தொப்புள் தொற்று தெரியுமா? கோடைகாலத்தில் இப்படி அறிகுறி வந்தா உஷாரா இருங்க!!
Navel Infection : தொப்புளில் வெளிப்படும் சில அறிகுறிகள் நோய்த்தொற்றின் வெளிப்பாடாக இருக்கலாம். அதன் விரிவான விளக்கத்தை இங்கு காணலாம்.

தொப்புள் தொற்று தெரியுமா? கோடைகாலத்தில் இப்படி அறிகுறி வந்தா உஷாரா இருங்க!!
நம்முடைய உடலில் தொப்புள் பகுதி முக்கியமான அங்கமாக கருதப்படுகிறது. ஆனால் நாம் அதற்கு பெரிதும் கவனம் கொடுப்பதில்லை. உடலில் உள்ள மற்ற உறுப்புகளை கவனித்துக் கொள்ளும் அளவிற்கு நாம் தொப்புளை கண்டு கொள்வதில்லை. ஆனால் கேண்டிடா என்ற ஈஸ்ட் தொப்புளில் தொற்றை உண்டாக்கக் கூடும். இந்த பூஞ்சை தோல் தொற்றை தொப்பை பொத்தான் தொற்று என்கிறார்கள். இதை கண்டுகொள்ளாமல் விட்டால் பெரிய பிரச்சனையாக மாறிவிடும்.
தொப்புள் பாதுகாப்பு:
பாக்டீரியாக்கள் பெருக தொப்புள் வசதியான இடமாக உள்ளது. கோடைகாலத்தில் தொப்புளில் படியும் வியர்வை, தூசி, அழுக்கு போன்றவை நாளடைவில் பாதிப்பை உண்டாக்கும். தொப்புளை சுத்தமாக பராமரிக்கவிட்டால் அங்கு பாக்டீரியாக்கள் தொற்று வர வாய்ப்புள்ளது. ஒருவேளை உங்களுக்கு தொற்று ஏற்பட்டு விட்டால் என்னென்ன அறிகுறிகள் மூலம் அதனை கண்டறிய வேண்டும் என்பதை இங்கு காணலாம்.
அறிகுறிகள்:
உங்களுக்கு தொப்புள் தொற்று ஏற்பட்ட பிறகு அந்த இடத்தில் கூச்ச உணர்வு வரக்கூடும். அடிக்கடி அரிப்பு ஏற்படலாம். ஒருவேளை தொற்று தீவிரமாக இருந்தால் சீழ் வடியவும் வாய்ப்புள்ளது. புண் தீவிரமானால் நாளடைவில் துர்நாற்றம் வீசும். வலி, வீக்கம் ஏற்பட்டு நிலைமை மோசமாகும்.
தொப்புளில் தொற்று வரக் காரணம்?
நீங்கள் குளிக்கும் போது தொப்புளை சரியாக சுத்தம் செய்யாவிட்டால் இந்த தொற்று ஏற்படுவதற்கு சாத்தியமுள்ளது. நீங்கள் மற்ற உடலுறவுகளை கழுவி சுத்தம் செய்வது போலவே தொப்புளையும் கட்டாயம் முத்தம் செய்ய வேண்டும் தொடர்ந்து அழுக்கு சேர்வதால் தொப்புள் தொற்று வருவதற்கான ஆபத்து அதிகரிக்கிறது வெறும் அழுக்கு மட்டுமல்ல தொடர்ச்சியாக தொப்புளில் ஈரப்பதம் இருப்பதும் தொற்று ஏற்பட காரணமாக அமைகிறது இந்த தொற்றினை கேண்டிடியாஸிஸ் என்கிறார்கள். இந்த ஈஸ்ட் தொற்றினால் தொப்புளில் சிவப்பாக தடிப்பு உண்டாகலாம்.
யாருக்கு வரும் வாய்ப்புள்ளது?
சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொப்புள் தொற்று வரும் வாய்ப்பு அதிகமாகவுள்ளது. சர்க்கரை நோயினால் ரத்தத்தில் சர்க்கரை நோய் அதிகரிப்பது போலவே பூஞ்சை தொற்று வாய்ப்பையும் அதிகரிக்கிறது. குடலிறக்கம் உள்ளிட்ட அறுவை சிகிச்சை செய்திருப்பவர்களுக்கு தொப்புள் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.
இதையும் படிங்க: Navel Smell: தொப்புள் பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசுவதற்கு என்ன காரணம் தெரியுமா? இதற்கு தீர்வு?
சுத்தம் சுகம் தரும்!
தொப்புளை சுத்தமாக வைப்பது இந்த தொற்றில் இருந்து உங்களை பாதுகாக்கும். எப்போதுமே குளிக்கும் போது தொப்புளையும் சேர்த்து சுத்தம் செய்ய வேண்டும். குளித்த பின்னர் உலர்ந்த டவலால் தொப்புளை துடைத்து ஈரப்பதத்தை நீக்க வேண்டும். தொப்புள் எப்போதும் உலர்ந்த நிலையில் இருப்பது நல்லது. அங்கு ஈரப்பதம் இருந்தால் தொற்று ஏற்படும் வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: பெண்களோட தொப்புளில் ஆமணக்கு எண்ணெய்... இப்படி செய்தால் '5' நன்மைகள் உறுதி!!
தொப்புள் தொற்றை தடுக்க!!
தொப்புளில் தொற்று வராமல் தடுப்பதற்கு அந்த பகுதியில் டீ ட்ரீ ஆயிலை (tea tree oil) பயன்படுத்தலாம். வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவையும் தொப்புள் தொற்றுநோயைத் தடுக்க உதவும். இந்த எண்ணெய்களில் பூஞ்சை காளான், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. உங்களுக்கு தொப்புளில் ஏற்பட்ட தொற்று தீவிரமாக இருந்தால் மருத்துவரை அணுகுவதே சிறந்த தீர்வாக இருக்கும்.