Bad odor problem: உடலில் வியர்வையால் துர்நாற்றம் வீசுகிறதா..? நிரந்தரமாக போக்க இதை மட்டும் செய்தால் போதும்..!
Bad odor problem: வியர்வை துர்நாற்றம் ஏற்பட்ட முக்கிய காரணம் என்ன..? அதை எவ்வாறு அகற்றுவது என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம் காண்போம்.
வியர்வை பெரும்பாலானோருக்கு பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. கோடைக்காலத்தில் உடலில் இருந்து வியர்வை வெளியேறுவது இயல்பானது, ஆனால் இந்த வியர்வையால் சிலருக்கு உடல் துர்நாற்றம் ஏற்படுகிறது. துர்நாற்றம் வீசுவதால், பொது இடங்களில் தர்மசங்கடத்தை சந்திக்க நேரிடுகிறது. இந்த வியர்வை துர்நாற்றம் ஏற்பட்ட முக்கிய காரணம் என்ன..? அதை எவ்வாறு அகற்றுவது என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம் காண்போம்.
உடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்கள் இணைந்து கடுமையான நாற்றத்தை உண்டாக்குகிறது. வியர்வைக்கும், துர்நாற்றத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லையென்றாலும் அவை பாக்டீரியாவுடன் கலந்து துர்நாற்றத்தை உருவாக்குகிறது.
இவற்றை போக்க உடலுக்கு நறுமணம் கொடுக்கும் வாசனை திரவியங்கள், பூச்சுகள் பயன்படுத்துவது எல்லாமே தற்காலிகமானவை ஆகும். கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளில் இருப்பதைப் பயன்படுத்தி இயற்கை முறையில் வாடை போக்குவது நல்லது.
1. வியர்வை நாற்றத்தை போக்க கல் உப்பை பயன்படுத்தலாம். குளிக்கும் தண்ணீரில் கல் உப்பை முழுவதுமாக கரையும் வரை கலக்க வேண்டும். அதன் பிறகு இந்த தண்ணீரில் குளிக்கவும்.
2. வேப்பிலை, புதினா போன்றவை வியர்வை துர்நாற்றத்தை நீக்குவது மட்டுமின்றி, கிருமிகளை அழிக்கவும் பயன்படுத்துகிறது. குளிக்கும் தண்ணீரில் இவற்றை மஞ்சள் தூள் கலந்தும் பயன்படுத்தலாம்.
3. மஞ்சள் தூள் ஒரு சிறந்த கிருமி நாசினி ஆகும். இது உடலில் வியர்வை சுரப்பியில் இருக்கும் கெட்ட பாக்டீரியாக்களை அழித்து வாடையைக் குறைக்கும். தினமும் குளிக்கும் போது, தண்ணீரில் மஞ்சள் தூள், ஜவ்வாது கலந்து குளிக்கவும். இப்படி செய்து வந்தால் துர்நாற்றம் மறையும்.
4. அக்குளில் கடலை மாவு, பாசிப்பருப்பு மாவை தேய்த்து குளித்துவரவும். வாரம் இரண்டு முறை இதனை செய்து வந்தால் விரைவில் வாடை மறையும்.
5. கற்றாழையை எப்போது வேண்டுமானாலும் அக்குளில் தடவி கொள்ளலாம். இது நாள் முழுவதும் வியர்வை வாடையிலிருந்து உங்களைத் தள்ளி வைக்கும்.
6. தக்காளி வியர்வை துர்நாற்றத்தை அகற்ற உதவுகிறது. ஒரு தக்காளியை அரைத்து அதன் சாற்றை எடுத்து, அதில் எலுமிச்சை சாறு கலந்து, குளிக்கும் தண்ணீரில் கலந்து பயன்படுத்தவும்.