- Home
- Lifestyle
- Peanuts Benefits : பாதாமை விட சிறந்தது வேர்க்கடலை! இப்படிதான் சாப்பிடனும்; அந்த தப்ப பண்ணாதீங்க
Peanuts Benefits : பாதாமை விட சிறந்தது வேர்க்கடலை! இப்படிதான் சாப்பிடனும்; அந்த தப்ப பண்ணாதீங்க
வேர்க்கடலையில் உள்ள முழுச்சத்துக்களைப் பெற அதை எப்படி சாப்பிட வேண்டும் என இங்கு காணலாம்.

வேர்க்கடலையை எப்படி சாப்பிட்டாலும் அதன் சுவை நன்றாக இருக்கும். அதன் சத்துக்களும் நமக்கு கிடைக்கும். வறுத்த வேர்க்கடலை, அவித்த வேர்க்கடலை இரண்டுமே ஆரோக்கியம்தான். ஹெல்த்லைனின் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, 100 கிராம் பச்சை வேர்க்கடலையில் 567 கலோரிகள் உள்ளன. ஏழைகளின் பாதாம் என்றே வேர்க்கடலையை சொல்லலாம்.
ஊட்டச்சத்துக்கள் :
புரதச்சத்து - 25.8 கி, கார்போஹைட்ரேட்- 16.1 கி, சர்க்கரை - 4.7 கி, நார்ச்சத்து- 8.5 கி, ஒமேகா-6 - 15.56 கி ஆகியவை உள்ளன. இவை தவிர பயோட்டின், தாமிரம், நியாசின், ஃபோலேட், மாங்கனீசு, வைட்டமின் ஈ, பாஸ்பரஸ், மெக்னீசியம் ஆகிய தாதுக்களும், நுண் ஊட்டச்சத்துக்களும் காணப்படுகின்றன. இவை நம் ஒட்டுமொத்த உடல் நலனுக்கும் ஏற்றது.
வேர்க்கடலை தினமும் ஒரு கைப்பிடி சாப்பிட்டால் நல்ல கொழுப்பு கிடைக்கும். கெட்ட கொழுப்பு குறையும். இதய ஆரோக்கியம் மேம்படும். நீரிழிவு நோயாளிகள் சாப்பிட்டால் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்க உதவும். மூளை செயல்பாட்டிற்கு நல்லது. தசை வலிமைக்கு உதவும். ஆனால் இதை சாப்பிடும்போது சில தவறுகளை தவிர்க்க வேண்டும்.
வேர்க்கடலையை அதிகம் சாப்பிடக் கூடாது. அதிக கலோரிகள் இருப்பதால் எடை அதிகரிக்கும். சிலருக்கு வேர்க்கடலை உண்பது வீக்கம் அல்லது வாயு ஆகிய செரிமானப் பிரச்சனையை ஏற்படுத்தும்.
பச்சை வேர்க்கடலையில் அதிக ஊட்டச்சத்துக்கள் கிடைத்தாலும் இது செரிமான கோளாறை ஏற்படுத்தும் என்பதால் ஊறவைத்து சாப்பிடலாம் அல்லது வறுத்தோ, அவித்தோ சாப்பிடலாம். இது செரிமான பிரச்சனைகளை தவிர்க்க உதவும். ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கும்.