MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Mutton: ஆட்டுக்கறிக்கு ஏன் 'மட்டன்'-னு பேரு? அப்ப வெள்ளாட்டுக்கறிக்கு என்ன பேரு?

Mutton: ஆட்டுக்கறிக்கு ஏன் 'மட்டன்'-னு பேரு? அப்ப வெள்ளாட்டுக்கறிக்கு என்ன பேரு?

Mutton vs Goat Meat: நாம பொதுவா யூஸ் பண்ற 'மட்டன்' பிரெஞ்சு மொழியில இருந்து வந்த வார்த்தை. ஆனா, இந்தியாவுல செம்மறியாடு, வெள்ளாடு ரெண்டு கறிக்குமே மட்டன்னு தான் சொல்றோம். அப்போ வெள்ளாட்டுக்கறிக்கு என்ன பேரு? வாங்க பார்க்கலாம்.

1 Min read
Author : Ramprasath S
Published : Jul 05 2026, 04:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
மட்டன் என்றால் எந்த ஆட்டின் கறி?
Image Credit : ChatGPT

மட்டன் என்றால் எந்த ஆட்டின் கறி?

ஞாயிற்றுக்கிழமை வந்தாலே அசைவ பிரியர்கள் வீட்ல திருவிழா கோலம்தான். கிச்சன்ல இருந்து வர்ற மட்டன் குழம்பு வாசனை பசியைத் தூண்டும். ஆனா, நாம தினமும் சொல்ற இந்த 'மட்டன்' வார்த்தைக்குப் பின்னாடி ஒரு பெரிய வரலாறே இருக்கு. அது என்னனு தெரியுமா?
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
'மட்டன்' வார்த்தையின் மூலம்
Image Credit : Getty

'மட்டன்' வார்த்தையின் மூலம்

'மட்டன்' ஒரு ஆங்கில வார்த்தைனு நாம நினைக்கிறோம். ஆனா, இதோட மூலம் பிரெஞ்சு மொழி. பழைய பிரெஞ்சு மொழியில 'Mouton' (மௌட்டன்) அப்படின்னா 'செம்மறியாடு'. பிரிட்டனை நார்மன்கள் கைப்பற்றியபோது, இந்த வார்த்தை ஆங்கிலத்துக்குள் வந்து, காலப்போக்குல 'Mutton' (மட்டன்) ஆக மாறிடுச்சு.

Related Articles

Related image1
Mutton Curry: மட்டன் வறுவல் ரப்பர் மாதிரி இருக்கா? இந்த ஒரு ட்ரிக் மட்டும் பண்ணுங்க.! ஹோட்டல் டேஸ்ட்ல வரும்.! ரகசியம் இதோ!
Related image2
Mutton Curry: மட்டன் பஞ்சு மாதிரி வேகணுமா? இந்த ஒரு ட்ரிக் மட்டும் பண்ணுங்க.! ஹோட்டல் டேஸ்ட்ல வரும்.!
36
குடல் கறி - தலைக்கறி
Image Credit : Getty

குடல் கறி - தலைக்கறி

பிரிட்டிஷ்காரங்க இந்தியாவை ஆண்டப்போ, அவங்க செம்மறியாட்டு கறிக்கு பயன்படுத்தின 'மட்டன்'ங்கிற வார்த்தை நமக்கும் பழகிப்போச்சு. அதனாலதான் நாம இன்னைக்கும் செம்மறியாட்டுக் கறியை 'மட்டன்'னு சொல்றோம். நம்ம ஊர்ல கறியை வெட்டுற ஸ்டைலை வெச்சு குடல்-கறி, தலைக்கறி, போன்லெஸ்னு விதவிதமா சொல்ற பழக்கமும் இருக்கு.
46
வெள்ளாட்டுக்கறிக்கு என்ன பெயர்?
Image Credit : Freepik

வெள்ளாட்டுக்கறிக்கு என்ன பெயர்?

நம்மில் பலருக்கு இருக்கிற குழப்பமே இதுதான். செம்மறியாடு, வெள்ளாடு ரெண்டு கறியையும் மட்டன்னு சொல்றது. ஆனா, வெள்ளாட்டுக்கறிக்கு சர்வதேச அளவுல 'Chevon' (ஷெவான்) அப்படின்னு ஒரு பெயர் இருக்கு. இதுவும் 'Chevre' (ஷெவ்ரே - வெள்ளாடு) என்ற பிரெஞ்சு வார்த்தையிலிருந்து வந்ததுதான். சில இடங்களில் இதை 'Goat Meat'னும் சொல்றாங்க.
56
'லாம்ப்' மற்றும் 'மட்டன்' இடையே உள்ள வேறுபாடு
Image Credit : Gemini AI

'லாம்ப்' மற்றும் 'மட்டன்' இடையே உள்ள வேறுபாடு

வெளிநாடுகள்ல செம்மறியாட்டின் வயதை வெச்சு கறியை ரெண்டு வகையா பிரிக்கிறாங்க. ஒரு வயசுக்கு குறைவான இளம் ஆட்டுக்குட்டி கறியை 'Lamb' (லாம்ப்)னு சொல்வாங்க. இது ரொம்ப சாஃப்டா இருக்கும். ஒரு வயசுக்கு மேலான, வளர்ந்த ஆட்டோட கறியை 'Mutton' (மட்டன்)னு சொல்வாங்க. இதோட சுவை கொஞ்சம் வித்தியாசமா இருக்கும்.
66
இந்தியாவில் எல்லாமே 'மட்டன்'
Image Credit : Getty

இந்தியாவில் எல்லாமே 'மட்டன்'

வெளிநாடுகள்ல செம்மறியாடு, வெள்ளாடு கறிக்கு தனித்தனி பெயர் இருந்தாலும், இந்தியாவுல ரெண்டுக்குமே 'மட்டன்' தான் பொதுவான பெயர். ஹோட்டல், கறிக்கடைன்னு எங்க போனாலும் நாம 'மட்டன்'னு தான் கேட்கிறோம். அடுத்தமுறை நீங்க மட்டன் சாப்பிடும்போது, இந்த சுவாரஸ்யமான தகவலை உங்க நண்பர்கள்கிட்டயும் ஷேர் பண்ணுங்க!

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாழ்க்கை முறை
உணவு
ஆட்டுக்கறி குழம்பு

Latest Videos
Recommended Stories
Recommended image1
Energy Drinks: உங்க குழந்தை எனர்ஜி ட்ரிங்க் குடிக்குதா? நிபுணர்கள் சொல்ற இந்த எச்சரிக்கையை தெரிஞ்சுக்கோங்க!
Recommended image2
Interesting Facts: இடி இடிக்கும் போது மரத்துக்கு கீழ ஏன் நிக்க கூடாதுனு தெரியுமா? தெரிஞ்சிக்க வேண்டிய ஷாக்கிங் உண்மைகள்.!
Recommended image3
Hair Dye Facts : முடிக்கு டை அடிப்பதால் என்னென்ன ஆபத்து வரும்? மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?
Related Stories
Recommended image1
Mutton Curry: மட்டன் வறுவல் ரப்பர் மாதிரி இருக்கா? இந்த ஒரு ட்ரிக் மட்டும் பண்ணுங்க.! ஹோட்டல் டேஸ்ட்ல வரும்.! ரகசியம் இதோ!
Recommended image2
Mutton Curry: மட்டன் பஞ்சு மாதிரி வேகணுமா? இந்த ஒரு ட்ரிக் மட்டும் பண்ணுங்க.! ஹோட்டல் டேஸ்ட்ல வரும்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved