MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • எடையை குறைக்கும் எளிய வழி.. தினமும் '5' நிமிடங்கள் போதும்!! 

எடையை குறைக்கும் எளிய வழி.. தினமும் '5' நிமிடங்கள் போதும்!! 

Yoga Asanas For Weight Loss : உடலின் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தி அதிக கலோரிகளை எரித்து உடல் எடையை குறைக்கும்  7 யோகாசனங்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்.  

2 Min read
Author : Kalai Selvi
Published : Feb 11 2025, 08:08 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
எடையை குறைக்கும் எளிய வழி.. தினமும் '5' நிமிடங்கள் போதும்!!

எடையை குறைக்கும் எளிய வழி.. தினமும் '5' நிமிடங்கள் போதும்!!

யோகாசனங்கள் உடலுக்கு நெகிழ்வுத்தன்மை அளிப்பதோடு வலிமையை தருகிறது. அது மட்டுமின்றி மன ஆரோக்கியத்தை மேம்படுத்தி ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்தும் ஆற்றலும் யோகாவிற்கு உண்டு. தினமும் சில யோகாசனங்களை செய்து வந்தால் உங்களுடைய   வளர்சிதை மாற்றம் அதிகரிக்கும். இதனால் அதிகமான ஆற்றல் செலவிடப்பட்டு எடை குறைய வாய்ப்புள்ளது.  இந்த பதிவில் எளிதில் எடையை குறைக்க உதவும் ஆசனங்களை பார்க்கலாம். 

29
சூரிய நமஸ்காரம்;

சூரிய நமஸ்காரம்;

இந்த ஆசனம் உடலில் உள்ள அனைத்து தசைகளையும் வலுப்படுத்த உதவுகிறது நீங்கள் சூரிய நமஸ்காரத்தை தினமும் செய்யும் போது ஒட்டுமொத்த உடலையும் பயிற்சியில் ஈடுபடுத்துகிறீர்கள். இந்த ஆசனம் இதயத் துடிப்பை அதிகரிக்கும். இதனை செய்யும்போது சுவாசத்தில் கவனம் கொள்ள வேண்டும்.  ஆழமான சுவாசத்துடன் செய்யும்போது உடலின் ஆக்ஸிஜன் நுகர்வு அதிகமாக இருக்கும். அதிக கலோரிகள் எரிக்கப்பட்டு வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரித்து எடையை குறைக்கும்.  இந்த ஆசனத்தின் ஒவ்வொரு படிநிலைகளும் ஒவ்வொரு பயிற்சியாகும். வெறுமனே சூரிய நமஸ்காரம் மட்டும் 20 முறை நீங்கள் செய்துவந்தால் கணிசமான அளவில் எடை குறைக்கலாம். 

39
சதுரங்க தண்டசனா:

சதுரங்க தண்டசனா:

உடலின் மையதசைகள், கைகள், கால்களை ஈடுபடுத்தும் ஆசனமாகும். இதை செய்யும்போது கவனம் அதிகரிக்கும். நீண்ட நேரம் இந்த ஆசனம் செய்தால் உடலுக்கு சமநிலை கிடைக்கும். தசையை வலுப்படுத்தும். இது உங்களுடைய கூன் தோற்றம் மாறி மிடுக்கான தோரணையை தரும் ஆசனமாகும்.  

49
வீரபத்ராசனா:

வீரபத்ராசனா:

வீரபத்ராசனா I, II, III ஆகிய மூன்று நிலைகள் கீழ் உடல் வலிமையை (Lower body) அதிகரிக்க உதவுகிறது. மைய தசைகளை வலுவாக்குகின்றன. நீங்கள் ஓய்வெடுக்கும்போது கூட எடையை குறைக்க இந்த ஆசனம் உதவுகிறது. தசைகளுக்கு நல்ல பயிற்சி. வளர்சிதை மாற்றத்தை ஓய்விலும் அதிகரித்து எடையை குறைக்கிறது. 

59
புஜங்காசனம்:

புஜங்காசனம்:

பாம்பு போன்று படமெடுத்து நிற்கும் வகையிலான இந்த யோகாசனம் முதுகை நன்கு வளைக்கும் பயிற்சியாகும். இதனால் வயிற்று தசைகளில் இயக்கம் அதிகமாக உள்ளது. செரிமானத்தை மேம்படுத்தி வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். முதுகு தசைகளை வலுப்படுத்தும் பயிற்சியாகும். மைய தசைகள் வலுவாக்குவதோடு தோரணையை மேம்படுத்தும். 

69
அதோ முக ஸ்வானாசனம்:

அதோ முக ஸ்வானாசனம்:

இந்த ஆசனத்தை டவுன் டாக் (down dog position) என்றும் சொல்வார்கள். கைகளை ஊன்றி தலையை கீழ்நோக்கி வைத்து நாய் போல நிற்கும் நிலையாகும். இதில் கைகள், தோள்கள், கால்கள், மைய தசைகள் ஈடுபடுகின்றன. உடலை வலுவாக்கி எடையை குறைக்க நல்ல பயிற்சியாகும்.  

இதையும் படிங்க:  ஈஸியா உடல் எடை குறைக்கணுமா? ஜப்பானியர்களின் இந்த 5 ஸ்லிம் சீக்ரெட்டை டிரை பண்ணுங்க

79
நவாசனம்:

நவாசனம்:

படகு போன்ற நிலையில் நிற்கும் இந்த போஸ் உங்களின் வயிற்று தசைகளை குறைக்க உதவும். தொப்பையை குறைக்க இந்த ஆசனம் நல்ல தேர்வாகும். படகு போன்ற போஸ் செய்யும்போது உடலின் மைய பகுதி இறுக உதவும். உங்களுடைய தோரணையை மாற்ற உதவுகிறது.  உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும். வளர்சிதை மாற்றத்தை அதிகப்படுத்தி   அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது. 

இதையும் படிங்க:  வெறும் வாக்கிங்ல எடையை குறைக்கனுமா? நடக்குறப்ப இந்த '1' ட்ரிக் பண்ணா போதும்!! 

89
ஹலாசனம்:

ஹலாசனம்:

தலைகீழ் ஆசனமான இது தைராய்டு சுரப்பியைத் தூண்டக் கூடியது.  வளர்சிதை மாற்றத்தை சீராக்குவதில் தைராய்டு சுரப்பி முக்கிய பங்கு வகிக்கிறது. வயிற்று தசைகளுக்கு நல்ல பயிற்சி.   செரிமானத்திற்கும் தூண்டப்பட்டு வளர்சிதை மாற்றம் அதிகரிக்கிறது. 

 

99
யோகாசனங்கள்

யோகாசனங்கள்

யோகாசனங்களை தினமும் செய்யும்போது உங்களுடைய எடை குறைப்பு பயணத்தில் நல்ல மாற்றங்களை காண முடியும். இவை எடை குறைக்க மட்டுமின்றி தசை வலிமை, இதய ஆரோக்கியம் உள்ளிட்ட பல்வேறு நன்மைகளையும் தருகின்றன. மன ஆரோக்கியம், உடல் ஆரோக்கியம் இரண்டிற்குமே  யோகாசனங்கள் நல்ல பலன்களை தரக்கூடியது.  ஆனால் சரியான உணவு பழக்கமும், நிலைப்புத்தன்மையும் மட்டுமே பலன்களை பெற்றுத் தரும். வெறும் யோகாசனங்களால் முழு பலன்களையும் பெற முடியாது. அவற்றை சரியான நிலையில், வடிவத்தில் செய்வதும் அவசியம். இதற்கு முன் நீங்கள் யோகா பயிற்சி செய்ததில்லை எனிக் நன்கு யோகா தெரிந்த ஒருவரிடம் கற்றுக் கொள்ளுங்கள் அல்லது பயிற்சியாளரை அணுகுவது நல்லது.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
உடல் எடை குறைப்பு குறிப்புகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
டயட்டில் இருப்பவரா நீங்கள்.? வெள்ளை அரிசி vs பழுப்பு அரிசி – எது எடை குறைக்க உதவும்?
Recommended image2
5 வயது குழந்தை முதல் 75 வயது முதியவர் வரை… தினமும் எவ்வளவு நேரம் நடக்க வேண்டும்?
Recommended image3
பாகிஸ்தானில் மக்களை கொல்லும் 600,000 மருத்துவர்கள்... கட்டுக்கடங்காத மரண வியாபாரிகள்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved