MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • Insulin Injection: சர்க்கரை நோயாளிகளுக்கு குட் நியூஸ்.! இனி தினமும் இன்சுலின் போட வேண்டாம்.! வந்தாச்சு புது ஊசி.!

Insulin Injection: சர்க்கரை நோயாளிகளுக்கு குட் நியூஸ்.! இனி தினமும் இன்சுலின் போட வேண்டாம்.! வந்தாச்சு புது ஊசி.!

Insulin Injection: பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான நோவோ நார்டிஸ்க், வாரம் ஒருமுறை எடுத்துக்கொள்ளும் 'அவிக்லி' (இன்சுலின் ஐகோடெக்) என்ற புதிய இன்சுலினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அதுகுறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

2 Min read
Author : Ramprasath S
Published : Jul 13 2026, 02:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Insulin Injection   வாராந்திர இன்சுலின் ஊசி வந்துவிட்டது!
Image Credit : Gemini AI

Insulin Injection - வாராந்திர இன்சுலின் ஊசி வந்துவிட்டது!

சர்க்கரை நோய் சிகிச்சையில் இது ஒரு மிகப்பெரிய மைல்கல். நோவோ நார்டிஸ்க் நிறுவனம், 'அவிக்லி' (இன்சுலின் ஐகோடெக்) என்ற வாராந்திர இன்சுலினை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இப்போது சர்க்கரை நோயாளிகள் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த தினமும் ஒன்று அல்லது இரண்டு முறை இன்சுலின் ஊசி போடுகிறார்கள். இந்த புதிய இன்சுலின், வருஷத்துக்கு 365 முறை ஊசி குத்திக்கொள்ளும் வலியில் இருந்து விடுதலை அளிக்கும்.

இதையும் படியுங்கள் - உங்க மட்டன் பஞ்சு போல வேகணுமா? சாஃப்ட் கறியை ஈஸியா கண்டுபிடிக்க சூப்பர் டிப்ஸ்.! வாங்கும் போதே இதை கவனிங்க.!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
இந்த வாராந்திர இன்சுலின் எப்படி வேலை செய்கிறது?
Image Credit : Getty

இந்த வாராந்திர இன்சுலின் எப்படி வேலை செய்கிறது?

ஏழு நாட்கள் வரை வேலை செய்யும் இந்த புதிய இன்சுலின், உடலில் ஒரு பிரத்யேக முறையில் செயல்படுகிறது. ஊசி போட்டதும், அது ரத்தத்தில் உள்ள 'அல்புமின்' என்ற புரதத்துடன் இணைந்து கொள்கிறது. இந்த இணைப்பு காரணமாக, இன்சுலின் உடலில் இருந்து மிக மெதுவாகவும், சீராகவும் 7 நாட்களுக்கு தொடர்ந்து வெளியாகிறது. இதன் விளைவாக, வாரம் முழுவதும் ரத்த சர்க்கரை அளவு திடீரென ஏறாமல் சீராகக் கட்டுக்குள் இருக்கும்.

இதையும் படியுங்கள் - அமெரிக்காவில் குப்பை அள்ளும் வேலைக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா? கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!

34
வாராந்திர இன்சுலினின் நன்மைகள்
Image Credit : Pinterest

வாராந்திர இன்சுலினின் நன்மைகள்

சர்வதேச மருத்துவ ஆய்வுகளின்படி, இந்த வாராந்திர இன்சுலின் டைப்-1 மற்றும் டைப்-2 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மிகவும் திறம்பட செயல்படுகிறது. இது தினசரி இன்சுலினுடன் ஒப்பிடும்போது, HbA1c அளவை சிறப்பாகக் குறைக்கிறது. மேலும், ரத்தத்தில் சர்க்கரை அளவை நீண்ட நேரம் சரியான வரம்புக்குள் வைத்திருக்க உதவுகிறது. இது ஹைப்போகிளைசீமியா (Hypoglycemia) எனப்படும் ரத்த சர்க்கரை குறைவு அபாயத்தையும் குறைக்கிறது.

இதையும் படியுங்கள் - அலுமினியம் குக்கர் vs ஸ்டீல் குக்கர்.! சமையலுக்கும், ஆரோக்கியத்திற்கும் எது பெஸ்ட்?

44
வாராந்திர இன்சுலின் ஊசி சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம்
Image Credit : Getty

வாராந்திர இன்சுலின் ஊசி சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம்

அலுவலக வேலை அல்லது பயணங்களால் தினமும் இன்சுலின் போட மறப்பவர்களுக்கும், வயதானவர்களுக்கும் இந்த வாராந்திர இன்சுலின் ஒரு வரப்பிரசாதம் என நிபுணர்கள் கூறுகின்றனர். இது சிகிச்சை தடைபடுவதைக் குறைத்து, சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதை இன்னும் எளிதாக்கும். இது நவீன தொழில்நுட்பத்தில் உருவானாலும், மருத்துவரின் ஆலோசனையின்றி யாரும் இதை வாங்கிப் பயன்படுத்தக் கூடாது. நோயாளியின் உடல்நிலையைப் பொறுத்து, மருத்துவர்தான் சரியான மருந்து அளவை பரிந்துரைப்பார்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஆரோக்கியம்
குழந்தைகளில் நீரிழிவு நோய்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ashoka Halwa : நாக்குல பட்டா கரைஞ்சுடும்! திருவையாறு ஸ்பெஷல் அசோகா அல்வா செய்வது எப்படி?
Recommended image2
சூரிய ஒளியில் திரிஷா! 40+ வயதில் வைட்டமின் D ஏன் முக்கியம்? தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்!
Recommended image3
Kulfi : கடையில வாங்க வேண்டாம்! டேஸ்டியான 5 குல்ஃபி ரெசிப்பிகள்.. வீட்டிலேயே ஈஸியா செய்யலாம்!
Related Stories
Recommended image1
Tender Mutton vs Tough Mutton: உங்க மட்டன் பஞ்சு போல வேகணுமா? சாஃப்ட் கறியை ஈஸியா கண்டுபிடிக்க சூப்பர் டிப்ஸ்.! வாங்கும் போதே இதை கவனிங்க.!
Recommended image2
USA Salaries: அமெரிக்காவில் குப்பை அள்ளும் வேலைக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா? கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved