Peanut Tips : வேர்க்கடலை விரும்பியா? இந்த '6' விஷயங்கள் உங்களுக்குதான்!
குளிர்காலத்தில் வேர்க்கடலை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஆனால் இதில் கலோரிகள் அதிகமாக உள்ளதால் சரியான முறையில் சாப்பிட்டாவிட்டால் உடல் எடை கூடும். எனவே வேர்கடலை சாப்பிடும் போது இந்த 6 விஷயங்களை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
16

Image Credit : Getty
சரியான அளவில் சாப்பிட வேண்டும்
ஒரு கைப்பிடி வேர்க்கடலையை எடுத்துக் கொள்ளலாம். இது சுமார் ஒரு அவுன்ஸ், அதாவது 28 கிராம் இருக்கும். இந்த அளவில் வேர்க்கடலை சாப்பிடுவது நல்லது.
26
Image Credit : Getty
உப்பில்லாததை வாங்கலாம்
உப்பு சேர்க்காத வேர்க்கடலையை வாங்கலாம். இது உடலில் சோடியத்தின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
36
Image Credit : Getty
சேர்த்து சாப்பிடலாம்
பழங்கள், காய்கறிகளுடன் வேர்க்கடலையைச் சேர்த்துச் சாப்பிடுவது நல்லது. இது அதிக ஊட்டச்சத்துக்களைப் பெற உதவுகிறது.
46
Image Credit : Getty
இனிப்புடன் சேர்ப்பதை தவிர்க்கலாம்
இனிப்பு சிற்றுண்டிகள், உலர் பழங்களுடன் வேர்க்கடலை சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். இது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
56
Image Credit : Getty
உடற்பயிற்சி செய்யுங்கள்
வேர்க்கடலையில் கலோரிகள் அதிகம். இது உடல் எடை அதிகரிக்கக் காரணமாகிறது. தினமும் உடற்பயிற்சி செய்வது உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவும்.
66
Image Credit : Getty
ஒவ்வாமை பிரச்சனைகள்
வேர்க்கடலை ஒவ்வாமையை ஏற்படுத்த வாய்ப்புள்ள ஒரு சிற்றுண்டி. எனவே, ஒவ்வாமை உள்ளவர்கள் வேர்க்கடலை சாப்பிடும்போது கவனமாக இருக்க வேண்டும்.
Latest Videos

