உடம்புல 'இந்த' அறிகுறிகள் வந்தால் பித்தம்னு அர்த்தம்.. ஈஸியா குறைப்பது எப்படி?
Symptoms Of Bile Increase : உடலில் பித்தம் ஏற்படுவதற்கான காரணங்கள், அதன் அறிகுறிகள் மற்றும் அதை சுலபமாக குறைப்பது எப்படி என்று இங்கு காணலாம்.

உடம்புல 'இந்த' அறிகுறிகள் வந்தால் பித்தம்னு அர்த்தம்.. ஈஸியா குறைப்பது எப்படி?
பித்தம் என்பது கல்லீரலில் மஞ்சள் நிறத்தில் சுரக்கின்ற ஒரு வகை திரவம் ஆகும். உடலில் இன்றியமையாத வேலையை பித்த நீர் செய்கின்றது. பித்த நீரானது உடலில் சமநிலையில் இருக்க வேண்டும். ஏனெனில் இதுதான் செரிமான மண்டலத்தை முறையாக செயல்பட பெரிதும் உதவுகின்றது. பித்த நீர் சீராக இருந்தால்தான் செரிமான மண்டலமும், நோய் எதிர்ப்பு மண்டலமும் சிறப்பாக செயல்படும். இதற்கு சரியான உணவு முறையை பின்பற்றுவது அவசியம். இத்தகைய சூழ்நிலையில், உடலில் பித்தம் அதிகரிப்பதற்கான காரணங்கள்? மற்றும் அதை எப்படி கண்டுபிடிப்பது? அதற்கான தீர்வுகள் என்ன என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்..
இதையும் படிங்க: உண்மையில் பித்தம் ‘வில்லன்’ கிடையாது- அது ஒரு ’ஹீரோ’
உடலில் பித்தம் அதிகமானால் தோன்றும் அறிகுறிகள்:
உடலில் பித்தம் அதிகரித்தால் பல அறிகுறிகள் தோன்றும். அவை : அஜீரணக் கோளாறு, நெஞ்செரிச்சல், சருமத்தில் எரிச்சல் அல்லது அரிப்பு, அதிகமாக வியர்ப்பது மற்றும் தாகம் எடுப்பது, டயரியா, மலச்சிக்கல், குமட்டல், வாந்தி, அடிக்கடி தலைசுற்றல், வாய்வு பிரச்சனை, பாதம் மற்றும் உதடுகளில் வெடிப்பு, உள்ளங்கை மற்றும் உள்ளங்கள் வறட்சி, மேல் வயிற்றில் அசெளகரியம் அல்லது வலி, பசி எடுக்காது, வாய் காசப்பாக இருக்கும், கண் மற்றும் பாத எரிச்சல், செரிமான பிரச்சினைகள் ஆகியவை ஆகும்.
இதையும் படிங்க: வெயில் கால பித்த நோய்களை விரட்டும்.. எலுமிச்சை பழத்தின் மகிமைகள் தெரியுமா?
பித்தம் அதிகரிப்பதற்கான காரணங்கள்:
- உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருந்தால் உடலில் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படும். இதனால் உடலில் பித்தம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
- முக்கியமாக தினமும் அளவுக்கு அதிகமாக டீ அல்லது காபியை குடித்தால் பித்தம் அதிகரிக்கும்.
- அதுபோல ஆல்கஹால் மற்றும் சிகரெட் பிடித்தல் போன்ற மோசமான பழக்கங்களாலும் உடல் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, பித்தமும் அதிகரிக்கும்.
- தினமும் சரியாக தூங்காமல் அதிக நேரம் கண்விழித்து இருந்தாலும் உடலில் பித்தம் அதிகரிக்கும்.
- இறைச்சி உணவுகள், காரம் மற்றும் புளிப்பு உணவுகளை அடிக்கடி அதிகமாக எடுத்துக் கொண்டாலும் உடலில் பித்தம் நீர் அதிகமாக சுரக்க வாய்ப்பு உள்ளது.
உடலில் அதிகரித்த பித்தத்தை குறைக்க சில வழிகள் இங்கே:
1. சமச்சீர் உணவு : எல்லா வகையான ஊட்டச்சத்துக்களும் நிறைந்த சமச்சீர் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியம். குறிப்பாக, கசப்பு மற்றும் இனிப்பு தன்மை கொண்ட உணவுகளை எடுத்துக் கொண்டால் உடலில் பித்தத்தின் அளவை குறைக்க முடியும் என்று ஆயுர்வேதம் சொல்லுகின்றது.
2. வேலைக்கு இடையில் ஓய்வெடுங்கள்: உங்களுக்கு பித்தம் அதிகமாக இருந்தால், நீங்கள் கம்ப்யூட்டரில் வேலை செய்யும் நபராக இருந்தால், அடிக்கடி சிறிது நேரம் வேலைக்கிடையில் ஓய்வெடுப்பது ரொம்பவே முக்கியம். இது உடலில் பித்தம் அதிகரிப்பதை குறைக்கும் மற்றும் மனதை அமைதிப்படுத்தும். இதற்கு நீங்கள் 10 நிமிடம் நடக்கலாம், இசை கேட்கலாம் அல்லது உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்யுங்கள்.
3. யோகா : காலை மாலை என இரண்டு வேளையும் யோகாசனம் செய்தால் பித்தத்தை சமநிலைப்படுத்த முடியும். ஏனெனில், சில குறிப்பிட்ட யோகாசனங்கள் உடலில் பித்தத்தின் அளவை சமநிலையில் வைத்திருக்கும்