- Home
- உடல்நலம்
- Intermittent Fasting Mistakes : கவனம்! எடையை குறைக்கும் ஆர்வத்தில் பலர் செய்யும் தவறு!! ஒரு தவறால் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் வீணாகும்..
Intermittent Fasting Mistakes : கவனம்! எடையை குறைக்கும் ஆர்வத்தில் பலர் செய்யும் தவறு!! ஒரு தவறால் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் வீணாகும்..
எடையை குறைக்க வேண்டும் என காலை உணவைத் தவிர்ப்பது பல உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்திவிடும். பல நாள்பட்ட நோய்களின் ஆரம்பமாகவும் மாறும் அபாயம்.

உடல் எடை அதிகம் இருப்பது பல நோய்களை கொண்டு வரும். ஆரோக்கியமான உடலுக்கு சரியான எடையை பராமரிப்பது அவசியம்தான். ஆனால் அதற்காக மோசமான வழிகளில் எடையை குறைப்பது நல்லதல்ல. இப்போது இளசுகளிடையே இடைவிடாத உண்ணாவிரதம் (Intermittent fasting) பரவலாகிவருகிறது. ஆனால் இந்த முறையில் பலரும் காலை உணவைத் தவிர்க்கிறார்கள். இது சரியான அணுகுமுறை அல்ல.
அண்மையில் செய்யப்பட்ட ஆராய்ச்சியில் காலை உணவைத் தவிர்ப்பது உயர் இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை அளவில் சீரற்ற நிலை, அதிகப்படியான இடுப்பு கொழுப்பு, இதய நோய், வகை 2 நீரிழிவு நோய் அபாயத்தை அதிகரிப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து காலை உணவை தவிர்ப்பது வளர்சிதை மாற்ற நோய்க்குறியின் ஆபத்தை அதிகரிப்பதாக நியூட்ரிஷன்ஸில் வெளியான மெட்டா பகுப்பாய்வுடன் செய்த புதிய முறையான மதிப்பாய்வு கூறுகிறது.
இடைவிடாத உண்ணாவிரதம் என்ற இண்டர்மிட்டெண்ட் பாஸ்டிங் சாப்பிடுவதற்கும், உண்ணாமல் இருப்பதற்கும் இடையேயான கால இடைவெளியாகும். இதில் 16:8 போன்ற பல பிரபலமான முறைகள் உள்ளது. அதாவது 8 மணி நேரம் சாப்பிட்டு, மணி நேரம் உண்ணாவிரதம் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் 5:2 என்ற அணுகுமுறை. இதில் வாரத்தில் ஐந்து நாட்கள் இயல்பாக சாப்பிடவேண்டும். மீதமுள்ள 2 நாட்களில் மிகக் குறைந்த கலோரிகளை மட்டுமே உண்ணவேண்டும். ஆனால் இதில் காலை உணவை தவிர்க்காமல் கடைபிடித்தால் பிரச்சனை இல்லை. பலரும் காலை உணவை தவிர்த்து மதியம் உண்பதுதான் பிரச்சனையே.
நிபுணர்கள் கூறும் தகவல்களின்படி, இரவு மற்றும் காலை உணவிற்கும் இடையில் இருக்கும் இடைவெளி அதிகம். காலையில் கண்டிப்பாக உண்ண வேண்டும். சாப்பிடாமல் இருந்தால் உடலின் சர்க்காடியன் தாளத்தையும் இன்சுலின் உணர்திறனையும் பாதிக்கும். இதனால் உடல் சர்க்கரை அளவை கையாளுவதில் சிரமம் ஏற்படும். இதனால் காலை உணவை தவிர்ப்போருக்கு அதிக பசி வரலாம். அதிகப்படியான ஆர்வத்தால் ஆரோக்கியமில்லாத உணவுகளை உண்ணலாம்.
ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், நரம்பு மண்டலத்தின் அதிகரித்த செயல்பாடு, வளர்சிதை மாற்ற கோளாறுகள் உடல்நலப் பிரச்சனையை ஏற்படுத்தலாம். ஆகவே உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் காலை உணவை தவிர்க்கக் கூடாது. கண்டிப்பாக சாப்பிட வேண்டும். இரவு உணவை விரைவில் எடுத்துக் கொள்ளலாம். காலை உணவாக புரத உணவுகளான முட்டை, தயிர், பருப்பு வகைகள் இருக்கலாம். முழு தானியங்கள், பழங்கள் அல்லது காய்கறிகள் கண்டிப்பாக இதில் இருக்க வேண்டும்.