- Home
- Lifestyle
- Tender Mutton vs Tough Mutton: உங்க மட்டன் பஞ்சு போல வேகணுமா? சாஃப்ட் கறியை ஈஸியா கண்டுபிடிக்க சூப்பர் டிப்ஸ்.! வாங்கும் போதே இதை கவனிங்க.!
Tender Mutton vs Tough Mutton: உங்க மட்டன் பஞ்சு போல வேகணுமா? சாஃப்ட் கறியை ஈஸியா கண்டுபிடிக்க சூப்பர் டிப்ஸ்.! வாங்கும் போதே இதை கவனிங்க.!
Tender Mutton vs Tough Mutton: மட்டன் வாங்கும்போது, இளசான மட்டனுக்கும், முத்தின கறிக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்க தெரியுமா? ரப்பர் மாதிரி கறியை வாங்கி ஏமாறாம, வாங்கும்போதே சாஃப்ட் மட்டனை ஈஸியா கண்டுபிடிக்க சூப்பர் டிப்ஸ் இதோ.

Tender Mutton vs Tough Mutton
ஞாயிற்றுக்கிழமை வந்தாலே நான்-வெஜ் பிரியர்களுக்கு கொண்டாட்டம்தான். அதுலயும் மட்டன் குழம்பு இருந்தா, அந்த ஃபீலே தனி. ஆனா, சில சமயம் நாம வாங்குற மட்டன் எவ்வளவு வேக வெச்சாலும் வேகாது. ரப்பர் மாதிரி இருக்கும், சாப்பிடும் போது வாயெல்லாம் வலிக்கும். இதுக்கு காரணம், அது முத்தின ஆட்டோட கறி. மார்க்கெட்ல கறியை பார்த்த உடனேயே அது இளசா, முத்தினதான்னு ஈஸியா கண்டுபிடிக்கலாம். அந்த சிம்பிள் டிப்ஸ் என்னன்னு இப்போ பார்க்கலாம்.
இதையும் படியுங்கள் -Mutton Curry: ஆட்டுக்கறியில் இந்த பாகங்களை சாப்பிடுறீங்களா? அப்போ உங்க ஹெல்த்துக்கு ஆபத்து!
மட்டன் நிறத்தை வைத்தே கண்டுபிடித்துவிடலாம்
மட்டன் வாங்கும் போது நாம கவனிக்க வேண்டிய முதல் விஷயம் அதோட நிறம். இளசான ஆட்டுக்கறி எப்போதுமே லைட் பிங்க் (இளஞ்சிவப்பு) அல்லது லேசான சிவப்பு நிறத்துல பளபளன்னு ஃப்ரெஷ்ஷா தெரியும். அதே வயசான ஆட்டோட கறியா இருந்தா, அடர் சிவப்பு, பழுப்பு கலந்த சிவப்பு அல்லது ஒரு மாதிரி ஊதா நிறத்துல இருக்கும். ஆட்டோட வயசு அதிகமாக ஆக, கறியோட நிறமும் டார்க் ஆகும்.
இதையும் படியுங்கள் -Mutton: ஆட்டுக்கறிக்கு ஏன் 'மட்டன்'-னு பேரு? அப்ப வெள்ளாட்டுக்கறிக்கு என்ன பேரு?
கொழுப்பு மற்றும் கறியின் தன்மையை சரிபார்க்கவும்
கறியில் இருக்கிற கொழுப்பை வைத்தும் இதை கண்டுபிடிக்கலாம். இளங்கறியில் இருக்கிற கொழுப்பு கிரீம் வெள்ளை நிறத்துல, ரொம்ப மென்மையா இருக்கும். கறித்துண்டுகள்ல சமமா பரவி இருக்கும். ஆனா, முத்தின கறியில் இருக்கிற கொழுப்பு கொஞ்சம் மஞ்சள் நிறத்துல, தடிமனாகவும் கெட்டியாகவும் இருக்கும். இளசான மட்டனோட தசைநார்கள் ரொம்ப மிருதுவாகவும், சின்ன சின்னதா நெருக்கமாகவும் இருக்கும். முத்தின கறியோட தசைநார்கள் கயிறு மாதிரி தடிமனாகவும், தனித்தனியாகவும் தெரியும்.
இதையும் படியுங்கள் - Mutton Curry: மட்டன் பஞ்சு மாதிரி வேகணுமா? இந்த ஒரு ட்ரிக் மட்டும் பண்ணுங்க.! ஹோட்டல் டேஸ்ட்ல வரும்.!
எலும்புகளின் அமைப்பை பாருங்கள்
கடையில கறி வெட்டும்போது எலும்புகளை கொஞ்சம் கவனமா பாருங்க. இளங்கறியோட எலும்புகள் சின்னதா இருக்கும். அதோட மூட்டுப் பகுதிகள்ல சிவப்பு, பிங்க் கலந்த நிறத்துல துளைகளோட காணப்படும். ஆனா, வயசான ஆட்டோட எலும்புகள் ரொம்ப தடிமனா, சுண்ணாம்பு மாதிரி வெள்ளை நிறத்துல இருக்கும். பார்க்கவே கெட்டியா, சீக்கிரம் உடையுற மாதிரி தெரியும்.
இதையும் படியுங்கள் - Water Bottle: வாட்டர் பாட்டில் மூடி ஏன் வெவ்வேற கலர்ல இருக்குனு யோசிச்சிருக்கீங்களா? இதுக்கு பின்னாடி பெரிய சயின்ஸ் இருக்கு.!
சமைத்த பிறகு தெரியும் வித்தியாசங்கள்
ஒருவேளை மட்டன் உங்க தட்டுக்கு வந்திருச்சுன்னா, அது இளசா முத்தினதான்னு உங்க பல்லுக்கே உடனே தெரிஞ்சிடும். இளங்கறியை ஸ்பூன் அல்லது ஃபோர்க்கால் குத்தினாலே ஈஸியா பிய்ந்து வரும். வாயில வெச்சதும் ஜூஸியா கரைஞ்சிடும். இது சீக்கிரமா வெந்துடும். அதனால ஃபிரை, கிரில், சாதாரண குழம்புக்கு இது பெஸ்ட். ஆனா, முத்தின கறி ரப்பர் மாதிரி நார் நாரா இருக்கும். எவ்வளவு மென்னு தின்னாலும் வாயிலேயே இருக்கும். குழம்புல எவ்வளவு நேரம் வெந்தாலும், கறி மட்டும் வறண்டு, கட்டை மாதிரி கெட்டியா இருக்கும். இது வேகுறதுக்கு ரொம்ப நேரம் எடுக்கும்.
இதையும் படியுங்கள் - Pressure Cooker: அலுமினியம் குக்கர் vs ஸ்டீல் குக்கர்.! சமையலுக்கும், ஆரோக்கியத்திற்கும் எது பெஸ்ட்?
கெட்டியான கறியை மென்மையாக்க சில ப்ரோ டிப்ஸ்
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

