மூளையை '1' நிமிடத்தில் சுறுசுறுப்பாக்கும் 'சூப்பர்' யோகா தெரியுமா?
Brain Yoga : மூளையின் செயல்திறனை அதிகப்படுத்தி சுறுசுறுப்பாக வைத்திருக்கும் யோகாசனங்கள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மூளையை '1' நிமிடத்தில் சுறுசுறுப்பாக்கும் 'சூப்பர்' யோகா தெரியுமா?
நாம் காலை விழித்ததும் செய்யும் செயல்கள்தான் அன்றைய நாளை தீர்மானிக்கின்றன. நீங்கள் மகிழ்ச்சியாக நாளை தொடங்கினால் அன்றைய நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்கும். அதிலும் நம்முடைய மூளை தான் அன்றாட வேலைகளை செய்வதில் முக்கியமான பங்கு வகிக்கிறது. நாம் நினைப்பதற்கு, கேட்பதற்கு பதிலளிக்கவும், சொல்வதை புரிந்து கொள்ளவும், உணரவும் மூளையின் ஆரோக்கியம் மிகவும் அவசியமாகும். இதயம், கல்லீரல், நுரையீரல், போன்றே நம்முடைய மூளைக்கும் தினசரி நடவடிக்கைகளுக்கு தேவையான சத்தும், ஆற்றலும் தேவை. ஆனால் மற்ற உறுப்புகளை கவனித்துக் கொள்ளும் அளவிற்கு நாம் மூளையைக் குறித்து சிந்திப்பதில்லை.
மூளை செயல்பாட்டை மேம்படுத்தும் யோகாசனம்
நாள்தோறும் உடற்பயிற்சி செய்வது மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். மூளையின் சிந்திக்கும் பகுதியை சிறப்பாக தூண்ட உடற்பயிற்சி அவசியம். அதிலும் யோகாசனங்கள் நம்முடைய ஆற்றலையும் செயல்பாட்டையும் மேம்படுத்த உதவுகின்றன. யோகா உடலின் உள்ளே உள்ள சக்தியையும், செயல்பாட்டையும் மேம்படுத்தும். மன அழுத்தத்தைக் குறைத்து மூளையின் செயல்திறனை அதிகப்படுத்துகிறது. இந்த பதிவில் மூளையும் செயல்பாட்டை மேம்படுத்தும் யோகாசனம் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
பிராணயாமம்:
திறமையான மூளைக்கு சிறந்த பயிற்சி என்றால் அது ஆசனங்களும், பிராணயாமமும் தான். பிராணயாமம் செய்ய இடது நாசி வழியாக சுவாசிக்க வேண்டும். இதனால் வலது மூளை துரிதமாக செயல்பட தூண்டப்படுகிறது. இதனால் நேர்மறையான பலன்கள் கிடைக்கும்.
பிரமாரி பிராணயாமம் (Bee Breathing)
பிரமாரி பிராணயாமம் செய்வதால் நம்முள் இருக்கும் தேவையில்லாத கோபம், கிளர்ச்சி, விரக்தி, பதட்டம் ஆகிய எதிர்மறை உணர்ச்சிகள் வெளியேறும். நினைவாற்றல் மேம்படும். தன்னம்பிக்கை அதிகமாகும்.
சர்வதங்காசனம் (Shoulder Stand)
ஆளுமை ஹார்மோனான தைராய்டு, பாராதைராய்டு ஆகிய சுரப்பிகளின் செயல்பாட்டை சீராக்கும். இந்த ஆசனம் செய்வதால் அதிகமான இரத்தம் மூளையில் உள்ள பினியல் சுரப்பிக்கும், ஹைபோதாலமஸுக்கும் செல்கிறது. எல்லா அறிவாற்றல் செயல்பாடுகளும் மேம்படுகின்றன.
பசிமோத்தனாசனம் (Seated Forward Bend)
முதுகெலும்பை வலுப்படுத்துவதோடு மன அழுத்தத்தைக் குறைக்க சிறந்த ஆசனம். உங்களுடைய ஆற்றலை வீணாக்கி முன்னேறாமல் தடுக்கும் எரிச்சல், கோபம் ஆகிய எதிர்மறை உணர்ச்சிகள் நீங்கும்.
இதையும் படிங்க: எடையை குறைக்கும் எளிய வழி.. தினமும் '5' நிமிடங்கள் போதும்!!
ஹலாசனம் (Plow pose):
அனைத்து செயலுக்கும் காரணமான மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த இந்த ஆசனம் உதவுகிறது. நரம்பு மண்டலத்தை சமநிலை செய்கிறது.
முதுகு, கழுத்தை வலுபடுத்தி மன அழுத்தம், சோர்வைக் குறைக்கும்.
இதையும் படிங்க: ஆரோக்கியமற்ற தொப்பையை குறைக்கும் '2' ஆசனங்கள்!!
சேது பந்தசனா (Bridge Pose)
கழுத்து, முதுகெலும்புக்கு நல்ல பயிற்சி. உங்களுடைய இறுக்கமான தசைகளை தளர்த்தி மூளைக்கு இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. மூளையையும், நரம்பு மண்டலத்தையும் சாந்தப்படுத்தும். உங்களை துவண்டு போகச் செய்யும் உங்களுக்குள் இருக்கும் பதட்டம், மன அழுத்தம், மனச்சோர்வு குறைகிறது.
மூளைக்கான சூப்பர் யோகா:
மூளைக்கான சூப்பர் யோகா என தோப்புக்கரணத்தை சொல்கிறார்கள். இந்த பயிற்சி மூளையின் இடது, வலது பக்கங்களை செயல்பட வைக்கிறது. இதனால் மூளை சுறுசுறுப்பாகும். சிந்தனைத் திறன் மேம்படும். அறிவாற்றலும், படைப்பாற்றலும் மேம்படும். கவனம், செறிவு, நினைவாற்றல் அதிகமாகும். மேம்படுத்துதல். குழப்பமின்றி முடிவெடுக்கும் திறன் மேம்படுகிறது. முதலில் கைகளை பக்கவாட்டில் வைத்து நேராக நிமிர்ந்து நில்லுங்கள். உங்களுடைய இடது கையை உயர்த்தி வலது காது மடலை கட்டைவிரல், ஆள்காட்டி விரலால் பிடிக்க வேண்டும். இப்போது கட்டைவிரல் முன்னால் இருப்பதை உறுதிபடுத்துங்கள். இதைப் போல வலது கையால் இடது காது மடலை பிடித்து கொள்ள வேண்டும். இப்படி பிடிக்குன்போது வலது கை, இடது கையின் மேலே இருக்க வேண்டும். இப்போது மூச்சை உள்ளே இழுத்துவிட்டு கீழே அமரும் நிலைக்கு வந்து 2 முதல் 3 வினாடிகள் அதே நிலையில் இருங்கள். பின் எழுந்து மூச்சை வெளியேவிடுங்கள். இப்படி தினமும் 15 தடவை செய்ய வேண்டும்.