Peanuts: வேர்க்கடலை சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் கட்டுக்குள் வருமா?
உண்மையைச் சொல்வதென்றால் வேர்க்கடலை ஒரு ஆரோக்கியமான உணவுப்பொருள் ஆகும்.
இயற்கையாக கிடைக்கும் பல உணவுப் பொருட்கள் நமது உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது. குறுகிய காலப் பயிரான வேர்க்கடலையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் நமக்கு கிடைக்கும். பல கார்ப்பரேட் நிறுவனங்கள், வேர்க்கடலை சாப்பிட்டால் கொலஸ்ட்ராலை அதிகரித்து விடும் என நம்மை நம்ப வைத்து வருகிறது. ஆனால், உண்மையைச் சொல்வதென்றால் வேர்க்கடலை ஒரு ஆரோக்கியமான உணவுப்பொருள் ஆகும். இருந்தாலும் கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள், எந்தவொரு உணவுப்பொருளையும் உண்பதற்கு முன்பாக, மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது நன்மை அளிக்கும்.
வேர்க்கடலையில் உள்ள சத்துக்கள்
இயல்பாகவே வேர்க்கடலையை மலிவான பாதாம் என்று அழைக்கிறோம். பாதாம் பருப்பில் எவ்வளவு சத்துக்கள் உள்ளதோ, அதைவிடவும் அதிகமான சத்துக்கள் வேர்க்கடலையில் உள்ளது. வேர்க்கடலையில் இருக்கும் மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் கெட்ட கொழுப்பைக் கரைக்க உதவி புரிகிறது. இதன் காரணமாக இதய நோய் அபாயமும் குறைகிறது. வேர்க்கடலையில் கொழுப்புகள் மற்றும் அதிக கலோரிகள் உள்ளதால், இது கொலஸ்ட்ராலுக்கு கெட்டது என பலரும் நினைக்கின்றனர். ஆனால் அது உண்மையன்று. இதுதவிர, வேர்க்கடலை உடல் எடையைக் கட்டுப்படுத்தவும் உதவி புரிகிறது.
Almond Skin: பாதாம் தோலில் இப்படி ஒரு நன்மை இருக்கா: முடிக்கும் முகத்திற்கும் இப்படி யூஸ் பண்ணுங்க!
வேர்க்கடலையின் நன்மைகள்
- வேர்க்கடலை சாப்பிட்டால், நம் உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்து விடும் என நினைப்பது மிகவும் தவறானது.
- கெட்ட கொழுப்பின் அளவை வேர்க்கடலை அதிகரிக்காது.
- உண்மையாகவே, தினந்தோறும் ஒரு கைப்பிடி வேர்க்கடலையை சாப்பிட்டால், இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை அளிக்கிறது.
- வேர்க்கடலையைச் சாப்பிட்டால் நீண்ட நேரம் வயிறு நிறைந்தது போன்ற உணர்வு ஏற்படும். இதனால் அதிகளவில் உணவு உண்பது தடைபடும்.
- நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள், வாரத்திற்கு 5 முறையாவது வேர்க்கடலையை சாப்பிட வேண்டும் என சுகாதார நிபுணர்கள் அறிவுறை கொடுக்கின்றனர்.
- வேர்க்கடலையில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை அளிப்பதோடு, சர்க்கரை நோயின் தாக்கத்தையும் குறைக்கிறது. அடிக்கடி வேர்க்கடலையை சாப்பிடுவதால் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
- மேலும், உடல் எடையை குறைப்பதில் தொடங்கி, இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது வரை பல நன்மைகளை வேர்க்கடலை செய்கிறது.