாப்பிட்டால் செரிமான அமைப்பில் அழுத்தம் அதிகரித்து அஜீரணம், வாயு, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே சிறுநீர் கழித்து சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு தான் உணவு சாப்பிட வேண்டும்.
சாப்பிட்ட உடனே சிறுநீர் கழிக்கலாமா?
சாப்பிட்ட உடனே சிறுநீர் கழிக்கலாம். அது ஆரோக்கியத்திற்கு நல்லது தான். ஏனெனில் நீங்கள் சாப்பிட்ட பிறகு சிறுநீர் கழித்தால் உடலானது கழிவுகளை வெளியேற்ற உதவும் மற்றும் செரிமானத்தை எளிதாகும். கூடுதலாக உடலும் சுத்தப்படுத்தப்படுகிறது. இது தவிர சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீர்ப்பையில் அழுத்தம் ஏற்படுவது குறையும். மேலும் சிறுநீர் தொற்றுகள் வருவதும் தடுக்கப்படும்.
மேலே சொன்ன தவறுகளை நீங்கள் தினமும் செய்கிறீர்கள் என்றால் இனி அப்படி செய்யாதீர்கள். உடனே நிறுத்தி விடுங்கள். அவை உங்களது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.

