- Home
- Lifestyle
- Peanuts in Winter : குளிர்காலத்தில் வேர்க்கடலை கண்டிப்பா சாப்பிடனும்!! இந்த நன்மைகளை தவறவிடாதீங்க
Peanuts in Winter : குளிர்காலத்தில் வேர்க்கடலை கண்டிப்பா சாப்பிடனும்!! இந்த நன்மைகளை தவறவிடாதீங்க
குளிர்காலத்தில் வேர்க்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
15

Image Credit : Getty
Peanuts Benefits in Winter
குளிர்காலத்தில் உடல் அதிக வெப்பத்தையும் ஆற்றலையும் விரும்பும். அப்போது வேர்க்கடலை சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதில் புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, கால்சியம் போன்றவை உள்ளன.
25
Image Credit : Getty
குளிர்காலத்தில் வேர்க்கடலை ஏன் கட்டாயம் சாப்பிட வேண்டும்..?
குளிர்காலத்தில் வேர்க்கடலை சாப்பிடுவது எலும்புகளை வலுப்படுத்தும். எலும்பு பிரச்சனைகளைத் தவிர்க்க இதை தினசரி உணவில் சேர்க்கலாம். உடல் எடையைக் குறைக்கவும் தினமும் ஒரு கைப்பிடி சாப்பிடலாம்.
35
Image Credit : others
உடலை உற்சாகப்படுத்துகிறது
குளிர்காலத்தில் ஆற்றல் குறைவாக உணர்ந்தால், வேர்க்கடலை சாப்பிடலாம். இது குடல் ஆரோக்கியத்திற்கும், இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது. கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்.
45
Image Credit : Getty
நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை
நீரிழிவு நோயாளிகளுக்கு வேர்க்கடலை நல்லது. இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி, இரத்த சர்க்கரையை சமன் செய்யும். பளபளப்பான சருமத்திற்கும், முடி வளர்ச்சிக்கும் இது உதவுகிறது.
55
Image Credit : Getty
வேர்க்கடலையை எப்படி சாப்பிட வேண்டும்..?
- தினமும் ஒரு கைப்பிடி அளவு வறுத்த வேர்க்கடலையை மதியம் அல்லது மாலை வேளையில் சாப்பிடலாம். ஆனால் வாயு பிரச்சனை உள்ளவர்கள் இதை அதிகமாக சாப்பிடக் கூடாது. வேண்டுமானால் வேக வைத்து சாப்பிடலாம். வேகவைத்த வேர்க்கடலை குடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
- அதுபோல வேர்க்கடலையுடன் வெள்ளரி, கேரட், வெங்காயம், எலுமிச்சை சாறு, உப்பு ஆகியவற்றை சேர்த்து சாலட்டாக சாப்பிடலாம். இதில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளன. எனவே இது எடை இழப்பிற்கு பெரிதும் பங்களிக்கும்.
- வேர்க்கடலை ஆரோக்கியமானது என்றாலும் அவற்றை 30 முதல் 50 கிராமுக்கு மேல் சாப்பிட வேண்டாம். குறிப்பாக அதிக எடை உள்ளவர்கள் 30 கிராமுக்கு மேல் ஒருபோதும் சாப்பிடக்கூடாது.
Latest Videos

