Health tips: மீல் மேக்கரில் இப்படி 1 ஆபத்து இருக்கு.. சுவைக்காக அடிக்கடி சாப்பிட்டால் இந்த பாதிப்புகள் வரும்
meal maker side effects: மீல் மேக்கர் உண்பதால் ஏற்படும் நன்மைகளை போலவே அதில் சில தீமைகளும் உள்ளன.
Tamil Health update Soy meal maker side effects: சோயா பீன்ஸ் சக்கையை வைத்து தயாரிப்பது தான் மீல் மேக்கர். இதில் புரதச்சத்து காணப்படுவதால் பலரும் விரும்பி எடுத்து கொள்கிறனர். இறைச்சிக்கு பதிலாக பிரியாணியில் இதை போட்டு சமைத்து கொடுத்தால் வேண்டாம் என சொல்லாவதவர்களே கிடையாது. ஆனால் எதுவும் ஒரு அளவுதான். அளவுக்கு மீறி எந்த உணவும் எடுத்து கொள்ளக் கூடாது. மீல் மேக்கர் உண்ணும்போது ஏற்படும் தீமைகள் குறித்து தெரிந்து கொண்டால் அது இருக்கும் பக்கமே போகமாட்டீர்கள். வாங்க பதிவிற்குள் போகலாம்.
அசைவ உணவுக்கு மாற்றாக மீல் மேக்கரை சைவ பிரியர்கள் உண்கிறார்கள். ஆனால் எந்த உணவும் எதற்கும் பதிலீடு ஆகாது. இதில் புரதம் அதிகமாக காணப்படுவதால், தினமும் உண்பவர்களும் இருக்கிறார்கள்.
தினமும் மீல் மேக்கர் உண்பதால் அதாவது அளவுக்கு மிஞ்சி அதிகமாக சாப்பிட்டால் ஹார்மோன் சமநிலை மாறிவிடும். இதனால் ஆண்களுக்கு முக்கிய பாதிப்பு ஏற்படுகிறது. மீல் மேக்கர் அதிகமாக எடுத்து கொள்ளும் சில குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு கூட ஏற்படுகிறதாம். உடல் ஒவ்வாமை கூட வந்து பாடாய்படுத்திவிடும்.
ருசிக்காக மீல் மேக்கர் அடிக்கடி சமைப்பதால் நீங்களே புற்றுநோய் செல்களுக்கு ஊட்டம் கொடுக்கிறீர்கள் என்று அர்த்தம். ஏனெனில் இதை அதிகம் சாப்பிட்டால் புற்றுநோய் செல்கள் நிறைய உற்பத்தியாக காரணமாகிவிடும். அதுமட்டுமல்ல.. இதை உண்பதால் கனிம குறைபாடு கூட வரும். இதில் புரதம் தான் அதிகமாக காணப்படுகிறது அதனால் மற்ற சத்து குறைபாடு வரலாம். புரதச்சத்தை கிரகிக்க முடியாத செரிமான கோளாறு ஏற்படலாம்.
இந்த மீல் மேக்கரில் இருக்கும் பைட்டோ ஈஸ்ட்ரோஜன் நம்முடைய சிறுநீரக செயழிலப்பு பாதிப்புக்கு காரணம் ஆகும். சிறுநீரக கற்கள் ஏற்படும் அபாயம் உங்களுக்கு தெரியாமல் மீல் மேக்கரால் உருவாகிவருகிறது. தாய்ப்பால் ஊட்டும் பிரசவித்த பெண்கள், கர்ப்பிணிகள் மருத்துவர்கரிடம் கேட்காமல் மீல் மேக்கர் உண்பதை தவிர்ப்பது நலம்.
இதையும் படிங்க: Nungu benefits: தினம் 1 நுங்கு சாப்பிட்டால் கூட.. உடலில் இவ்வளவு பிரச்சனைகளை சரி செய்துவிடும் தெரியுமா?
நாம் உண்ணும் எல்லா உணவிலும் ஏதேனும் பக்க விளைவுகள் இருக்கத்தான் செய்கின்றன. எதையும் அளவோடு எடுத்துக் கொண்டால் பரவாயில்லை. ஆனால் விருப்பம் காரணமாக ஒரே உணவை அதிகமாகவும், அடிக்கடியும் எடுத்துக் கொள்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள். ஒரு நாளுக்கு 25 முதல் 30 கிராம் வரை மீல் மேக்கர் சாப்பிடலாம். ஆனால் பிற நோய்களுடன் தொடர்பு கொண்டு மருந்து எடுப்பவர்களுக்கு உணவு விஷயத்தில் மருத்துவர் வழிகாட்டுதல் ரொம்ப முக்கியம். கவனம்..!
இதையும் படிங்க: நல்லா தூங்குங்க.. ஊழியர்களுக்கு லீவ் கொடுத்த நிறுவனம்.. சர்வதேச தூக்க தினத்துக்கு இப்படி ஒரு கிப்ட்