Navel Smell: தொப்புள் பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசுவதற்கு என்ன காரணம் தெரியுமா? இதற்கு தீர்வு?
தொப்புள் துர்நாற்றம் பெரும்பாலும் சுகாதாரமின்மையால் ஏற்படுகிறது. தொப்புள் பகுதியில் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், வலி, வீக்கம், துர்நாற்றம் போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகவும்.
Navel Smell
தொப்புள் பகுதியை சுத்தம் செய்வது எப்படி?
தொப்புள் பகுதியை சுத்தம் செய்யும் போது கவனமாக சுத்தம் செய்ய வேண்டும். இது எளிமையான முறை என்றாலும் சில நேரங்களில் கீறல்கள் ஏற்படும் போது பெரிய பாதிப்புகளை உண்டாக்கலாம். ஏற்படுத்தலாம். குளித்து முடித்ததும் தொப்புள் பகுதிகளில் இருக்கும் ஈரங்களை சுத்தமான காட்டன் துணிகள் கொண்டு சுத்தம் செய்யலாம். குளிக்கும்போதே மெதுவாக தொப்புள் பகுதிகளில் வெதுவெதுப்பான நீர் மற்றும் மென்மையான சோப்பை தேய்த்து குளிக்கலாம். தொப்புள் பகுதியில் பெரும்பாலும் ஈரம் தங்காமல் பார்த்துக் கொள்ளவும். ஏனெனில் ஈரமாக இருக்கும் போது அந்த பகுதியில் பாக்டீரியா தொற்றுகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
Navel Smell Symptoms
கவனிக்கப்பட வேண்டிய அறிகுறிகள்!
தொப்புள் பகுதியில் கீழ்கண்ட அறிகுறிகள் இருந்தால் அதற்கு மருத்துவ கவனிப்பு தேவை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில் அழுக்குகள் வெளியேறுதல், தொப்புள் பகுதிகளில் வீக்கம், சிவந்து காணப்படுதல், அரித்தல், தொடர்ந்து காய்ச்சல், வயிறு பகுதிகளில் கட்டி போன்றவை தீவிர நிலையை குறிக்கும் அறிகுறிகளாகும். இது போன்ற அறிகுறிகளை நீங்கள் கண்டறிந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
navel smell
துர்நாற்றம் வீசுவதற்கான காரணங்கள்
தொப்புள் பகுதிகளை சுத்தமாக பராமரிக்காததன் காரணமாக பெரும்பாலான நேரங்களில் துர்நாற்றம் வீசுகிறது. அந்த சிறிய ஓட்டைகளில் படியக்கூடிய அழுக்குகள் துர்நாற்றம் வீசுவதற்கு முக்கிய காரணமாக உள்ளது. மேலும் பாக்டீரியாக்கள் எளிதில் தோன்றக்கூடிய இடமாக தொப்புள் பகுதி இருக்கிறது. எண்ணெய் பசைகள், இறந்த சரும செல்கள், வியர்வை படிதல், மற்ற அழுக்குகள் போன்றவை இந்த துர்நாற்றத்திற்கு காரணமாக உள்ளன.
navel smell
தொற்று ஆபத்து:
சில நேரங்களில் தொப்புள் பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதற்கு தொற்றுகளும் காரணமாக உள்ளன. ஈரமாக உள்ள தொப்புள் பகுதிகளில் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. மேலும் நீரிழிவு பிரச்சனை உள்ளவர்களுக்கு தொப்புள் பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசக்கூடும். இதனால் தொப்புள் பகுதிகளில் தொற்றுகள் ஏற்படுகின்றன. உங்கள் தொப்புளை சுற்றி சிவந்து அல்லது வீக்கம் இருந்தால் அது அலட்சியப்படுத்த வேண்டாம் இது தொற்றுக்கான அறிகுறியாக இருக்கலாம். அதாவது இது என்னவென்றால், பூஞ்சை, பாக்டீரியா அல்லது ஈஸ்ட் உங்கள் தொப்புக்குள் நுழைந்து தொற்று நோய் ஏற்படுத்தலாம்.
Belly Button Odor
மருத்துவரை எப்போது அணுகலாம்!
தொப்புள் பகுதிகளில் ஏற்படும் துர்நாற்றங்களை எளிதில் சரி செய்து விட முடியும். தொப்புள் பகுதிகளை சுகாதாரமாக பராமரிப்பதே இதற்கு ஒரே வழி. இருப்பினும் உங்களுக்கு தொடர்ந்து காய்ச்சல், தொப்புள் பகுதிகளில் இருந்து திரவம் தொடர்ந்து வெளியேறுதல், நிறமாற்றம், வீக்கமாக இருத்தல், அடிக்கடி வயிற்று வலி, சிறுநீர் கழிக்கும் போது வலி போன்றவை மருத்துவரை அணுகி பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற அறிகுறிகளை காட்டுகிறது. மருத்துவர்கள் சரியாக பரிசோதித்து இதன் நிலையை கண்டறிந்து உங்களுக்கு சிகிச்சைகள் அளிப்பார்கள்.
Clean Belly Button
தொற்று ஏற்படாமல் இருக்க உதவும் குறிப்புகள்!
தொப்புள் பகுதியை சுத்தம் செய்வது ஒரு எளிமையான வழிமுறை தான். கெமிக்கல் கலக்காத சோப்புகளை பயன்படுத்தி சுத்தம் செய்யலாம். காது சுத்தம் செய்யப்கூடிய பட்ஸ் ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள். காட்டன் துணி இருந்தாலும் எடுத்துக்கொள்ளலாம். பருத்தித் துணிகள் அல்லது பஞ்சுகளை வைத்து தொப்புள் பகுதியை மெதுவாக சுத்தம் செய்ய வேண்டும். தொப்புள் பகுதியில் ஈரப்பதம் படாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இறுக்கமான ஆடைகளை தவிர்க்கவும். இவை ஆரம்ப கட்டத்தில் தொப்புள் பகுதியில் வீசக்கூடிய துர்நாற்றத்தை சரி செய்யக்கூடிய வழிமுறைகளாகும்.