நல்லா தூங்குங்க.. ஊழியர்களுக்கு லீவ் கொடுத்த நிறுவனம்.. சர்வதேச தூக்க தினத்துக்கு இப்படி ஒரு கிப்ட்
World Sleep day: சர்வதேச தூக்க தினத்தை முன்னிட்டு பெங்களூரைச் சேர்ந்த நிறுவனம் ஊழியர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.
வேர்ல்டு ஸ்லீப் சொசைட்டி ( World Sleep Society ) எனும் அமைப்பு தான் 2008ஆண்டு தூக்கத் தினத்தை உருவாக்கியது. சர்வதேச தூக்க தினமானது ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 17 ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இன்றைய காலகட்டத்தில் சரியான தூக்கம் இல்லாததால் ஏற்படும் பிரச்சனைகளை கருத்தில் கொண்டு இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு மனிதனும் தினம் 6 மணி நேரமாவது நிம்மதியான தூக்கத்தை அனுபவிக்க வேண்டும். தூக்கம் நிம்மதியை மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்தையும் கொடுக்கிறது. இந்நிலையில் பெங்களூர் நிறுவனம் தூக்கத் தினத்தை முன்னிட்டு தன் ஊழியர்களுக்கு விடுமுறை அளித்துள்ளது.
சில நிறுவனத்தின் தலைமைகள் விடுமுறை தினத்தில் கூட வேலை சொல்லி பிரஷர் ஏற்றும் வியாபார உலகில், தன் ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு அந்த நிறுவனம் அனுப்பிய மெயில் பேசுபொருளாகியுள்ளது. வேக்பிட் சொலியூஷன்ஸ் (Wakefit Solutions) எனும் நிறுவனம் ஊழியருக்கு அனுப்பிய மெயிலில், சர்வதேச தூக்க தினத்தை கொண்டாடும் வகையில் மார்ச் 17ஆம் தேதி அன்று ஊழியர்களுக்கு விருப்ப விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது. இந்த மெயில் தற்போது லிங்க்டினில் (LinkedIn) பிரபலமாகிவருகிறது.
'தூக்க பரிசு' என தலைப்பிடப்பட்ட அந்த அறிவிப்பில், "நமது கிரேட் இந்தியன் ஸ்லீப் ஸ்கோர்கார்டின் 6ஆவது பதிப்பு விவரங்கள் சொல்வது என்னவெனில், 2022ஆம் ஆண்டு நிலவரப்படி, வேலை நேரத்தில் மக்களுக்கு தூக்கம் வருவது 21% ஆக உள்ளது. தினமும் சோர்வாக எழுந்திருப்பதில் 11% ஆக உணருவதை அந்த தகவல்கள் வெளிப்படுத்துகிறது. தூக்கமின்மையின் தாக்கத்தை கருத்தில் கொண்டு, தூக்க நாளைக் கொண்டாடுவதை விட சிறந்த வழி வேறு என்ன? தூக்கத்தின் பரிசு" என்று அந்த நிறுவனம் தனது ஊழியர்களுக்கு மெயில் (mail) எழுதியது.
இப்படி வேக்பிட் சொலியூஷன்ஸ் எனும் நிறுவனம் தன் பணியாளர்களுக்கு ஏற்ற வகையில் சலுகையை அறிவிப்பது இது முதல் முறை அல்ல. கடந்த ஆண்டு, தனது பணியாளர்களுக்காக "ரைட் டு நாப் கொள்கையை" அறிவித்தது. அதாவது ஊழியர்கள் தங்களுடைய வேலைக்கு நடுவே 30 நிமிடம் வரை தூங்கலாம் என்பதே அந்த அறிவிப்பு. ஊழியர்களின் சுய கவனிப்பையும் நலனையும் கருத்தில் கொண்ட இது போன்ற நடவடிக்கைகள் கவனம் ஈர்த்து வருகிறது.
இதையும் படிங்க: வெறும் 5 ரூபாய்க்கு நுங்கு சுளை வாங்கி சாப்பிட்டால்.. உடலில் இவ்வளவு பிரச்சனைகளை சரி செய்துவிடும் தெரியுமா?
இதையும் படிங்க: சனி பலன்கள்.. இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் வந்தாச்சு.. இனி வர்ற அதிர்ஷ்டத்தால் வாழ்க்கையே மாறப் போகுது..!