ஆண்களை விட பெண்களுக்கு அதிக நேரம் தூக்கம் தேவை - ஆய்வில் வெளிவந்த தகவல்!
மனிதர்களுக்கு தினசரி குறைந்தது ஏழு மணி நேரம் அல்லது சராசரியாக 7 முதல் 9 மணி நேரம் தூக்கம் அவசியம் என ஆய்வுகள் கூறுகின்றன. இந்த நிலையில் ஆண்களை விட பெண்களுக்கு அதிக நேரம் தூக்கம் தேவை என சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.ஆண்களை விட பெண்களுக்கு ஏன் அதிக தூக்கம் தேவை?இது குறித்து தூக்கவியல் நிபுணர் மிச்செல்லே டெர்ரப் கூறுகையில், "மனிதர்களுக்கு சராசரியாக 7 முதல் 9 மணி நேரம் தூக்கம் தேவை. ஆனால் ஒவ்வொருவருக்கும் தேவையான தூக்க நேரம் மாறுபடும். ஆரோக்கியமான தூக்கத்திற்காக ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானது. சராசரியாக பெண்கள் தினமும் ஆண்களை விட 11 நிமிடங்கள் கூடுதல் தூக்கம் பெறுகிறார்கள். இது சிறிய எண்ணிக்கை போல தோன்றினாலும், ஆண்கள் மற்றும் பெண்கள் தூங்கும் முறையில் பல வேறுபாடுகள் உள்ளன. பொதுவாக, பெண்கள் தூக்கத்திற்கு பாதகமான பல பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். எனவே, தூக்கத்தின் போது வரும் இடையூறுகளை சமன் செய்ய, அவர்கள் கூடுதல் நேரம் தூங்க வேண்டும்" என்றார். பெண்களின் தூக்கத்தை பாதிக்கும் முக்கிய காரணிகள்: ஹார்மோன் மாற்றங்கள் மனஅழுத்தம் மற்றும் கவலை தூக்கக்குறைபாடு மற்றும் தூக்கக் கோளாறுகள்

1. ஹார்மோன் மாற்றங்கள்:
1. ஹார்மோன் மாற்றங்கள்:
உடலின் உள் நேரம் (Circadian Rhythm) மாறும் போது ஹார்மோன்கள் தாக்கப்படலாம். உடலின் உள் நேரம் என்பது உடலின் 24 மணி நேரச் செயற்பாட்டு முறை ஆகும். இது ஒரு பைலாஜிக்கல் கிளாக் (Biological Clock) போன்று செயல்படுகிறது. இது தூக்கம், விழிப்பு நிலை, ஹார்மோன் உற்பத்தி, உடல் வெப்பநிலை போன்றவற்றை கட்டுப்படுத்துகிறது. அதேபோல், ஹார்மோன்கள் மாற்றமடையும் போது, தூக்கத்தின் தரமும் பாதிக்கப்படும்.
பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி, கர்ப்பம், குழந்தைகளுக்கு பாலூட்டுதல், மாதவிடைவு போன்றவற்றை அனுபவிக்கிறார்கள்.
இதனால் பெண்களின் தூக்கம் பாதிக்கப்படலாம். குறிப்பாக தூங்க செல்வதற்கு அதிக நேரம் ஆகலாம். ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பது குறையும். மாதவிடைவுக்குப் பிறகு, தூக்கக் குறைபாடு அதிகம் காணப்படும்.
2. அதிக மன அழுத்தம்:
2. அதிக மன அழுத்தம்:
மனநலம் மற்றும் தூக்கம் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. தூக்கக்குறைபாடு மனநலப் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். அதேபோல் மனநலப் பிரச்சினைகள் தூக்கக்குறைபாட்டை அதிகரிக்கலாம். ஆண்களை விட பெண்களுக்கு இருமடங்கு அதிகமாக மனஅழுத்தம் மற்றும் மனக்கோளாறு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
3. தூக்கக் கோளாறுகள்:
பெண்களுக்கு அதிக அளவில் தூக்கக் கோளாறுகள் ஏற்படுகின்றன. குறிப்பாக மாதவிடைவுக்குப் பிறகு பெரும்பாலான பெண்களுக்கு அதிகளவில் தூக்கக் கோளாறுகள் அதிகரிக்கின்றன.
தூக்கக் கோளாறை ஏற்படுத்தும் அமைதியற்ற கால்கள் நோய் (RLS - Restless Leg Syndrome), Sleep Apnea போன்ற நோய்கள் ஆண்களை விட பெண்களுக்கே அதிக அளவில் ஏற்படுகின்றன. அமைதியற்ற கால்கள் நோய் (RLS - Restless Leg Syndrome) என்பது ஒரு நரம்பியல் கோளாறு ஆகும். கால்களில் இறுக்கம், முணுமுணுப்பு, நகர்வது போன்று உணர்வது இதன் அறிகுறிகளாகும். இது அதிகமாக இரவு நேரங்களில் அல்லது ஓய்வாக இருப்போது அதிகரிக்கிறது. கால்களை அசைக்கும் வரை இக்குழப்ப உணர்வு நீடிக்கும்.
Sleep Apnea என்பது தூக்கத்தில் சுவாசம் தடைபடும் நோயாகும். இது ஆழ்ந்த தூக்கத்தை பாதிக்கிறது. ஆண்களை விட பெண்களுக்கு இருமடங்கு அதிகமாக ஏற்படுகிறது. மேற்கூறிய காரணங்களால் ஆண்களை விட பெண்களுக்கு அதிக நேரம் தூக்கம் தேவை என தூக்கவியல் நிபுணர் மிச்செல்லே டெர்ரப் கூறுகிறார்.