- Home
- உடல்நலம்
- Late Breakfast : காலை உணவு எப்பவும் லேட்டா? வயதானவர்களின் இந்த ஒரு தப்பு ஆயுளை குறைச்சிடும் தெரியுமா?
Late Breakfast : காலை உணவு எப்பவும் லேட்டா? வயதானவர்களின் இந்த ஒரு தப்பு ஆயுளை குறைச்சிடும் தெரியுமா?
தாமதமாக காலை உணவை சாப்பிடுவது இறப்பு அபாயத்தை அதிகரிப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

Late Breakfast
காலை உணவை பொதுவாக மூளை உணவு என்பார்கள். அது ஒருவருக்கு ஒரு நாளின் முக்கியமான உணவாகும். ஆனால் மாஸ் ஜெனரல் பிரிகாம் வெளியிட்ட புதிய ஆய்வில், காலையில் தாமதமாக சாப்பிடுவது வயதானவர்களுக்கு இறப்பு ஆபத்தை அதிகரிப்பதோடு தொடர்புடையது என தெரியவந்துள்ளது. காலையில் சாப்பிடாமல் இருப்பது போலவே தாமதமான காலை உணவும் ஆபத்துதான். இந்தப் பதிவில் தாமதமான காலை உணவு ஏன் தவறான பழக்கம் என்பதை காணலாம்.
Late Breakfast
வயதானவர்கள் தங்களுடைய ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். வாழ்க்கை முறையிலும், உணவுப் பழக்கத்திலும் எந்த சமரசமும் செய்து கொள்ளக்கூடாது. வயதானவர்கள் உணவுப் பழக்கத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தும் போது அவர்களுடைய ஆயுளைக் கூட குறைக்கும் அபாயம் உள்ளது. குறிப்பாக காலை உணவை சாப்பிடும் நேரம் அவர்களுடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் நிர்மாணிக்க கூடியது என ஆய்வில் தெரியவந்துள்ளது.
Late Breakfast
ஒருவருடைய அடிப்படையான உடல் மற்றும் ஆரோக்கிய பிரச்சனைகளை கண்டறிய முதல் அறிகுறியை உணவு நேர வழக்கங்கள் தான். இதில் மாற்றங்கள் ஏற்படும் போது உடலில் பெரிய பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்த ஆய்வில் காலையில் தாமதமாக உணவு எடுத்துக் கொள்பவர்கள் குறித்து ஆராயப்பட்டது. அதில் தாமதமான காலை உணவு எடுப்பது தொடர்ச்சியாக மனச்சோர்வு, மன அழுத்தம் வாய்வழி சுகாதார பிரச்சனைகள், மோசமான உறக்கம் போன்றவற்றை ஏற்படுத்துவதாக தெரிய வந்தது. தாமதமான உணவை சாப்பிடுவது என்பது இரவு ஆந்தைகளின் குணமாகும்.
Late Breakfast
2018 ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஒரு ஆய்வில் இரவில் சீக்கிரம் தூங்கி காலை சீக்கிரம் எழுந்திருப்பவர்களை விட, தாமதமாக தூங்குபவர்கள் இறக்கும் ஆபத்து அதிகம் என கண்டறியப்பட்டது. 42 முதல் 94 வயதுடைய 20 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களிடம் மேற்கொண்ட புதிய ஆய்வில், தாமதமான காலை உணவு இறப்புக்கான அதிக ஆபத்தை ஏற்படுத்துவதாக தெரிய வந்தது. இது வயதானவர்களிடையே அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது.
Late Breakfast
குறிப்பாக தாமதித்த காலை உணவு சுகாதார பிரச்சனைகளை வயதானவர்களிடையே ஏற்படுத்துகிறது. இது இறப்புடன் தொடர்புடையது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வயதானவர்கள் சரியான நேரத்தில் சாப்பிடுவது அவர்களுடைய ஆரோக்கியத்தை நன்றாக வைத்திருக்க உதவும். நீண்ட ஆயுளை ஊக்குவிக்க வயதானவர்களுக்கு காலை உணவு மட்டுமின்றி மூன்று வேளைகளிலும் சரியான நேரத்தில் உணவு அளிப்பது அவசியமாகும்.