சூட்டுக்கு வரும் வயிற்றுப்போக்கு குணமாக '6' வீட்டு வைத்திய குறிப்புகள்
கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்கத்தால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் குணப்படுத்த 6 சிம்பிள் வீட்டு வைத்தியம் முறைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Summer Tips
Home Remedies For Diarrhea in Summer : கோடைகாலத்தில் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் சில சமயங்களில் சிலருக்கு செரிமான பிரச்சனை, வாயு பிரச்சனை, வயிற்று உப்புசம், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு போன்ற பல பிரச்சனைகள் ஏற்படலாம். அதிலும் குறிப்பாக வயிற்றுப்போக்கு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் உடல் சூடு, அலர்ஜி, உடலுக்கு ஏற்காத உணவுகள் போன்ற பல காரணங்கள் உள்ளன. சரி இப்போது கோடை வெப்பத்தால் ஏற்படும் வயிற்றுப்போக்கை சமாளிக்க உதவும் சில எளிய வீட்டு வைத்திய முறைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
Summer Tips
தயிர்:
கோடை வெப்பத்தால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் அதை சமாளிக்க தயிர் சாப்பிடுவது ரொம்பவே நல்லது. ஏனெனில் தயிரில் புரோபயாடிக் உள்ளது. இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு பிரச்சனையை சரி செய்யவும் உதவுகிறது.
Summer Tips
எலுமிச்சை நீர்:
இதற்கு ஒரு கிளாஸ் தண்ணீரில் சிறிதளவு எலுமிச்சை சாறு, உப்பு மற்றும் சர்க்கரை கலந்து குடித்து வந்தால் உடலை நீரேற்றுமாக வைக்க உதவும். முக்கியமாக வயிற்றுப்போக்கால் ஏற்பட்ட நீரிழப்பை சமன்படுத்தும். கூடுதலாக செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், குடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் உதவும்.
Summer Tips
புதினா ஜூஸ்:
கோடை காலத்தில் ஏற்படும் வயிற்றுப் போக்கை சரி செய்ய ஒரு கிளாஸ் புதினா ஜூஸ் குடிக்க வேண்டும். அதாவது புதினா, உப்பு மற்றும் சர்க்கரை கலந்த பானத்தை குடித்து வேண்டும். இந்த ஜூஸ் உடலில் எலக்ட்ரோலைட் அளவை பராமரிக்க பெரிதும் உதவுகிறது.
Summer Tips
இஞ்சி மற்றும் தேன்:
இஞ்சியில் அலற்சி எதிர்ப்பு மற்றும் எண்ணற்ற ஆன்டி-ஆக்சிடென்ட் உள்ளதால் இது வயிற்றில் ஏற்படும் எரிச்சல் உணர்வை தணித்து, வயிற்றுப்போக்கை உடனே நிறுத்த உதவும். இதற்கு ஒரு துண்டு இஞ்சியை எடுத்து அதன் தோலை சீவி மையாக அரைத்து அதனுடன் சிறிதளவு தேன் கலந்து ஒரு ஸ்பூன் சாப்பிட வேண்டும். இதனால் வயிற்றுப்போக்கு நின்றுவிடும்.
இதையும் படிங்க: கோடை வெயிலுக்கு கரும்பு சாறு இவ்வளவு நல்லதா? இனி கண்டிப்பா குடிங்க!
Summer Tips
அரிசி வடித்த நீர்:
கோடைகாலத்தில் ஏற்படும் வயிற்றுப்போக்கை சமாளிக்க அரிசி வடித்த கஞ்சி தண்ணீர் சிறந்த தேர்வாக இருக்கும். இது குடிப்பதன் மூலம் வயிற்றை மென்மையாக்கும். இதை தொடர்ந்து குடித்து வந்தால் விரைவில் வயிற்றுப்போக்கு நிற்க உதவும்.
இதையும் படிங்க: குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் 'மோர்' கொடுக்கலாம்.. 'எதை' கொடுக்கவே கூடாது தெரியுமா?
Summer Tips
பிளாக் டீ:
கோடை வெப்பத்தால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் ஒரு கப் பாக்டீரியில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் வயிற்றுப்போக்கு நின்றுவிடும்.
குறிப்பு : வயிற்றுப்போக்கு இருக்கும் சமயத்தில் தண்ணீரை அடிக்கடி குடிக்க வேண்டும். வீட்டு வைத்திய முறைகள் பின்பற்றியும் வயிற்றுப்போக்கு நிற்காமல் அதிகமானால், உடனே தாமதிக்காமல் மருத்துவர்களிடம் சென்று அதற்குரிய சிகிச்சையை எடுத்துக் கொள்ளுங்கள்.