- Home
- உடல்நலம்
- Coffee and Fatty Liver : காலை 'காபிக்கு' இவ்வளவு பவரா? மரணத்தையே தடுக்கும்; ஆய்வில் புது தகவல்!!
Coffee and Fatty Liver : காலை 'காபிக்கு' இவ்வளவு பவரா? மரணத்தையே தடுக்கும்; ஆய்வில் புது தகவல்!!
தினமும் காபி குடிப்பவர்களுக்கு கொழுப்பு கல்லீரல் பிரச்சனை தாக்கம் குறைகிறது. அதனால் ஏற்படும் இறப்பு அபாயம் 49% குறைகிறது.

இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன், எடின்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு ஒன்றை நடத்தினர். அதில் காபி குடிப்பது கல்லீரல் நோய்க்கான அபாயத்தைக் குறைக்கும் வாய்ப்புள்ளது என கண்டறிந்தனர். இந்த ஆய்வு முடிவுகள் பிம்சி (BMC) பொது சுகாதார இதழில் வெளியானது.
ஆய்வின் தகவல்கள்
நம் உடலில் மிகப்பெரிய செரிமான உறுப்பு கல்லீரல் தான். இது நம்முடைய வளர்சிதை மாற்றம், செரிமானம், நோயெதிர்ப்பு செயல்பாடுகளில் இன்றியமையாத பங்கு வகிக்கிறது. காஃபின் கலந்த அல்லது காஃபின் நீக்கப்பட்ட எந்த காபி குடித்தாலும் அது கல்லீரல் நோய், அதன் தொடர்புடைய கல்லீரல் பாதிப்புகளை குறைக்கும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எவ்வகை காபியும் குடிக்காமல் இருப்பதை விட காபி குடிப்பது நாள்பட்ட கல்லீரல் நோயால் இறக்கும் அபாயத்தைக் குறைக்கிறது.
இந்த ஆய்வுக்காக காபி அருந்தும் 495,585 பேரிடம் தகவல்கள் பெறப்பட்டன. இவர்கள் சராசரியாக 10.7 ஆண்டுகளுக்கும் மேல் கண்காணிக்கப்பட்டனர். இவர்களுக்கு நாள்பட்ட கல்லீரல் நோய், அதன் தொடர்புடைய கல்லீரல் பாதிப்புகள் ஏற்பட்டதா என ஆய்வு செய்யப்பட்டது. இத ஆய்வில் சுமார் 78% பேர் (384,818) ஏதேனும் ஒரு வகை காபியை குடித்தவர்கள். மீதம் 22% பேர் (109,767) காபி அருந்துவதில்லை. இந்த ஆய்வில் 3,600 நாள்பட்ட கல்லீரல் நோய்கள் பதிவாகின. இதில் 301 பேரின் மரணமும் அடங்கும். இது தவிர 5,439 பேருக்கு கல்லீரலில் கொழுப்பு படிதல் நோய், கல்லீரல் புற்றுநோய் 184 பேருக்கும் பதிவாகின.
தினமும் காபி
தினமும் காபி குடிப்பவர்களுக்கு கல்லீரல் நோய்க்கான ஆபத்து 21% குறைவாக இருந்தது. காபி குடிக்காதவர்களுடன் ஒப்பிடும்போது, நாள்பட்ட கல்லீரல் நோயால் உயிரிழக்கும் ஆபத்து இவர்களுக்கு 49% குறைவாகவே இருந்தது. குறிப்பாக அரைத்த காபி அருந்தியவர்களுக்கு அதிகபட்ச நன்மைகள் கிடைத்தன.